Wednesday, December 26, 2018

திருத்தூதர் யோவான்

இன்றைய (27 டிசம்பர் 2018) நற்செய்தி (யோவா 20:2-8)

திருத்தூதர் யோவான்

இன்று நாம் திருத்தூதர் யோவானின் திருநாளைக் கொண்டாடுகிறோம். புதிய ஏற்பாட்டில் மூன்றில் ஒரு பகுதியைப் பிடித்திருக்கின்றன இவருடைய எழுத்துக்கள்: நற்செய்தி, மூன்று மடல்கள், மற்றும் திருவெளிப்பாடு. இவருடைய நற்செய்திக்கு வழங்கப்பட்டிருக்கும் அடையாளம் 'கழுகு.'

கழுகு போல இவருடைய உள்ளம் பறந்தது.

திருத்தூதர்களில் மிக இளமையானவராகவும், திருமணம் முடிக்காதவராகவும் இருப்பவர் இவரே. ஆண்டவருடைய நெஞ்சில் - பொதுவிடத்தில் - சாயும் அளவுக்கு நெருக்கமானவர். சிலுவையின் அடியில், 'இதோ உம் மகன்' என்று தன்னை அர்ப்பணித்தவரும், 'இதோ உம் தாய்' என்று இயேசு தம் தாயைக் கையளித்தபோது அவரை ஏற்றுக்கொண்டவர்.

இவர் ஒரு சிறந்த சிந்தனையாளர். நிறைய நல்ல விடயங்களை இவருடைய நற்செய்தி பதிவு செய்திருக்கிறது.

இவர் தன்னையே 'இயேசுவின் அன்புச் சீடர்' என்று அடிக்கடி அழைத்துக்கொள்கிறார். இது இவரின் அடையாளப் பிரச்சினையா? அல்லது தாழ்ச்சியா? என்று தெரியவில்லை.

மேலும், இவருக்கும் யூதாசுக்கும் கருத்து வேறுபாடு அல்லது உறவுச் சிக்கல் இருந்திருக்கும் என நினைக்கிறேன். அடிக்கடி யூதாசையும், அவரின் தகைமையையும் பற்றி எதிர்மறையான சொல்லாடல்களைக் கையாளுகின்றார்.

அடுத்ததாக, அன்பைப் பற்றி அதிகம் பேசுபவர்.

திருத்தூதர்கள், குறிப்பாக நற்செய்தியாளர்கள், இயேசுவுக்கும் நமக்கும் உள்ள இணைப்புக் கோடுகள்.

3 comments:

  1. ஆண்டவரின் நெஞ்சில் சாயுமளவிற்கு, இயேசுவின் அன்பை பெற்ற திருத்தூதர் யோவானைப் போல இயேசுவோடு நெருக்கமான வாழ்வைத் தொடர , இறைவா! உம் அருள் தாரும்!

    ReplyDelete
  2. "திருத்தூதர் யோவான்"...ஒரு தாயின் நெஞ்சில் சாய்நதபடி அவளின் கதகதப்பையும்,அரவணைப்பையும் அனுபவிக்கும் குழந்தையை நம் நினைவிற்குக் கொண்டுவருபவர்.சிலுவையின் அடியில் " இதோ உம் மகன்" என்று தன்னை அர்ப்பணித்தவரும், " இதோ உம் தாய்" என்று இயேசு தம் தாயைக்கையளித்தபோது அவரை ஏற்றுக்கொண்டவரும் இவரே என்பது தந்தை இவருக்களிக்கும் பெருமைமிகு நற்சான்று. " கழுகு" போன்று நம் உள்ளம் மேல் நோக்கிப்பறக்கவும்,நாம் பேசும் பேச்சில் அன்பிற்கு முதலிடம் கொடுக்கவும் இந்த திருத்தூதரிடம் வரம் வேண்டுவோம்.இணைப்புக் கோடுகளான திருத்தூதர்களை நம்மிடையே கொண்டுவரும் 'பாலமாகப்' பணியாற்றும் தந்தைக்கு என் வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete