Friday, December 28, 2018

கையில் ஏந்தி

இன்றைய (29 டிசம்பர் 2018) நற்செய்தி (லூக் 2:22-35)

கையில் ஏந்தி

இயேசுவின் பெற்றோர்கள் குழந்தையை ஆண்டவருக்கு அர்ப்பணிக்க எருசலேம் வருகின்றனர்.

இயேசுவின் பெற்றோர்களின் எளிமையான, ஏழ்மையான பின்புலத்தைக் காட்டுவதற்காக 'இரு மாடப்புறாக்களை அல்லது புறாக்குஞ்சுகளை' பலியாகக் கொடுப்பதாகப் பதிவு செய்கிறார் லூக்கா. கடவுளின் மகன் கடவுளுக்கு அர்ப்பணம் செய்யப்பட்டபோது அவர் தன் ஏழ்மையால் கடைசி வரிசையில்தான் நின்றிருக்க வேண்டும்.

இந்த நேரத்தில் தூய ஆவியின் தூண்டுதலால் சிமியோன் கோவிலுக்கு வருகின்றார். இவர் தன் ஆண்டவரோடு இணைப்பில் இருந்தது ஆச்சர்யமாக இருக்கிறது. ஒவ்வொரு நாளும் கோவிலுக்குள் 100க்கு மேல் குழந்தைகள் கொண்டுவரப்படுவார்கள். அப்படி இருந்தும் அந்த ஒரு நாள் அவர் தூண்டப்பட்டது எப்படி? அந்த ஒரு குழந்தையை மட்டும் மெசியாவாகக் கண்டுகொண்டது எப்படி?

வந்தவர் குழந்தையைத் தன் கைகயில் ஏந்துகிறார்.

குழந்தையைக் கைகளில் தூக்குவது ஒரு கலை. எல்லாக் குழந்தைகளும் எல்லாரிடத்திலும் போவதில்லை. சிலர் கைகளை விரித்து நீட்டினாலும், என்னதான் கொடுக்க முயன்றாலும் குழந்தைகள் அவர்களிடம் வருவதில்லை. சில கைகளில் குழந்தைகளில் சிரிக்கும். சில கைகளில் குழந்தைகள் அழும். இதற்குக் காரணம் குழந்தைகளுக்குள் இருக்கும் தூண்டுதல் என்றே நினைக்கிறேன்.

இன்று நான் என் உள்ளத்தில் இருக்கும் ஆவியின் குரலைக் கேட்கத் தடையாக இருக்கின்ற இரைச்சல் எது?

காத்திருப்பவர்கள் மட்டுமே கண்டுகொள்வார்கள்.

4 comments:

  1. 'கடவுளின் மகன்' கடவுளுக்கு அர்ப்பணம் செய்யப்பட்ட போது அவர் தன் ஏழ்மையால் கடைசி வரிசையில் தான் நின்றிருக்க வேண்டும்.....என்னே முரண்பாடு! ஒவ்வொரு நாளும் சிமியோன் எத்தனையோ குழந்தைகளைக் கைகளில் தூக்கியும், 'அந்த ஒரு' குழந்தையை மட்டும் மெசியாவாகக் கண்டு கொண்டது எப்படி? கேள்விகேட்கும் தந்தையே பதிலையும் தருகிறார்..." காத்திருப்பவர்கள் மட்டுமே கண்டுகொள்வார்கள்" என்று ."காத்திருப்பது மட்டுமின்றி என் உள்ளத்தில் இருக்கும் ஆவியின் குரலைக்கேட்கத் தடையாக இருப்பது எது எனயோசிக்கவும் அழைக்கப்படுகிறேன். யோசிக்க வைத்த தந்தைக்கு என் நன்றிகள்!!!

    ReplyDelete
  2. காத்திருக்கும் எமக்கு புரிதலுக்கு உதவும் உங்கள் மடல்களுக்கு என்றும் நன்றி

    ReplyDelete
  3. என் உள்ளத்தில் இருக்கும் ஆவியின் குரலைக் கேட்க தடையாயிருக்கும் , இரைச்சலை கண்டுபிடிக்க தூண்டிய, அருட்பணி.யேசுவுக்கு வாழ்த்துகள் !
    நன்றி

    ReplyDelete