Saturday, February 8, 2014

கடக்க கடக்க வெளிச்சம்


ஜென் துறவியிடம் சீடன் ஒருவன் செல்கிறான். 
மாலை நேரம். 
சூரியன் மறைந்து வேகமாக இருட்டிக் கொண்டிருக்கிறது. 
'அந்த மலையைக் கடக்க வேண்டும். ஏதாவது விளக்கு கிடைக்குமா?' கேட்கிறான் சீடன். 
ஒரு லாந்தர் விளக்கைக் கொண்டு வந்து கொடுக்கின்றார் துறவி. 
'மலையோ பெரிது. பாதையோ நீளமானது. இந்தச் சிறிய விளக்கு எப்படிப் போதும்?' கேட்கிறான் சீடன். 
'இந்த விளக்கு உனக்கு பத்தடிகளுக்கு வெளிச்சம் காட்டும். பத்துப் பத்து அடிகளாக எடுத்து வை. 
நீ கடந்து விடலாம். 
நடக்க நடக்க பாதை. 
கடக்க கடக்க வெளிச்சம்'. 
ஞானம் பெறுகிறான் சீடன்.

1 comment:

  1. Anonymous2/08/2014

    "கடுகு சிறுத்தாலும் காரம் போகாது" என்பார்கள்.இத்தனை சிறிய வரிகளுக்குள் எவ்வளவு பெரிய வாழ்க்கையின் த்த்துவத்தை மிக எளிதாக சொல்லிவிட்டீர்கள்.அந்த விளக்கும் அதை ஏந்தும் கரங்களும் கொள்ளை அழகு.மிக்க நன்று.சபாஷ்.

    ReplyDelete