Saturday, December 3, 2016

பிரான்சிஸ் சவேரியார்

இன்று தூய பிரான்சிஸ் சவேரியாரின் திருநாளைக் கொண்டாடி மகிழ்ந்தோம்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இணையதளத்தில் ஒரு அழகுப்போட்டி நடைபெற்றது.

இரண்டு ஃபோட்டோக்களைப் போட்டு, 'இவற்றில் எது அழகு?' என்ற கேள்வி கேட்கப்பட்டு, ஓட்டு எடுக்கப்பட்டது.

இடது பக்கம் தூய சவேரியாரின் அழியாத உடலின் பாதம். வலது பக்கம் 'தாளம்' படத்தின் ஐஸ்வர்யா ராயின் பாதம்.

வலது பக்க படத்திற்குத்தான் நிறைய ஓட்டுகள் விழுந்திருந்தன.

இறுதிச்சுற்றில், ஐஸ்வர்யாவின் பாதமே வென்றது.

ஐஸ்வர்யா வென்றதில் எனக்கு எந்த கோபமும், வருத்தமும் இல்லை. இன்று பல நேரங்களில் நம் பார்வை அப்படித்தான் இருக்கிறது.

மிருதுவாக, இளமையாக, பளபளப்பாக, சிகப்பாக இருப்பதுதான் நம் கண்களுக்கு ஈர்ப்பாக இருக்கிறது.

ஆனால், வன்மையாக, முதுமையாக, பொலிவிழந்து, சிகப்பில்லாமால் இருப்பதும் அழகுதான் என்பதை உணர்ந்ததால் தான் சவேரியார் நம் நாட்டிற்கு வந்தார்.

அவரின் பாதங்கள் இன்று போட்டியில் வேண்டுமானால் வெல்லாமால் இருக்கலாம்.

ஆனால், அந்தப் பாதங்களில் இருந்த வேகம், தளராத துணிச்சல், நேர்கொண்டு நிமிர்ந்த நடை காலத்தைக் கடந்த பாடங்கள் - அவரின் அழியாத பாதங்கள் போலவே!

2 comments:

  1. ஏதாவது ஒரு வழியில் சமநிலையில் உள்ள இருவிஷயங்களைழ்தான் போட்டிக்கு எடுத்துக்கொள்ள முடியும்.இங்கு இவை இரண்டுமே பாதங்கள் என்பதைத் தவிர வேறு எந்த காரணமும் இல்லை புனித சவேரியாரையும்,ஐஸ்வர்யா ராயையும் போட்டிக்கு உட்படுத்த.தந்தையே சொல்லியபிறகு அப்பீல் ஏது? ஆம் ....."மிருதுவாக, இளமையாக,பளபளப்பாக,சிகப்பாக,இருப்பதுதான் நம் கண்களுக்கு ஈர்ப்பாக இருக்கிறது.ஆனால் வன்மையாக,முதுமையாக,சிகப்பில்லாமல் பொலிவிழந்து இருப்பதும் அழகுதான்" என்பது நமக்குக் காலம் கடந்துதான் புரிகிறது.நம் குடும்பங்களில் அஸ்தமனத்தை நோக்கிக் காத்திருக்கும் முதியவர்களின் அக,புற அழகு மட்டும் நம் யுவன்களுக்கும்,யுவதிகளுக்கும் புரிந்தால் இங்கே இத்தனை,முதியோர் இல்லங்களின் படையெடுப்பு இருக்காது.சவேரியாரைப்போலவே நம் முன்னோர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியவை வேகம்,தளரா துணிச்சல்,நேர்கொண்டு நிமிர்ந்த நடை, காலத்தைக்கடந்த பாடங்கள் என்பதை.காலத்தின் தேவையறிந்து கொடுத்த பதிவிற்காகத், தந்தைக்கு நன்றிகள்! அனைவருக்கும் ஞாயிறு வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  2. GITA - New York

    St Francis Xavier is my hero as well.
    It was he who planted the Church in my native District.
    He is the Patron Saint of my Home Diocese.
    [True there were other Christians in South India before the arrival of Xavier]

    Christian communities in Puvar, Kollencode, Vallavilai, Thuthur, Puthenthurai, Thengapattinam, Enayam, Midalam, Vaniyakudi, Kolachel, Kadiapattinam, Muttam, Pallam and Manakkudi [and more] owe their Christianity to St Francis Xavier.

    A significant observation.
    This may be true to Xavier's Jesuit tradition and temperament.
    From Cochin, he wrote his colleagues "to set up a school in each of these villages, for the instruction of the children".



    ReplyDelete