Tuesday, February 20, 2018

யோனாவைவிட பெரியவர்!

நாளைய (21 பிப்ரவரி 2018) நற்செய்தி

யோனாவைவிட பெரியவர்!

நாளைய நற்செய்தி வாசகத்தில் தன்னிடம் அடையாளம் கேட்கும் தன் தலைமுறை மக்களைச் சாடுகின்ற இயேசு அவர்களுக்கு 'யோனாவின்' அடையாளம் தருகின்றார்.

யோனா இறைவாக்கினர் நூல் மிகவும் வித்தியாமான நூல். ஏனெனில் இதன் கதாநாயகன் வித்தியாசமானவர். வேண்டா வெறுப்பாக நற்செய்தியை அறிவித்தாலும் இவரின் வார்த்தைகளைக் கேட்கின்ற மக்கள் மனமாற்றம் அடைகின்றனர். யோனா இயேசுவின் சமகாலத்தவருக்கு மிகவும் அறிமுகமான கதைமாந்தராக இருந்திருப்பார். ஆகையால்தான் மக்களுக்கு பரிச்சயமான ஓர் அடையாளத்தை அவர்களுக்குத் தருகின்றார்.

யோனாவைவிட இயேசு இரண்டு விதங்களில் பெரியவராக இருக்கிறார்:

அ. யோனா இரண்டாம் முறைதான் நற்செய்தியை அறிவிக்கின்றார். இயேசுவோ முதல் முறையிலேயே அதைச் செய்கின்றார்.

ஆ. யோனா கடவுளின் இரக்கத்தைக் கடிந்துகொள்கின்றார். ஆனால் இயேசுவோ கடவுளின் இரக்கத்தை மக்களுக்கு வெளிப்படுத்துகின்றார்.

அறிகுறிகள் இல்லாமலேயே யோனாவை அறிந்துகொண்டனர் நினிவே மக்கள்.
அறிகுறி கொடுத்தும் இயேசுவை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர் இயேசுவின் சமகாலத்தவர்.

யோனாவைவிட பெரியவர் இன்று என் அருகில் என்றால் என் எதிர்வினை எப்படி இருக்கிறது?


1 comment:

  1. இயேசு- யோனா இவர்களுக்கான ஒப்பீடலின் இறுதியில் யோனாவை விட இயேசுவே பெரியவர் என்கிறார் தந்தை.இதில் என்ன சந்தேகம்? இறைமகன் மனிதனை விடப் பெரியவராகத்தானே இருக்க முடியும்? அறிகுறி இல்லாமலேயே யோனாவை அறிந்து கொண்ட நினிவே மக்களா? இல்லை அறிகுறி கொடுத்தும் இயேசுவை ஏற்றுக்கொள்ள மறுத்த இயேசுவின் சமகாலத்தவரா? இதில் நான் யார் பக்கம்? "யோனாவைவிடப்பெரியவர் இன்று என் அருகில் என்றால் என் எதிர் வினை எப்படி இருக்கிறது?" யோசிக்க வைக்கிறது தந்தையின் கேள்வி. " இன்று என்னருகில் இருப்பவரை மனத்தால், செயலால் என்னவராக ஏற்றுக்கொள்வதைவிட என் எதிர்வினை வேறு என்னவாக இருக்க முடியும்?"... எண்ணங்களை செயலாற்ற உதவும் ஒரு பதிவிற்காகத் தந்தைக்கு ஒரு சல்யூட்!

    ReplyDelete