Wednesday, January 3, 2018

என்னை உமக்கு எப்படித் தெரியும்?

நாளைய (5 சனவரி 2018) நற்செய்தி (யோவா 1:43-51)

என்னை உமக்கு எப்படித் தெரியும்?

நாளைய நற்செய்தி வாசகத்தில் உரையாடல் இயேசு - பிலிப்பு - நத்தனியேல் என்ற மூன்று கதைமாந்தர்களுக்கு இடையே இரண்டு நிகழ்வுகளாக அல்லது இரண்டு தளங்களில் நடக்கிறது.

'என்னை உமக்கு எப்படித் தெரியும்?' என மெய்சிலிர்க்கின்றார் நத்தனியேல்.

'நீ அமர்வது, நடப்பது, சிந்திப்பது, பேசுவது, உணர்வது, கேட்பது என அனைத்தும் நான் அறிவேன்' என எல்லாம் அறிந்தவராய், 'இதைவிட பெரியவற்றைக் காண்பீர்' என்கிறார் இயேசு.

என்னை உமக்கு எப்படித் தெரியும்?

ஒருவருக்கும் மற்றவருக்கும் இடையே உள்ள உறவை வர்ணிக்கப் பயன்படுத்தப்படும் வார்த்தை 'தெரிதல்.' 'தெரிதல்' என்றால் 'நெருக்கம்.'

நத்தனியேல் மற்றவர்களிடம் காட்டும் நெருக்கம் முற்சார்பு எண்ணம் கொண்டதாக இருக்கின்றது. ஆகையால்தான், 'நாசரேத்திலிருந்து நல்லது எதுவும் வர முடியுமோ?' என்று கேட்கின்றார்.

ஆனால், இயேசுவின் தெரிதல் அல்லது நெருக்கம் காணுதல், கேட்டல் ஆகியவற்றைக் கடந்ததாக இருக்கிறது. இந்த நெருக்கமே நத்தனியேலை சரணடையச் செய்கிறது.

இன்று இறைவன் மற்றும் மற்றவர்மேல் காட்டும் என் தெரிதல், நெருக்கம் எப்படி இருக்கிறது? எந்தத் தளத்தில் அது கட்டப்பட்டிருக்கிறது?

2 comments:

  1. "பிலிப்பு உன்னைக் கூப்பிடும் முன்பே நீ அத்தி மரத்தின் கீழ் இருக்கும் போதே உன்னைக்கண்டேன்" என்று கூறிய இயேசுவைக்கண்டு மலைத்தவராய், "நசரேத்திலிருந்து நல்லது எதுவும் வரமுடியுமோ?" எனத்தவறாக இவரைப்பற்றி எடை போட்டுவிட்டோமே என மறுகும் நத்தனியலின் குணத்தை ' முற்சார்பு எண்ணம்' என்று குறிப்பிடுகிறார் தந்தை..அதாவது.... ஒருவரைப் பற்றி சரிவரத்தெரியாமலே அவர்களின் குணாதிசயத்தை எடை போடுவது. ஆனாலும் "காணுதல்,கேட்டல் ஆகியவற்றைக்கடந்ததாக இருக்கும் இயேசுவின் நெருக்கத்தை ஒத்துக்கொண்டு அவரிடம் சரணாகதி அடையும் ந்த்தனியேல் இயேசுவின் பார்வையில. மட்டுமல்ல...நம் பார்வையிலும் உயர்ந்து நிற்கிறார்.இன்று நாம் இறைவன் மற்றும் மற்றவர் மேல் காட்டும் நெருக்கம் எப்படிப்பட்ட தளத்தில் கட்டப்பட்டுள்ளது? தந்தையின் கேள்விக்கு விடை தேடுவோம்;நம்மையே சோதனைக்குட்படுத்துவோம். இயேசு நம்மையும் பார்த்து "இதைவிடப் பெரியவற்றைக் காண்பீர்" என்று சொல்லுமளவுக்கு நம்மைத் தகுதியாக்குவோம்.அழகான,ருசியான அத்திப்பழம் போன்றதொரு பதிவிற்காகத் தந்தைக்கு என் வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  2. என்றுமே ஆண்டவர்!

    ReplyDelete