Saturday, October 31, 2015

தனித்தன்மை

அக்டோபர் மாதத்தின் இறுதிநாள்.

இந்த மாதம் நான் கட்டளை செபம் செபிப்பதற்குப் பதில், எனக்குப் பழக்கமில்லாத விவிலியப் பகுதிகள், நான் வாசிக்க வேண்டும் என நினைத்து, ஆனால் வாசிக்க முடியாத திருத்தந்தையரின் மடல்கள் இவற்றை வாசிக்க வேண்டும் என நினைத்து ஒரு லிஸ்ட் தயார் செய்து, செபித்துப் பார்த்ததில் இரண்டு விஷயங்கள் கற்றுக்கொண்டேன்:

ஒன்று, கட்டளை செபம் என்பது செபத்தின் ஒரு மாதிரிதான். அதே வடிவத்தைப் பயன்படுத்தி நாம் இன்றைய நடைமுறைக்கு ஏற்ப சேர்த்துக் கொள்ளலாம். உதாரணத்திற்கு, கிளமெண்ட் என்ற போப் எழுதிய பேச்சாற்றல் என்ற கட்டுரையைவிட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் 'லௌதாத்தோ சீ' (சுற்றுச்சூழல் பற்றியது) சவால்விடுவதாக இருக்கிறது.

இரண்டு, 'நாம் கேட்ட இசை சர்க்கரை இனிமையென்றால், கேட்காதவை தேன் இனிமை' என்பது போல, வாசித்த செபங்களைவிட, அறிந்த விவிலியப் பகுதிகளைவிட அறியாதவை இன்னும் ஆழமாக மனதைத் தொடுகின்றன.

'குழல் அல்லது யாழ் ஆகிய உயிரற்ற இசைக்கருவிகளால் எழுப்பப்படும் ஒலிகளுள் வேறுபாடு இல்லையெனில் குழல் எழுப்பும் ஒலி எது, யாழ் எழுப்பும் ஒலி எது என்பதை எப்படி அறிய முடியும்?' (1 கொரி 14:7)

வழக்கமாக 1 கொரிந்தியர் நூலில் நாம் பிரிவு 13 (அன்பைப் பற்றியது) வாசித்துவிட்டு பிரிவு 15 (உயிர்ப்பு பற்றியது)க்கு தாவி விடுகிறோம். இவ்விரண்டிற்கும் இடையில் பிரிவு 14ல் தான் மேற்காணும் அழகான வசனம் வருகிறது.

இந்தப் பிரிவில் பவுல் ஒரு சின்ன பிரச்சினைக்கு தீர்வு சொல்கிறார். அதாவது, இறைவாக்கு உரைப்பது பெரியதா அல்லது பரவசப்பேச்சு பெரியதா என்பதுதான் வாதம். இந்தப் பிரச்சினையை தீர்த்து வைக்கிறார் பவுல்.

அதாவது, ஒவ்வொருவரும் என்ன செய்தாலும் அதைச் சிறப்பாகச் செய்ய வேண்டுமாம்.

இளையராஜா, ரகுமான் என்ற இரு இசைக்கலைஞர்களை எடுத்துக்கொள்வோம்.

இளையராஜா இசையமைப்பதுபோலவே ரகுமானும் அமைக்கிறார் என்றால் இளையராஜா மற்றும் போதுமே. நமக்கு ரகுமான் எதற்கு?

நாம் ஒவ்வொருவரும் தனித்தன்மை பெற்றிருக்கிறோம். அந்தத் தனித்தன்மையை நாம் அறிந்து அதை வெளிப்படுத்த வேண்டும்.

இதைத்தான் நாளை நாம் கொண்டாடும் புனிதர்களும் செய்தார்கள்.

நான் எழுப்பும் ஒலி என்ன என்று கண்டு, அந்த ஒலியைச் சிறப்பாக எழுப்பினால் என் வாழ்வு இனிமையானதே. அடுத்தவர் எழுப்பும் ஒலியைக் குறித்த கவலையோ, அடுத்தவர் எழுப்பும் ஒலியைப் போலவே என் ஒலியும் இருக்க வேண்டும் என்ற ஏக்கமும் எனக்குத் தேவையில்லை.

3 comments:

  1. " தனித்தன்மை".... அழகான விஷயம்.சரியாக ஞாபகமில்லை...யாரோ ஒருவர தன் மகனுக்குக் கொடுத்த அறிவுரை.." நீ கழிப்பறை கழுவபனானாலும் பரவாயில்லை.ஆனால் அதில் நீ தான் உலகிலேயே சிறந்தவன் எனப் பெயரெடுக்க வேண்டுமென்று". இதுதான் தனித்தன்மை.பொதுவாக நம் ஊரில் நமக்கென்று ஒரு பாதையைத் தேர்ந்தெடுக்க பயம்.எதுக்கு வம்பு என நினைத்து ஏற்கனவே பிறர் சென்ற பாதையைத் தெரிந்தெடுத்து ஆட்டுமந்தைக் கூட்டமாகி விடுகிறோம். அவரவர் வழியில் அவரவர் பயணித்தால் இந்த 'ஒப்பீடு' என்பதற்கும் இடமிருக்காதே!"நான் எழுப்பும் ஒலி என்ன என்று கண்டு,அந்த ஒலியைச் சிறப்பாக எழுப்பினால் என் வாழ்வு இனிமையானதே! அடுத்தவர் எழுப்பும் ஒலியைக் குறித்த கவலையோ,அடுத்தவர் எழுப்பும் ஒலியைப்போலவே என் ஒலியும் இருக்க வேண்டும், என்ற ஏக்கமோ எனக்குத் தேவையில்லை". பதிவின் ஆரம்பம் சிறிது புரியாத்து போலத் தோன்றினாலும் அழகான தொரு முடிவு. சகல புனிதர்களின் விழாவைக் கொண்டாடும் இந்நாளில் தம் வாழ்வைப் புனிதமானதொன்றாக ஆக்க முயற்சிக்கும் அத்தனை பேருக்கும் சிறப்பாகத் தந்தைக்கும் என் வாழ்த்துக்கள்! பிறந்திருக்கும் இந்தப் புது மாதம் நமக்கு ஆசீர்வாதங்களை வாரி வழங்கட்டும்!!!

    ReplyDelete
  2. Anonymous11/01/2015

    Good Morning Yesu. Have a nice Sunday. take care.

    ReplyDelete
  3. Dear Father,Good day to you.Thank you very much for saying that every one is Unique.The post "UNIQUENESS" brought lot of meaning in my life.It is very reflective to identify my own "UNIQUENESS" like my talents and my way of living.I hope If I do my ordinary work daily without complaining and murmuring I can attain the saintly life.There stands my "UNIQUENESS".Happy ALL SAINTS DAY.Thank you DEAR FATHER.BLESS ME.

    ReplyDelete