Tuesday, December 13, 2016

கேரல்ஸ்

நேற்று மாலை கேரல்ஸ் சென்றோம்.

நான்கு ஆண்டுகளுக்குப் பின் கேரல்ஸ் செல்வதாய் இருப்பதால் ஆர்வமாக இருந்தது.

புதிய பங்கு.

புதிய மக்கள்.

இருந்தாலும் நடை என்னவோ உள்ளுர் நடையாகத்தான் இருந்தது.

நேற்று மூன்று விடயங்கள் என் மனதைத் தொட்டன:

1. சிறிய வீடு. 7க்கு 7தான் வீட்டு அளவு. தாழ்வான வாசல். உள்ளே சமையலறையை மறைக்க ஒரு பெட்ஷீட் கட்டியிருந்தார்கள். குழந்தை இயேசுவை வைக்க ஒரு நாற்காலி போட்டிருந்தார்கள். அந்த நாற்காலி பக்கத்து வீட்டு இரவல் நாற்காலி. ஏனெனில் இந்த வீடு முடிந்தவுடன் அதை அடுத்த வீட்டிற்குக் கொண்டு போனார்கள். குழந்தை இயேசுவை வைத்தவுடன் பூக்களை குழந்தைக்கு சூடினார் அந்த அனாமிகா. அத்தோடு விடவில்லை. பிறந்த குழந்தைக்கு அணிவிக்கும் புதிய ஆடை ஒரு செட்டை குழந்தையின்மேல் விரித்தார். அத்தோடு விடவில்லை. ஜெபம் முடிந்தவுடன் எல்லாருக்கும் ஒவ்வொரு பிஸ்கட் பாக்கெட் வழங்கினார்.

அவர் செய்தது எதுவும் என்னைக் கவரவில்லை என்றாலும், அந்த செயல்பாடுகளுக்குப் பின்னால் இருந்த அவரின் இயல்பு என்னைக் கவர்ந்தது. டோபி வேலைக்குச் சென்ற அவர் எந்நேரம் வீடு திரும்பியிருப்பார்? எங்கே மல்லிகை வாங்கியிருப்பார்? எப்போது துணிக்கடைக்குப் போயிருப்பார்? இத்தனை பிஸ்கட் பாக்கெட்டுகளை வாங்க 2000 ரூபாய் நோட்டை மாத்தியிருப்பாரா?

2. சிறிய பொண்ணு. பெயர் அனாமிகா என வைத்துக்கொள்வோம். வயது 5. எல்லா இடத்திற்கும் நடந்தே வந்தது. குழந்தை இயேசுவை எந்த வீட்டில் வைத்தாலும் அதன் அருகில் போய் நின்று கொள்வாள் இவள். குழந்தை இயேசுவின் முகத்தை தன் பிஞ்சுக்கரங்களால் வருடிக் கொடுப்பாள். வருடிக் கொடுத்துவிட்டு எல்லாரையும் அண்ணாந்து பார்ந்து வெட்கத்தோடு சிரிப்பாள். அவளைப் பார்க்க நம்ம தமிழ் மாதிரியே இருந்தது. 'வாழ்த்துக்கள்' என்றால் 'வாழ்த்துக்கள்' என்பாள். 'நல்லா இருக்கீங்களா?' என்றால் 'நல்லா இருக்கீங்களா?' என்பாள்.

3. மற்றொரு அனாமிகா. வயது 21-24 இருக்கும்(!). ஆசிரியராகப் பணிபுரிகின்றார். மின்னல் போல வந்தார். சில வீடுகளில் பாடல்கள் பாடினார். மின்னல் போல மறைந்தார். ஒரு வீட்டில் நின்ற போது, 'இதுதான் எங்க வீடு!' என்றாள். தன் குடும்ப பின்புலம் தன்னைத் தடுக்க முடியாது என்ற பெருமிதம் அவர் கண்களில் இருந்தது. மிக நேர்த்தியாக சிறுவர், சிறுமியரை வழிநடத்தினார்.

ஏறக்குறைய 20 பேர். சிறியவர். பெரியவர்.

அதில் யாரையும் எனக்குத் தெரியாது.

ஆனால் நெருக்கமானவர் போல எல்லாரும் பழகினர்.

இதுதான் கிறிஸ்து பிறப்பு என அறிந்தேன்.

3 comments:

  1. ' அனாமிகா'... இந்தப் பெயரின் மீது தந்தைக்கு ஒரு தனிப்பிரியம் இருப்பது போல் உள்ளது.ஏதேனும் காரணம் இருக்கலாம்.அனாமிகா ...எல்லோருமே அனாமிகா தான் எனினும் ஒவ்வொருவர் பின்புலமும்,அவர்களின் நடைமுறைப் பழக்கங்களும் தனித்துவமானவை.சிறிய விடோ-பெரிய வீடோ, நாற்காலி சொந்தமோ-இரவலோ, டோபியோ- பெரிய பதவி வகிப்பவரோ...இவர்களை எல்லாம் ஒன்று சேர்த்திருப்பது ' அந்த பனிக்குடிலின் பாலகன்' தான்.மனங்கள் வேறாக இருக்கலாம்..ஏன் மதங்கள் கூட வேறாக இருக்கலாம்.ஆயினும் நம்மை மதம் பிடிக்காத மனிதர்களாக வைத்திருப்பது இந்த ' வேற்றுமையில் ஒற்றுமைதான்'.இதுதான் மனிதம்.மதங்களைத் தொலைத்து விடினும் கூடப் பரவாயில்லை; மனிதத்தைக் காத்திடுவோம்.இதுதான் ' கிறிஸ்து பிறப்பு' என அறிந்து கொள்வோம். நான்கு வருட இடைவெளிக்குப் பின் தந்தைக்கு கிடைத்த கேரல்ஸ் அனுபவம் எமது அனுபவமாகவும் இருந்தது.நன்றி!!!
    அனுபவம்

    ReplyDelete
  2. GITA - New York

    Dear Fr YESU:

    Your blog relating to Christmas Carol is impressive.
    The way you write about things simply enamors me.

    Some people write and tell.
    You write to show.
    Hence your characters come alive, dance and enthrall.

    The "Manger" for Baby Jesus is awesome.
    The way it is transported from one house to another is very touching.
    Simple yet profound at the same time.

    And then the ANAMIKAS that appear and accompany you...

    "ANAMIKA" means many things.
    Nameless.
    Little Sister.
    Ring Finger.
    And much more...

    Everyone wanting to see Jesus, desiring to meet with Him, aspiring to be a Christian, hoping to be a disciple and more is an ANAMIKA..- before the actual encounter.

    And they receive a name in meeting Him.
    The shepherds.
    The wise men.
    The myriad personalities in the flow of history.
    Christianity is a process of "nameless anamikas" becoming
    known personalities in and through and for JESUS...

    ReplyDelete