உன் திருமுன் நான் சிரம் தாழ்ந்து நிற்கிறேன்
உன் காலடியில் என் கண்களைப் பணிக்கிறேன்
இந்தப் பணிவில்
உன் காலடிகளில் நான் என்னையே அர்ப்பணிக்கிறேன்...
இந்த ஆண்டு நான் கண்ட முகங்கள்
நான் கேட்ட குரல்கள்
நான் பேசிய வார்த்தைகள்
நான் குலுக்கிய கரங்கள்
நான் நடந்த பயணங்கள்
நான் செய்த சேவைகள்
நான் பகிர்ந்த மகிழ்ச்சிகள்
நான் அதிர்ந்த துன்பங்கள்
அனைத்தையும் உன் காலடிகளில் படைக்கிறேன்
என் தலையை உன் திருமுன் பணிகிறேன்
என் தலையை நீயே தாங்குவாய்...
இருள்சூழ்ந்த இந்த இரவின் நீண்ட பொழுதில்
எங்களைக் காப்பாற்றும்
எங்களை சூழ்ந்து கொள்ளும்
தந்தை, மகன், தூய ஆவி
மூன்றாகி ஒன்றானவா
நாங்கள் செய்த தவறுகளை மன்னியும்
நாங்கள் காட்டிய ஆணவத்தை மன்னியும்
பிறரைக் காயப்படுத்திய எம் வார்த்தைகளை மன்னியும்
இந்த இரவில் நாங்கள் உள்ளம்நிறை அமைதியுடன் உறங்கி,
உம் திருவுளம் நிறைவேற்ற புதிய நாளில் புதிய ஆண்டில்
புத்துணர்ச்சியுடன் எழுவோமாக...
இருள்சூழ்ந்த இந்த இரவின் நீண்ட பொழுதில்
எங்களைக் காப்பாற்றும்
எங்களை சூழ்ந்து கொள்ளும்
தந்தை, மகன், தூய ஆவி
மூன்றாகி ஒன்றானவா
அமைதியின் இறைவன் இந்த இல்லத்திற்கு அமைதி அருள்வாராக!
அமைதியின் மகன் இந்த இல்லத்திற்கு அமைதி அருள்வாராக!
அமைதியின் ஆவி இந்த இல்லத்திற்கு அமைதி அருள்வாராக!
இந்த இரவும்...
எல்லா இரவுகளும்...
(அயர்லாந்து நாட்டு புத்தாண்டு ஆசி செபம்)
ஆங்கிலத்தில்: பவுலோ கோயலோ
அயர்லாந்தோ,இந்தியாவோ... உலகின் அத்தனை மூலைகளிலும் உள்ள மக்களின் எண்ண ஓட்டத்தை இங்கே பிரதிபலிக்கின்றன தந்தையின் வரிகள்.சிரம் தாழ்ந்து,கண்கள் பனித்து,நம்மையே அர்பணித்து,நாம் செய்த தவறுகளுக்கு மன்னிப்புக்கேட்டு,புதிய ஆண்டிற்குப்புத்துணர்ச்சி கேட்டு,தந்தை,மகன்,தூய ஆவியின் ஆசீர் வேண்டி நிற்கின்றன நம் அனைவரின் மனங்களும்! ஆனால் இத்தனைக்கும் மேலான மன அமைதி?! ஆம்! அமைதி வந்தால் அத்தனையும் தொடர்ந்து வரும்.தந்தை,மகன்,தூய ஆவி நம் இல்லத்திற்கும்,உள்ளத்திற்கும் பிறக்கவிருக்கும் புத்தாண்டில் அமைதியை அள்ளித்தரட்டும்! ஆண்டு பிறக்குமுன்னரே ஆசியை அள்ளி வழங்கிய தந்தைக்கு வாழ்த்துக்களும்!! நன்றிகளும்!!!
ReplyDeleteAmen!🙏
ReplyDeleteமனதை தொடும் செபம். வாழ்த்துக்கள். வாழ்க வளமோடு. Happy new year
ReplyDeleteA
ReplyDelete