Friday, December 30, 2016

திருக்குடும்பம்

இன்று திருக்குடும்பத்தின் திருநாளைக் கொண்டாடி மகிழ்ந்தோம்.

நேற்று மாலை கவியரசு கண்ணதாசனின் 'அர்த்தமுள்ள இந்துமதம்' ஒலிநாடா கேட்டேன்.

வீடு பற்றிச் சொல்லும்போது, 'படி' மற்றும் 'நிலை' பற்றிச் சொன்னார்.

ஒவ்வொரு வீட்டிலும் இந்த இரண்டும் இருக்கும்.

வீட்டில் இருப்பவர் 'நிலை' போல உயர்ந்திருக்க வேண்டும் எனவும், உயர்ந்திருந்தாலும் 'படி'ந்து போக வேண்டும் என நினைவூட்டவுமே 'படி-நிலை' என்கிறார் கண்ணதாசன்.

திருக்குடும்பத்திலும் இந்த படியும் நிலையும் இருந்தது.

திருக்குடும்பம் மூன்று பண்புகளைக் கொண்டிருந்தது:

அ. பாதுகாப்பு
ஆ. பயணம்
இ. வளர்ச்சி

இந்தப் பண்புகள் நமதாகலாமே!

4 comments:

  1. பதிவு சிறிதாயினும் அதில் பதிந்துள்ள விஷயங்கள் மதிப்புக்குரியவை.நம் விவிலியத்தைத் தாண்டி " அர்த்தமுள்ள இந்துமதம்" போன்ற புதையல்களிலிருந்து தோண்டி எடுக்கப்பட வேண்டியவை ஏராளம்... இந்தப் 'படி' மற்றும் 'நிலை' போன்ற விஷயங்கள் அளவுக்கு.இந்தப்பண்புகளைத் திருக்குடும்பத்துடன் சம்பந்தப்படுத்தியிருப்பது அழகு.ஆம்..எந்த ஒரு குடும்பத்தில் குழந்தைகளுக்கு மட்டுமின்றி கணவனுக்கும்,மனைவிக்கும் கூடப் "பாதுகாப்பு,பயணம்,வளர்ச்சி" எனும் விஷயங்கள் குறைவின்றிக் கிடைக்கிறதோ அப்படிப்பட்ட எந்தக்குடும்பமும் "திருக்குடும்பமே!" இலையெனில் அது தெருக்குடும்பம் தான்.திருக்குடும்பத்தின் கதகதப்பைப் போன்றதொரு பதிவிற்காகத் தந்தைக்கு நெஞ்சம் நிறை நன்றிகள்!!!

    ReplyDelete
  2. Replies
    1. பதிவு சிறிதாயினும் அதில் பதிந்துள்ள விஷயங்கள் மதிப்புக்குரியவை.விவிலியத்தைத்தாண்டி “ அர்த்தமுள்ள இந்துமதம்” போன்ற புதையல்களிலிருந்து தோண்டி எடுக்கப்பட வேண்டியவை ஏராளம்.இந்தப்’படி’ மற்றும் ‘மனம்’ போன்ற விஷயங்கள் அளவுக்கு.இந்தப்பண்புகளைத்திருக்குடும்பத்துடன் சம்பந்தப்படுத்தியிருப்பது அழகு.ஆம்! எந்த ஒரு குடும்பத்தில் குழந்தைகளுக்கு மட்டுமின்றி கணவனுக்கும்,மனைவிக்கும் கூடப் பாதுகாப்பு ,பயணம்,வளர்ச்சி எனும் விஷயங்கள் குறைவின்றிக்கிடைக்கிறதோ அப்படிப்பட்ட எந்தக்குடும்பமும் திருக்குடும்பமே! இலையெனில் அது தெருக்குடும்பம்தான். திருக்குடும்பத்தின் கதகதப்பை போன்றதொரு பதிவிற்காகத்தந்தைக்கு நெஞ்சம் நிறை நன்றிகள்!

      Delete