Tuesday, January 2, 2018

இவர் யாரென்று தெரியாமலிருந்தது

நாளைய (3 ஜனவரி 2018) நற்செய்தி (யோவா 1:29-34)

இவர் யாரென்று தெரியாமலிருந்தது

நாளைய நற்செய்தி வாசகத்தில் திருமுழுக்கு யோவான் இயேசுவைப் பற்றிச் சான்று பகர்கின்றார்.

'இவர் யாரென்று எனக்கும் தெரியாதிருந்தது' என தன் அறியாமையை இரண்டு முறை ஏற்றுக்கொள்கின்றார் திருமுழுக்கு யோவான்.

'யாரென்று தெரியாமல் இருந்த இவருக்கு இயேசு யார் என்று எப்படி தெரிந்தது?' - என்ற கேள்வி நம்முள் எழலாம். இந்தக் கேள்விக்கான விடை நற்செய்தி வாசகத்திலேயே இருக்கிறது. முதலில், திருமுழுக்கு யோவானை அனுப்பியவரின் வார்த்தைகள் இவரை யாரென்று இவருக்குச் சொல்கின்றன. இரண்டு, அவர் காண்கின்ற தூய ஆவி இறங்குகின்ற அடையாளம்.

தனக்குள் உள்ள வெளிப்படுத்துதல் பற்றியும், தனக்கு வெளியே நடக்கும் அடையாளம் பற்றியும் தெளிவாக இருக்கின்றார் யோவான். ஆகையால் அவர் மெசியாவை கடவுளின் ஆட்டுக்குட்டியாக அடையாளம் கண்டுகொள்கின்றார்.

எனக்கு ரோமில் இலத்தீன் கற்றுக்கொடுத்த பேராசிரியர் முதல் நாள் புதிய புத்தகத்தை எல்லார் கையிலும் கொடுத்துவிட்டு, 'இன்று எதிரிகள் போல தெரியும் இந்த புத்தகத்தின் பக்கங்கள் கோர்ஸ் முடியும்போது உங்களுக்கு நண்பர்களாக வேண்டும்' என்றார்.

நண்பர்களாக ஆக்கிக்கொண்டுவிட்டால் அவற்றை அடையாளம் கண்டுகொள்வது எளிது.
ஒருவரைத் தெரிந்துகொள்வதற்கு முதலில் அவரைப் பற்றிய அக்கறை தேவை. அது வந்துவிட்டால் தெரிந்துகொள்வதற்கான நேரமும், இடமும், சூழலும் தானே வந்துவிடும்.

இன்று இறைவனை நான் தெரிந்துகொள்ள அவருக்கான அக்கறை என்னிடம் இருக்கிறதா?

2 comments:

  1. இயேசுவை யாரென்று தெரிந்து கொள்ள முயல்கிறார் திருமுழுக்கு யோவான். இதன் பின்னனியில், நாம் ஒருவரை நண்பராக்கிக் கொள்ளும் முயற்சி பற்றித் தெளிவு படுத்துகிறார் தந்தை.நாம் அக்கறை செலுத்தக்கூடிய யாரையும் தெரிந்து கொள்வதற்கான நேரமும்,இடமும்,சூழலும் தானே வந்துவிடும் என்பதால் ஒருவர் மேல் நாம் காட்டும் அக்கறை மிக முக்கியம்.இந்தக்கருத்தை இன்னும் அழகாக்க தந்தை அவரது பேராசிரியர் பற்றிக்குறிப்பிடும் விஷயம் அழகானது." இன்று எதிரிகள் போல் தெரியும் இந்தப்புத்தகத்தின் பக்கங்கள் கோர்ஸ் முடியும் போது உங்களுக்கு நண்பர்களாக வேண்டும்." எத்தனை பெரிய விஷயத்தை இத்தனை அனாயாசமாகக் குறிப்பிடுகிறார் இந்தப் பேராசிரியர்.அழகானதொரு உறவை உணர்த்தும் வார்த்தைகளுக்காகத் தந்தையையும்,,அவரது பேராசிரியரையும் மனதாரப் பாராட்டுகிறேன்!!!

    ReplyDelete
  2. Dear Yesu, you are an inspiration. Wish you all the best.

    ReplyDelete