Sunday, February 9, 2014

நீங்களே என் வேர்கள்...


ஜென் துறவி ஒருவரிடம் சீடன் ஒருவன் வருகின்றான். 
புதிதாக வந்த சீடன் தோட்ட வேலை பார்க்க அனுப்பப்படுகிறான். 
அந்தச் சீடன் செடிகளுக்குத் தண்ணீர் விடும்போதெல்லாம் 
வேர்களுக்கு விடுவதற்குப் பதில் இலைகளுக்கும், 
பூக்களுக்கும் விட்டுக் கொண்டிருந்தான். 
கொஞ்ச நாளில் செடிகளெல்லாம் வாடிக்கொண்டிருப்பதையும், 
பூக்கள் விழுந்து கிடப்பதையும் காண்கின்ற துறவி, 
'என்ன ஆச்சு செடிகளுக்கு?' என்று கேட்கின்றார். 
'எனக்கு ஒன்றும் தெரியாது. நான் நன்றாகத் தான் தண்ணீர் விட்டேன்!' என்கிறான் சீடன். 
'எங்கே தண்ணீர் விடு பார்ப்போம்!' என்கிறார் துறவி. 
சீடனும் இலைகளுக்கும், பூக்களுக்கும் தண்ணீர் விடுகிறான். 
'வேர்களுக்கல்லவா நீர் விட வேண்டும்' என்று துறவி கேட்டதற்கு 
சீடன் சொல்கிறான்: 'எப்படியும் தண்ணீர் இலைக்குத்தானே வரப்போகின்றது. 
ஆகையால் இலையிலேயே நீர் விடலாமே? 
ஏன் தண்ணீரை வேர்களில் வீணாக்க வேண்டும்!' 
'வேர்களின் விரிவுகளே இலைகள். 
வேர்களன்றி இலைகள் இல்லை. 
வேர்களைச் சார்ந்தே இலைகள் இருக்கின்றன. 
கண்ணுக்குத் தெரிவது மட்டும் பயன்தருபவை அல்ல. 
கண்ணுக்குத் தெரியாமல் மறைந்திருப்பவையே அதிக மதிப்பு கொண்டவை' என்கிறார் துறவி. 
ஞானம் பெற்றான் சீடன்.

என் விவிலிய முதுகலைப் படிப்பின் இரண்டாம் ஆண்டின் முதற்பருவம் இன்று இனிதே நிறைவுற்றது.

"இயேசுவைப் பற்றி அறிதலைவிட இயேசுவை அறிதலே மேன்மை"

என்று இப்பருவத்தில் நான் கற்றுக்கொண்டேன்.

இந்தப் பருவத்தில் உடன் பயணித்த பேராசிரியர்கள், நண்பர்கள், அன்பிற்கினியவர்கள்

அனைவருக்கும் என் நன்றிகள்...

நீங்களே என் வேர்கள்...

1 comment:

  1. Anonymous2/09/2014

    தங்களது இரண்டாம் ஆண்டின் முதற்பருவத்தை இனிதே முடித்ததற்கு எங்களின் உளமார்ந்த வாழ்த்துக்கள்.வேர்களை விட்டு வெகுவாக தொலைவில் இருப்பினும் இந்த வேர்களை முன்வைத்தே நீங்கள் செய்யும் அனைத்துக் காரியங்களுக்கும் பாராட்டுக்கள்.இறைவன் தாங்கள் தொட்டது அனைத்தையும் துலங்கச் செய்வாராக.தங்களின் உள்ளத்து ஆசைகள் அனைத்தையும் நிறைவேற்றுவாராக! மீண்டும் பாராட்டுக்கள்.

    ReplyDelete