Thursday, April 26, 2018

எங்கே போகிறீர்?

நாளைய (27 ஏப்ரல் 2018) நற்செய்தி (யோவான் 14:1-6)

எங்கே போகிறீர்?

இறுதி இராவுணவில் இயேசுவும் அவருடைய சீடர்களும் பேசிக்கொள்ளும் உரையாடல் நேரம் கூடக்கூட ரொம்ப அப்ஸ்ட்ராக்ட் ஆக இருக்கிறது. திராட்சை ரசம் கொஞ்சம் கூடிடுச்சோ என்று எண்ணத் தோன்றுகிறது.

'நான் போகுமிடத்திற்கு வழி உங்களுக்குத் தெரியும்' என்கிறார் இயேசு.
தோமா ரொம்ப பிராக்டிகலான ஆளு. உடனே குறுக்கிட்டு, 'ஆண்டவரே, நீர் எங்கே போகிறீர் என்றே எங்களுக்குத் தெரியாது. அப்படியிருக்க நீர் போகுமிடத்துக்கான வழியை நாங்கள் எப்படி தெரிந்துகொள்ள இயலும்?' என விசாரிக்கிறார்.
'வழியும் உண்மையும் வாழ்வும் நானே' என்று இன்னும் கொஞ்சம் குழப்பிவிடுகிறார் இயேசு.

'எங்கே போகிறீர்?' - இது நாம் நம் வாழ்வில் பல இடங்களில் நாம் பலரையும், பலர் நம்மையும் கேட்டிருப்போம். 'எங்கே போகிறீர்?' என்ற கேள்வியில் நாம் எங்கிருந்து வருகிறோம் என்பதும் அடங்கியிருப்பதோடு, இந்தக் கேள்வி நம் பயணத்தின் இலக்கையும் குறிக்கிறது.

எல்லாம் நானே என்பதன் வழியாக இயேசு நம்வாழ்வின் இலக்கு என தன்னையே முன்வைக்கின்றார்.

இன்று தோமா இயேசுவைக் கேட்ட கேள்வியை நாமும் நமக்குள்ளே கேட்டுப்பார்ப்போம். அவரை நோக்கி என் பயணம் இருந்தால் எத்துணை நலம்!


2 comments:

  1. " சந்தேகத் தோமா" என்று விளிக்கப்பட்டாலும் அவரின் வழியாக பல உண்மைகள் நமக்கு வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றன." உம்,முடைய விலாவில் நான் என் கைகளை விட வேண்டும்; " நீர் போகுமிடத்துக்கு எப்படி எங்களுக்கு வழி தெரியும்?" போன்ற சம்பாஷனைகள் மூலம் இயேசுவோடு உரையாடுவதில் தனக்கு எந்த இன்ஹிபிஷனும் இல்லை என்பதை மெய்ப்பித்திருக்கிறார்." தோமா. "எல்லாம் நானே!" என்று இயேசு தோமாவுக்குச் சொல்வதையே நமக்கும் பதிலாக எடுத்துக்கொள்வோம்.அவர் போகுமிடத்தை மட்டுமல்ல, அவர் போகும் பயணத்தையும் பின் தொடர்வோம்.தோமாவின் பல முகங்களை நமக்கு வெளிப்படுத்தியுள்ள தந்தைக்கு என் வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  2. Very smart girl admirable. Towards vast horizon and unknown futuew with confidence and expectation .

    ReplyDelete