Thursday, February 27, 2014

தேனினும் இனியது

சிங்கத்தினும் வலியது எது?

தேனினும் இனியது எது?

சிம்சோனைப் பற்றிய ஆய்வுக்கட்டுரையை இன்று எழுதத் தொடங்கினேன்.

சிம்சோன் என்ற ஒரு மனிதர் இருந்தாரா? என்பது முதல் கேள்வி.

சிம்சோனைப் பற்றி எழுதும்போது என் நண்பன் சாம்சன் தான் நினைவிற்கு வருகிறான்.

என் குருத்துவக் கல்லூரி முதல் நண்பன் சாம்சன். திண்டுக்கல்லில் இருக்கிறான்.

எவ்வளவு நாட்கள் பேசாவிட்டாலும் பார்க்கும்போது அதே பாசத்தைப் பொழிவான்.

அதிகமாக அவனிடம் பேசாமல் இருந்த ஆண்டுகள் மூன்று.

அந்த மூன்று ஆண்டு இடைவெளியில் ஒருநாள் ஒரு அலைபேசி எண்ணிலிருந்து ஒரு அழைப்பு.

புதிய எண் என்பதால் அழைப்பைத் துண்டித்து விட்டு

'who are you?' என அனுப்பினேன்.

உடனே பதில் வந்தது:

டேய் யேசு. என்னடா? 'how are you?' அனுப்புவதற்குப் பதில் 'who are you?' என அனுப்பியிருக்கிறாய்?

பாசக்கார பயபுள்ள!

விவிலியத்தின் சாம்சனும் பாசக்காரர் தான்.

சாம்சனைப் பற்றி நீதித்தலைவர்கள் நூல் 13 முதல் 16 (நான்கு அதிகாரங்கள்) சொல்கின்றன.

இந்த நான்கு அதிகாரங்களையும் இரண்டே வாக்கியங்களில் அடக்கி விடலாம்:

1. பிலிஸ்தியரைக் காணும்போதெல்லாம் கொலை செய்வார்.

2. பெண்களைக் காணும்போதெல்லாம் காதல் கொள்வார்.


1 comment:

  1. Anonymous2/27/2014

    சிம்சோனைப்பற்றி மேலும் தெரிந்து கொள்ள நீ.த..அதி13-16 வாசித்தேன்.எனக்கென்னவோ சிம்சோன் பாசக்காரராக அல்ல கோபக காரராகத்தான் தெரிகிறார்.அவரின் வலிமைக்குக் காரணமான கூந்தல தெலீலா.என்ற பெண்ணால் வஞ்சகமாக மழிக்கபபட்ட பிறகும் கூட இறைவன் அவரோடிருந்து செயல் படுகிறார்.இது இறைவன் ஒரு சிலர்மேல் வைத்திருக்கும் 'ஓரவஞ்சனை'யான பாசத்திற்கு ஒருஎதுத்துக்காட்டு.பெண்களைக் காணும்போதெல்லாம் காதல் கொள்வது...இது எந்தவிதத்திலும் அவரை எனக்குப் பாசக்காரராகச் சித்தரிக்கவில்லை.இருப்பினும் விவிலியம் படிக்கும் ஆசையைத்தூண்டிய உங்களுக்கு என் நன்றிகள்.

    ReplyDelete