Friday, December 16, 2016

நவநாள்

திருவருகைக்காலம் டிசம்பர் 16க்கு முன், டிசம்பர் 16க்குப் பின் என இரண்டு நிலைகளில் பிரிக்கப்பட்டுள்ளது.

இன்று மாலையிலிருந்து கிறிஸ்து பிறப்புக்கான நவநாள் தொடங்குகிறது.

'புகழப் புகழ அமிர்தமான இயேசுவே' என்ற செபம் உங்களுக்கு நினைவிருக்கிறதா. இந்த செபம் தான் இந்த 9 நாள்கள் சொல்லப்படும்.

நாளைய நற்செய்தி வாசகத்தில் இயேசுவின் தலைமுறை அட்டவணையை வாசிக்கின்றோம்.

மத்தேயு மற்றும் லூக்கா நற்செய்தியாளர்கள் இயேசுவின் தலைமுறை அட்டவணையை பதிவு செய்கின்றனர். மத்தேயு இயேசுவை ஆபிரகாமின் மகன் எனவும், லூக்கா ஆதாமின் மகன் எனவும் காட்டுகின்றனர்.

மத்தேயுவின் தலைமுறை அட்டவணையில் 5 பெண்களும் இடம் பிடித்திருக்கின்றனர்: தாமார், இராகாபு, ரூத்து, பெத்சேபா, மரியா.

இறைவனின் திட்டத்தில் நாம் எப்படி இருக்கிறோம் என்பது முக்கியமல்ல. நாம் எப்படி மாறுகிறோம் என்பதே முக்கியம்.

இல்லையா?

4 comments:

  1. " புகழப்புகழ அமிர்தமான இயேசுவே!"... இந்த செபத்தை நான் பள்ளிப்பருவத்திலிருந்தபோது என் வீட்டில் கிறிஸ்து பிறப்பின் நவநாள் செபமாகச் சொன்ன ஞாபகம் இருக்கிறது.ஆனால் அதற்குப்பின் இன்றுவரை அதை எங்கேயும் கேட்கவில்லை.காரணமும் தெரியவில்லை.இறைவனின் திட்டத்தில் இணைந்திருந்த ஐந்து பெண்களின் பெயரைக்குறிப்பிட்ட தந்தை,இறைவனின் திட்டத்தில் நாம் எப்படி இருக்கிறோம் என்பதைவிட எப்படி மாறுகிறோம் என்பதே முக்கியம் எனக் குறிப்பிடுகிறார்.உண்மைதான்.முட்டையிலிருந்து வெளிவரும் கம்பளிப்பூச்சி போன்ற ஒரு ஜந்து,அது அடையும் மாற்றங்களின் மூலமே அழகிய வண்ணத்துப்பூச்சியாக மாறுகிறது.நாமும் கூட நம்மிடம் தேவையற்று ஒட்டியுள்ளவற்றைத் துகிலுரித்து அவரின் அதிசயப் படைப்பாக மாறும் வரம் கேட்போம்.இந்தப் பதினாறாம் நாள் பலவகைகளில் ஞாபகத்தில் வைக்கவேண்டிய நாளாக மாறிவிட்டது.இறைவனுக்கும்,தந்தைக்கும் நன்றிகள்!!!

    ReplyDelete
  2. "புகழப்புகழ அமிர்தமான இயேசுவே " ... கேட்டதே இல்லை.

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. GITA - New York

    Dear Fr YESU:

    Your "Jesus as AMIRTHAM" reminds me of the great hymn by Bernard Clairvaux [1099-1153], the French mystic.
    And when a French heart falls in love with either God or woman/man, it simply diffuses in poetry.

    I understand that the original HYMN runs to 42 to 53 stanzas, depending on what specific manuscript one checks with...

    "Jesus, the very thought of Thee
    With sweetness fills the breast!
    Yet sweeter far Thy face to see
    And in Thy Presence rest.
    No voice can sing, no heart can frame,
    Nor can the memory find,
    A sweeter sound than Jesus' Name,
    The Saviour of mankind.
    O hope of every contrite heart!
    O joy of all the meek!
    To those who fall, how kind Thou art!
    How good to those who seek!
    But what to those who find? Ah! this
    Nor tongue nor pen can show
    The love of Jesus, what it is,
    None but His loved ones know.
    Jesus! our only hope be Thou,
    As Thou our prize shalt be;
    In Thee be all our glory now,
    And through eternity.
    Amen."

    Question: Do TAMILS nowadays birth out such poems in praise of the Lord?
    Perhaps our neatly cut PROSE and insipid ORTHODOXY inhibit our Poets to be free and limitless in composing poems for Jesus...

    ReplyDelete