Monday, October 11, 2021

உட்புறத்தில் உள்ளதை

இன்றைய (12 ஆகஸ்ட் 2021) நற்செய்தி (லூக் 11:37-41)

உட்புறத்தில் உள்ளதை

பரிசேயர் ஒருவர் தன்னோடு உணவருந்துமாறு இயேசுவிடம் வேண்டுகின்றார். இயேசுவும் உடனே செல்கின்றார். இயேசு கைகளைக் கழுவாமல் உணவருந்த அமர்கிறார். பெருந்தொற்றுக்குப் பின்னர் உள்ள சூழலில் இதை நாமும் ஏற்றுக்கொள்ள முடியாது. நம்மைப் போலவே பரிசேயரும் வியப்படைகின்றார். 

இந்தச் சூழலைப் பயன்படுத்திக்கொள்கின்ற இயேசு இரு போதனைகளை முன்வைக்கின்றார்:

ஒன்று, வெளிப்புறத் தூய்மையை விட உள்புறத் தூய்மை அவசியம்.

இரண்டு, நம் உட்புறத்தில் உள்ளது அனைத்தும் தர்மமாகக் கொடுக்கப்பட வேண்டும்.

இந்த இரண்டும் இருந்தால் அனைத்தும் தூய்மையாக இருக்கும் என்கிறார் இயேசு.

பரிசேயர்கள் தூய்மை-தீட்டு என்னும் புலங்களைப் பயன்படுத்தக் காரணம் உடல்சார் அல்லது மருத்துவம்சார் தூய்மையால் அல்ல, மாறாக, தங்கள் உள்ளத்தில், தங்களைத் தூய்மையானவர்கள் என நினைத்துக்கொண்டு மற்றவர்களைத் தீட்டானவர்கள் என்று கருதினார்கள். அவர்களுடைய பார்வையைச் சரிசெய்ய நினைக்கின்றார் இயேசு.


1 comment:

  1. போலித்தனமான உள்ளத்தூய்மையை தமதாக்கித், தம்மை சுற்றியிருப்பவர்களைத் தீட்டானவர்கள் என்று தள்ளிவைத்த பரிசேயர்களுக்கு ஒரு சாட்டையடி இன்றையப்பதிவு.அவர்களது தப்பான எண்ணத்தைக் களைய முற்படும் இயேசுவின் போதனை…வெளிப்புறத்தூய்மையை விட உள்புறத்தூய்மை அவசியம் என்பது மட்டுமல்ல….நம் உள்ளத்தில் உதிக்கும் அத்தனை நல்ல விஷயங்களும் அடுத்தவரோடு பங்கிடப்படவும் வேண்டும்.
    நாம் எப்படி? நல்லவர் என்று மார்தட்டுவதோடு நிற்கிறோமா? இல்லை “என்னுள் உள்ள அனைத்தும் பிறருக்கே” என்ற பெருந்தன்மையோடு செயல்படுகிறோமா?
    அழகான சிந்தனையைத் தூண்டும் தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete