இன்றைய (4 டிசம்பர் 2018) நற்செய்தி (லூக் 10:21-24)
ஆண்டவரின் கொடை
இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு பேருவகையடைந்து தன் தந்தையை வாழ்த்துகின்றார். இறுதியாக, 'நீங்கள் காண்பவற்றைக் காணும் வாய்ப்பு பெற்றோர் பேறுபெற்றோர். ஏனெனில் பல இறைவாக்கினர்களும் அரசர்களும் நீங்கள் காண்பவற்றைக் காண விரும்பியும் காணவில்லை' என்று தன் சீடர்களின் பாக்கியம் பெற்ற நிலையைச் சுட்டிக்காட்டுகின்றார்.
இறைவன் தாம் விரும்புபவருக்குத் தன்னை வெளிப்படுத்துகிறார்.
இவ்வாறாக, இறைவெளிப்பாடு என்பதை ஒரு கொடை என்று சொல்கிறார் இயேசு.
இன்றைய முதல் வாசகத்தில் (காண். எசாயா 11:1-10) ஈசாய் என்னும் அடிமரத்திலிருந்து துளிர்க்கும் தளிர் பற்றி இறைவாக்குரைக்கின்றார் இறைவாக்கினர் எசாயா.
'ஓநாய் செம்மறியோடு, கன்று சிங்கக்குட்டியோடு, பசு கரடியோடு, குழந்தை பாம்போடு' என யாரும் யாருக்கும் தீங்கிழைக்காமல் வாழும் வாழ்வை மெசியாவின் வருகையோடு தொடர்புபடுத்தி எழுதுகின்றார் எசாயா. இதுவும் அவரின் கொடையே.
நம் ஒவ்வொருவரின் தனிநபர் வாழ்வில் அவரின் கொடைகள் என்னவென்று பார்த்து, அவருக்கு நன்றி நவில்வது சால்பு.

கொடைக்கிணையான "அந்தக் குழந்தைகளைப்" பார்த்தவுடனேயே ஏதோ நல்ல செய்தியைச் சுமந்து வருகிறது இன்றையப் பதிவு என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது.கண்டிப்பாக நாம் வாழும் ஒவ்வொரு பொழுதும், சுவாசிக்கும் ஒவ்வொரு மூச்சும் இறைவன் நமக்களிக்கும் கொடையே என்பதை உணரச்செய்யும் ஒரு பதிவு.ஓநாய் செம்மறியோடு,கன்று சிங்கக்குட்டியோடு,பசு கரடியோடு,குழந்தை பாம்போடு இருக்குமெனில் மனிதனுக்கு மனிதன் ஏன் இந்த வன்மம்? வைராக்கியம்? யோசிக்க வைக்கும் வரிகள்!"நாம் காண்பவற்றைக் காணும் வாய்ப்பு பெற்றோர் அனைவருமே பேறுபெற்றோர்" என்பதை உணர்வோம்; வாழும் காலம்தோறும் அவருக்கு நன்றியால் துதிபாடுவோம். அழகானதொரு " நன்றிப்பண்" இசைத்த தந்தைக்கு நன்றிகள்!!!
ReplyDeleteஎன் வாழ்வில் அவரின் கொடைகள் என்னவென்று பார்த்து, அவருக்கு நன்றி நவில பணித்த அருமை அருட்பணி.யேசுவுக்கு நன்றிகள்.
ReplyDeleteமிகுந்த நன்றியோடு இறையை புகழ்கின்றேன்...