Wednesday, October 13, 2021

அறிவுக்களஞ்சியத்தின் திறவுகோல்

இன்றைய (14 அக்டோபர் 2021) நற்செய்தி (லூக் 11:47-54)

அறிவுக்களஞ்சியத்தின் திறவுகோல்

இயேசு, இன்றைய நற்செய்தி வாசகத்தில், பொதுவாக தன் சமகாலத்தவரையும், குறிப்பாக திருச்சட்ட அறிஞரையும் சாடுகின்றார். 'அறிவுக் களஞ்சியத்தின் திறவுகோலை நீங்கள் வைத்துக்கொண்டு, நீங்களும் நுழைவதில்லை. நுழைவோரையும் தடுக்கிறீர்கள்!' என்கிறார்.

கடந்த 10ஆம் தேதி நம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மாமன்றம் ஒன்றைத் தொடங்கி வைத்தார். 'கூட்டொருங்கியக்கத்துக்கான மாமன்றம் 2021-2023' என்று அழைக்கப்படும் இம்மாமன்றம் கூட்டப்படுவது ஒரு புரட்சியாக இருக்கிறது. குருக்கள்மையத் திருஅவையின் போக்கை மாற்ற விழைகின்றார் திருத்தந்தை. இது ஒரு நல்ல முயற்சி. 'இவ்வளவு நாள்களாக நாம் அறிவுக் களஞ்சியத்தின் திறவுகோலை வைத்துக்கொண்டு நாமும் நுழையாமல், நுழைவோரையும் தடுத்துக்கொண்டிருந்தோமோ!' என்று எண்ணத் தோன்றுகிறது. 'அருள், அருள்பணியாளர், அருளடையாளம்' என்று நம் திருஅவை மிகவே சுருங்கிவிட்டது. மாறிவரும் இவ்வுலகில் நம்மையே மறுஆய்வு செய்து பார்ப்பதும், நம்மைச் சுற்றி நடப்பவர்களுக்கும், நடப்பவற்றுக்கும் செவிகொடுப்பதும் காலத்தின் கட்டாயம்.

மாமன்றம் நம் ஒவ்வொரு மறைமாவட்டத்திலும் வருகின்ற 17ஆம் தேதி தொடங்குகின்றது

நாம் அதிகமாகக் கேட்கவும், உரையாடவும், ஆவியாரின் வழிகாட்டுதலைத் தேர்ந்து தெளியவும் அழைக்கப்படுகின்றோம்.

இயேசுவின் கடிந்துரையைக் கேட்ட அவருடைய சமகாலத்தவர்கள் அவர்மேல் பகைமையுணர்வு கொள்கின்றனர்.

ஆனால், நம் காதுகளையும் கண்களையும் திறந்து வைத்தால் அனைவரும் இணைந்து அறிவுக் களஞ்சியத்துக்குள் நுழையலாம்.

 

3 comments:

  1. ‘கூட்டொருங்கியத்திற்கான மாமன்றம் 2021-2023’…. புதியதாக மட்டுமல்ல…புரட்சிகரமானதாகவும் தோன்றுகிறது.குருக்கள் மையத்திருஅவையின் போக்கை மாற்றும் ஒரு முயற்சி! நல்லதுதான்.மாறிவரும் இவ்வுலகில் நம்மையே மறுஆய்வு செய்து பார்ப்பதும், நம்மைச்சுற்றி நடப்பவர்களுக்கும்,நடப்பவற்றுக்கும் செவிகொடுப்பதும் காலத்தின் கட்டாயம் என்பது திருஅவையின் தலைவர்கள் தேர்ந்து தெளிந்து எடுத்த முடிவாகவே இருக்கும்.
    நாம் அதிகமாகக் கேட்கவும்,உரையாடவும், ஆவியாரின் வழிகாட்டுதலைத் தேர்ந்து தெளியவும் அழைக்கப்படுகிறோம். நாம் நேரிடையாக இதில் கலந்துகொள்ள இயலாத நிலையில், இது யாருக்கோ சொல்லப்படும் செய்தி என்ற எண்ணம் தவிர்த்து, கலந்து கொள்பவர்கள் பரிசுத்த ஆவியால் ஆட்கொள்ளப்பட வேண்டுதல் செய்வதன் வழியாகவும், நம் காதுகளையும்,கண்களையும் திறந்து வைப்பதன் மூலமாகவும் நாமும் களஞ்சியத்திற்குள் நுழையலாம்! நன்று!
    புதிதான எந்தவொரு செய்தியையும் அதன் நுணுக்கங்களோடு வாசகர்களோடு பகிரும் தந்தைக்கு நன்றியும்….வாழ்த்துக்களும்!!!

    ReplyDelete
  2. ஒரு Amazon synod க்கு கோவிலை இழுத்து சாத்த வேண்டியதா போச்சு.... இதுக்கு என்னவெல்லாம் ஆக போகுதோ... ஹும்...

    ReplyDelete