Thursday, December 6, 2018

இதைச் செய்ய முடியும்

இன்றைய (7 டிசம்பர் 2018) நற்செய்தி (மத் 9:27-31)

நான் இதைச் செய்ய முடியும்

'முடியும் என்று சொன்னதாலதான் அமெரிக்காக்காரன் நிலவுக்கு ராக்கெட் விட்டான்.
முடியாது என்று சொன்னதாலதான் நாம இன்னும் நிலாச்சோறு ஊட்டிக்கிட்டு இருக்கும்.

முடியாது என்று சொன்னால் மனுசன் இன்னும் குரங்காவே இருந்திருப்பான்'

- அமைதிப்படை திரைப்படத்தில் வரிகள் இப்படித்தான் இருக்கும்.

'முடியும்' - இது வரலாற்றில் முக்கியமான வார்த்தை.

மீட்பு வரலாற்றில் இது இன்னும் அதிக முக்கியத்துவம் பெறுகிறது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் பார்வையற்றோர் இருவர் இயேசுவிடம் வந்து பார்வைபெறும் நிகழ்வை வாசிக்கின்றோம்:

'தாவீதின் மகனே எங்களுக்கு இரங்கும்'

'நான் இதைச் செய்ய முடியும் என நம்புகிறீர்களா?'

'ஆம் ஐயா!'

'நீங்கள் நம்பியபடியே உங்களுக்கு நிகழட்டும்'

பார்வையற்றவர்கள் பார்வை பெறுகின்றனர்.

கபிரியேல் வானதூதர் மரியாவுக்கு மங்கள வார்த்தை சொன்ன நிகழ்வில், மரியா தூதரிடம், 'இது எப்படி முடியும்? நான் கன்னி ஆயிற்றே' எனத் தயக்கம் காட்டுகிறார். 'கடவுளால்  முடியாதது எதுவும் இல்லை' என்று தூதர் சொன்னவுடன், சரணாகதி அடைகின்றார் மரியா.

'இவரால் முடியும்' என்று பார்வையற்றவர் நினைத்ததால் அவர்கள் பார்வை பெற்றனர்.

'இவரால் முடியும்' என்று மரியா சொன்னதால் மீட்பர் இவ்வுலகில் பிறந்தார்.

இவர்கள் இருவரும் அடுத்தவரை நம்பினர். இந்த நம்பிக்கையின் ஊற்று அவர்கள்தாம். அதாவது, 'என்னால் முடியும்' என்று நினைக்கும் ஒன்றைத்தான், 'இவரால் முடியும்' என அடுத்தவரில் என்னை நம்ப முடியும்.

இன்றைய பதிலுரைப்பாடல் ஆசிரியரும், 'ஆண்டவரே என் ஒளி, அவரே என் மீட்பு' என நம்புகிறார். அவர் அந்த ஒளியின் துணையைக் கண்டுகொள்கிறார்.

2 comments:

  1. ' இவரால் முடியும்' என பார்வையற்றவர் நினைத்ததால் அவர்கள் பார்வை பெற்றனர்; 'இவரால் முடியும்'என மரியா சொன்னதால் மீட்பர் இவ்வுலகில் பிறந்தார்.இந்த இருவேறு பேரும் " கடவுளால் முடியாதது எதுவும் இல்லை" எனும் சத்தியத்தை நம்பியது மட்டுமின்றி,அதற்கு சரணாகதியும் அடைகின்றனர்.அழகாகச் சொல்கிறார் தந்தை..." தன்னை நம்பும் ஒருவனால் மட்டுமே அடுத்தவரையும் நம்ப முடியும்." நான் நம்பும் ஆண்டவரின் ஒளியும், அவரின் மீட்பும் எனக்குத்துணை நிற்கட்டும்! தன் வாசகர்களை இறைவருகைக் காலத்திற்குள் மெல்ல,மெல்ல கைப்பிடித்து வழி நடத்தும் தந்தைக்கு என் வாழ்த்துக்களும்! நன்றிகளும்!!!

    ReplyDelete
  2. Ideogram--- itself covers everything in a nutshell.... marvelous...
    Yes
    "I can " "you can" "we can" All can" With faith...
    Let us promote this message to whomever we meet.

    ReplyDelete