Thursday, December 15, 2016

தெருவிளக்கு

'யோவான் எரிந்து சுடர்விடும் விளக்கு. நீங்கள் சிறிது நேரமே அவரது ஒளியில் களிகூர விரும்பினீர்கள்.'

இன்று மாலை அப்பல்லோ மெடிக்கல்ஸ் சென்றேன்.

மோடி கொண்டு வந்த பண மதிப்பு ரத்தால் கார்ட் பயன்படுத்தும் கடைக்கு மட்டுமே செல்ல முடிகிறது.

கார்ப்பரேட் வீடுகளில் மட்டுமே அடுப்பெரிய வேண்டும். மற்ற வீடுகளில் காலிப்பானைகள்தாம் இருக்க வேண்டும் என்ற அவரது நினைப்பில் யாராவது ஒரு லாரி மண் அள்ளி போட்டால் நலமாக இருக்கும்!

போகும் வழியில் தெருவிளக்கின் வெளிச்சத்தில் நான்கு சிறுவர்கள் வீட்டுப்பாடம் எழுதிக்கொண்டிருந்தார்கள்.

ஒவ்வொரு ஊருக்கும் ஒரு மணம் உண்டு. மதுரைக்கும் ஒரு மணம் உண்டு. அந்த மணத்தை உணர மாலையில் அதைச் சுற்றி வர வேண்டும்.

மதுரை பெயரளவில்தான் மாநகரம். ஆனால் அது வளர்ந்து கொண்டே இருக்கும் ஒரு கிராமம். அவ்வளவுதான். இன்றும் மதுரையில் 50 காசுக்கு வடை வாங்க முடியும். இன்றும் தெருவிளக்கின் வெளிச்சத்தில் பிள்ளைகள் படிக்கிறார்கள் என்பது ஆச்சர்யமாக இருந்தது. அமர்ந்திருந்த நான்கு சிறுவர்கள் ஒருவன் மற்றவர்களுக்கு பாடம் சொல்லிக் கொண்டிருந்தான். அனைவரும் ஆரம்பப் பள்ளியில்தான் படித்துக்கொண்டிருக்க வேண்டும். அவர்களைச் சுற்றி வந்த ஒரு குட்டி அழகி ஒரு நோட்டைப் பிடித்து இழுத்துக்கொண்டிருந்தாள். நோட்டுக்குச் சொந்தக்காரன் கோபப்படவில்லை. பொண்ணுங்க இழுத்தா மதுரைப் பசங்க கோபப்பட மாட்டாங்க போல!

தெருவிளக்கின் மங்கலான வெளிச்சத்திலும் அவர்களின் எதிர்காலம் அழகாக ஒளிர்ந்துகொண்டிருந்தது.
நகரமயமாக்கலின் எந்தவித ஆரவாரத்திற்கும் ஆட்படாமல் தங்கள் வேலையை அழகாக செய்து கொண்டிருக்கிறார்கள் குழந்தைகள்.

நிற்க.

'நீங்கள் ஒளியில் சிறிது நேரமே மகிழ்ந்திருந்தீர்கள்!' என தன் சமகாலத்து மக்களை குற்றம் சுமத்துகின்றார் இயேசு.

எப்பவாவது நல்லவராக இருப்பது எளிது.

எப்போவுமே நல்லவராக இருப்பது கடினம்.

அன்றும் - இன்றும் - என்றும்!

2 comments:

  1. மதுரை நகரின் அழகையும்,மற்றும் அந்த நகரம் பெற்றெடுத்த சிறார்களைப் பற்றிய சிறு குறிப்பையும் மதுரை மல்லியின் மணத்தோடு தந்தை தந்திருக்கும் விதம் அழகு.ஆமாம்...50 காசுக்கு வடையும்,5 சட்டினியுடன் கூடிய மல்லிகைப்பூ இட்லியும்,குவளையில் மணமும்,சுவையும் கலந்த ஜிகர்தண்டாவும் கிடைப்பது இங்குதான்.தூங்கா நகரம் மட்டுமல்ல..எப்ப தூங்கி எழுந்தாலும் எங்கோ ஒரு மூலையில் சுவையான உணவு உண்டு என்பதும் இந்த நகரின் சிறப்பு.வளர்ந்து வரும் இந்த கிராமத்தில் வளர்ந்து வரும் சிறார்களைப்பற்றிய குறிப்பு பெருமைக்குரியது." தெரு விளக்கின் மங்கலான வெளிச்சத்திலும் இந்த சிறுவர்களின் எதிர்காலம் அழகாக ஒளிர்ந்து கொண்டிருந்தது". தந்தையின் வரிகளில் பெருமிதம் தெரிகிறது. மறையக்கூடிய தெருவிளக்கின் ஒளியோடு மாறா பெருமைக்குரிய யோவான் எனும் விண்மீனை தந்தை ஒப்பிடுவது விந்தைக்குரிய விஷயம்."எப்பவுமே நல்லவராக இருத்தல் வேண்டாம்...எப்பொழுதாவதாவது ஆச்சும் நல்லவராயிருங்களேன்"என்று கெஞ்சுகிறது இன்றையப் பதிவு.அதைப்பாங்குறத் தந்த தந்தைக்கு வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  2. GITA - New York

    Dear Father YESU:

    Today's blog springs on me so many surprises.

    When you state that you went to APOLLO MEDICALS, another "Apollo" came to my mind.

    When I read about Central Govt's demonetization and your interpretation reg. benefits being reaped by various sections of society, a dark cloud of sadness hangs upon my heart, as I am not millionaire. I am an ordinary citizen.
    Who notices the many deaths that occur all over!

    The scene of kids doing their homework under the street lights...Oh, despite turning out a million engineering and tech graduates annually and shipping a sizable number them to "earn big bucks" across the globe, our street lights remind the stunned job creation processes of our elected officials.

    There is Vardah; there is so much of devastation; there is no water; there is no electricity; people live their lives as in a war zone. And what we do? We have only time and imagination to sing lauds for Amma, Periamma, Chinnamma and the like. A sickening ghetto mindset seeking out and adoring a pair of sandals and a sari and a blouse...

    The native fragrance of Madurai...
    You say it so well.
    Of course, there are other fragrances - from Chennai to Kanyakumari, from Pondy to Poondy, from Coimbatore to Tuticorin, from Tanjore to Vellore, from Ootty to Ramanathapuram.

    ReplyDelete