Friday, December 14, 2018

கண்டுணரவில்லை

இன்றைய (15 டிசம்பர் 2018) நற்செய்தி (மத் 17:10-13)

கண்டுணரவில்லை

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசுவின் உருமாற்ற நிகழ்வின் இரண்டாம் பகுதியை வாசிக்கின்றோம். தாபோர் மலையில் தம் சீடர்கள் மூவர் முன்னிலையில் இயேசு உருமாற்றம் அடைகின்றார். மோசேயும் எலியாவும் தோன்றி இயேசுவோடு உரையாடுகின்றனர்.

இந்நிகழ்வு முடிந்து இயேசுவும் சீடர்களும் மலையை விட்டு இறங்கும்போது அவர்களின் உரையாடல் எலியாவைப் பற்றி இருக்கின்றது. 'எலியா ஏற்கனவே வந்துவிட்டார். அவரை மக்கள் கண்டுணரவில்லை' என திருமுழுக்கு யோவானை எலியாவின் உருவமாக முன்வைக்கிறார் இயேசு.

மேலும், தாங்கள் விரும்பியவாறெல்லாம் மக்கள் யோவானுக்குச் செய்தார்கள்.

நெருப்பு, பஞ்சம், சீற்றம் - இப்படியாக பழைய ஏற்பாட்டில் எலியா தன்னை வெளிப்படுத்துகிறார்.

காணக்கூடிய நபராக, காணக்கூடிய செயல்களை யோவான் செய்யவில்லை.

கிறிஸ்து பிறப்பு கொண்டாட்டம் வெகு அருகில் வந்துவிட்டது.

குடில், நட்சத்திரம், தோரணம் என காணக்கூடியவை நிறைய வந்த வண்ணம் இருக்கின்றன.

காணக்கூடிய இவற்றின் நடுவில் காணமுடியாத அவரும் இருக்கிறார்.

அவரைக் கண்டுணர நேரமும், விருப்பமும் இருக்கிறதா நமக்கு?

2 comments:

  1. திருமுழுக்கு யோவானின் உருவில் ஏற்கனவே வந்து விட்ட எலியாவை மக்கள் கண்டுணரவில்லை என்பதைத் தந்தை அழகாக முடுச்சுப் போடுகிறார் கிறிஸ்து பிறப்புக் கொண்டாட்டத்துடன்.உண்மைதான்....'கிறிஸ்து பிறப்பு' என்றாலே நம் முகம் மின்னக்காரணமாக எத்தனையோ விஷயங்கள்.அத்தனையும் நம்முன் கலர் கலராக வித்தை காட்டும்போது அத்தனைக்கும் காரணமான " காணமுடியாத அவரை" கண்டுகொள்ள முயல்வதே இந்நேரத்தில் நாம் செய்ய வேண்டிய நற்செயல்.சொல்ல வேண்டிய ஒன்றை நேரடியாகச் சொல்லாமல் சுற்றி வளைத்துக் கண்டுணர வைக்கும் தந்தையின் உத்தியும் போற்றுதற்குரியதே!

    ReplyDelete
  2. அவரை கண்டுணர, நேரமும், விருப்பமும் ஏற்பட தூண்டிய (inspired)அருட்பணி.யேசுவுக்கு ஆத்மார்த்தமான நன்றிகள்!

    ReplyDelete