Thursday, April 5, 2018

நான் மீன்பிடிக்கப் போகிறேன்

நாளைய (6 ஏப்ரல் 2018) நற்செய்தி (யோவான் 21:1-14)

நான் மீன்பிடிக்கப் போகிறேன்

நேற்றைய நாள் நற்செய்தியின் பின்புலத்தில் நெருக்கடி மேலாண்மை பற்றி எண்ணினோம். இன்றைய நற்செய்திப் பகுதியானது திருத்தூதர்களின் மற்றொரு நெருக்கடி நிலையை பிரதிபலிக்கிறது.

'இனி உங்களை மனிதர்களைப் பிடிப்பவர்கள் ஆக்குவேன்!' என்று பேதுருவையும், அந்திரேயாவையும் அழைத்தார் இயேசு. ஆனால், இயேசுவின் உயிர்ப்புக்குப் பின், 'நான் மீன்பிடிக்கப் போகிறேன்' என மீண்டும் புறப்படுகிறார் பேதுரு.

இவர் இப்படிச் சென்றதன் காரணம் நமக்குத் தெரியவில்லை.
இயேசுவின் உயிர்ப்பின் மேல் உள்ள நம்பிக்கையின்மையா?
அல்லது வயிற்றுப் பசியா?
அல்லது ஏதாவது ஒன்றில் மூளையை இலயித்துக் கொள்வோம் என்ற ஆதங்கமா?
அல்லது கடல்மேல் உள்ள ஆசையா?
அல்லது தற்கொலை முயற்சியா?

எதற்காக பேதுரு மீண்டும் மீன்பிடிக்கச் சென்றார் என்பது தெரியவில்லை. ஆனால் ஏதோ ஒரு எதிர்மறை உணர்வுதான் அவரை அந்த நிலைக்குத் தள்ளுகிறது.

ஆனால், இங்கே அழகு என்னவென்றால் அந்த எதிர்மறை உணர்வில்தான் இயேசு வெளிப்படுகின்றார். ஆக, நம் வாழ்வின் தோல்விகள் மற்றும் பின்வாங்கல்களில் நம் கரம் பற்றி, 'மீன் ஒன்றும் படவில்லையா?' என்கிறார் இயேசு.

இயேசு பேதுருவைக் கடிந்துகொள்ளவோ, வெறுக்கவோ இல்லை.

மாறாக, அவரின் தாய் உள்ளம், 'பசிக்கிறதா?' என்ற கேள்வியாக இருக்கிறது.

வாழ்வின் எந்த இக்கட்டுக்களிலும் தாயாக வருகிறார் இறைவன்.

2 comments:

  1. Good Reflection Yesu .Indeed god is our Mother. Have a great day ahead

    ReplyDelete
  2. வாழ்வின் எதிர்மறை உணர்வில்தான் இயேசு வெளிப்படுகிறார் என்பதும், நம் வாழ்வின் தோல்விகள் மற்றும் பின் வாங்கல்களில் நம் கரம்பற்றி, " மீன் ஒன்றும் படவில்லையா?" என்று கேட்கிறார் என்பதும் இன்றையப்பதிவின் ஹைலைட்டான வரிகள்.பேதுருவைக்கடிந்து கொள்ளவோ, வெறுக்கவோ இயலாத இயேசுவின் தாயுள்ளம் " பசிக்கிறதா?" எனும் கேள்வியாக மாறுகிறது." வாழ்வின் எந்தக் இக்கட்டிலும் எனக்குத்தாயாக வரும் இயேசு" இருக்கையில் ஏன் கண்ணீரும்,கவலையும் நம் மகிழ்ச்சியைக்கெடுக்க வேண்டும்?. மனத்தை வருடிக்கொடுக்கும் ஒரு பதிவிற்காகத் தந்தை யேசுவை இறைவன் நிறைவாக ஆசீர்வதிப்பாராக!!!

    ReplyDelete