Friday, November 26, 2021

மன்றாடுங்கள்

இன்றைய (27 நவம்பர் 2021) நற்செய்தி (லூக் 21:34-36)

மன்றாடுங்கள்

இன்றுடன் திருவழிபாட்டு ஆண்டு நிறைவு பெறுகிறது. நம்மிடமிருந்து விடைபெறும் இந்த ஆண்டு, 'விழிப்பாயிருந்து மன்றாடுங்கள்' என்ற அழைப்பை நமக்கு விடுத்து நம்மிடமிருந்து கடந்து செல்கிறது.

'குடிவெறி, களியாட்டம், கவலை ஆகியவற்றால் உங்கள் உள்ளம் மந்தம் அடைய வேண்டாம்' என்றும் அறிவுறுத்துகின்றார் இயேசு.

கவலை என்பது நாம் கையில் ஏந்தும் கண்ணாடி கிளாஸ் போல. ஏந்துகின்ற அந்த நொடி நமக்கு ஒன்றும் வலிக்காது. ஆனால், நேரம் செல்லச் செல்ல நம் கையை அது மரத்துப் போகச் செய்யும். கண்ணாடி கிளாஸின் எடை என்னவோ மாறுவதில்லை. நேரம்தான் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. நாம் செய்ய வேண்டியது என்ன? கண்ணாடி கிளாஸை கீழே வைக்க வேண்டியதுதான்.

குடிவெறி மற்றும் களியாட்டம் என்பது நாம் இடம் கொடுக்கும் சின்ன சின்ன இன்பங்கள். நம் உள்ளத்தை நம் உணர்வுகள் வெல்லும் பொழுதுகள் இவை. உள்ளம்தான் எப்போதும் உணர்வுகள்மேல் ஆட்சி செலுத்த வேண்டுமே தவிர, உணர்வுகள் உள்ளத்தின்மேல் அல்ல.

விழிப்பு மனநிலையுடன் கூடிய மன்றாட்டு, நம்மைக் கண்ணியிலிருந்து தப்புவிக்கும்.

இந்த திருவழிபாட்டு ஆண்டு முழவதும் இறைவன் நமக்குச் செய்த நன்மைகளுக்காக, அவர் பொழிந்த அருளுக்காக அவருக்கு நன்றி கூறுவோம்.

1 comment:

  1. திருவழிபாட்டின் இறுதி நாள் இது.நம் இறுதி நாளையும் சேர்த்தே நினைவு கூற வைக்கிறது.” விழிப்பாயிருந்து மன்றாடுங்கள்” எனும் செய்தியைச் சொல்லி நம்மிடமிருந்து விடைபெறுவதாகக் குறிப்பிடுகிறார் தந்தை.
    நம்மை வாட்டும் கவலையை கண்ணாடி கிளாஸுக்கு ஒப்பிட்டு நம் மனவலியும்,கைவலியும் ஒரு சேர நம்மை விட்டு அகல நாம் செய்ய வேண்டியதெல்லாம் அந்த கிளாஸை கீழே வைப்பதுவே.அழகான உருவகம். எத்தனை தான் நாம் கவலையைக் கட்டிப்பிடித்துக்கொண்டு நின்றாலும்,நம்மால் ஒரு முடி கீழே விழுவதைக்கூட தடுக்க முடியாது எனும் பட்சத்தில் கவலை கொள்வதால் என்ன பயன்?
    விழிப்பு நிலையுடன் கூடிய மன்றாட்டு நம்மைக் கண்ணியிலிருந்து தப்புவிக்கும் எனில், உறக்க நிலையிலிருந்து விழித்துக்கொள்ளும் நேரமிது.
    தந்தையுடன் சேர்ந்து இந்தத் திருவழிபாட்டு ஆண்டு முழுவதும் இறைவன் நமக்குச் செய்த நன்மைகளுக்காக, அவர் பொழிந்த அருளுக்காக அவருக்கு நன்றிகூறுவோம்!
    குடுவை சிறிதானாலும்,அது தாங்கி நிற்கும் விலையுயர்ந்த ஒரு திரவத்திற்காகத் தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete