Tuesday, October 15, 2019

அடையாளம் தெரியாத கல்லறைகள்

இன்றைய (16 அக்டோபர் 2019) நற்செய்தி (லூக் 11:42-46)

அடையாளம் தெரியாத கல்லறைகள்

நேற்றைய நற்செய்தி வாசகத்தில் கொஞ்சம் மென்மையாக பரிசேயர்களைச் சாடத் தொடங்கிய இயேசு அவர்களை இன்று அதிகமாகவே சாடுகின்றார்.

அவர்கள் வெளிப்புறச் சடங்கைக் கடைப்பிடிக்கும் அளவுக்கு உள்ளார்ந்த மதிப்பீடுகளைக் கடைப்பிடிப்பதில்லை என்றும், தங்களின் இருப்பு என்னவென்று தெரிந்தும் அதிகம் இறுமாந்து இருக்கிறார்கள் என்றும், மற்றவர்கள்மேல் சுமைகளைச் சுமத்தி தாங்கள் ஓய்ந்திருக்கிறார்கள் என்றும் சொல்கின்றார்.

'நீங்கள் முதன்மையான இருக்கைகளையும் மற்றவர்களின் வணக்கத்தையும் விரும்புகிறீர்கள்' என்று சொல்கின்ற இயேசு, 'நீங்கள் அடிப்படையில் மக்கள் ஏறிச்செல்லும் கல்லறைகள்' என்கிறார்.

கல்லறைகளை யாரும் ஒரு பொருட்டாகக் கருதுவதில்லை. கல்லறைகள் வெளிப்புறத்தில்; அழகாக இருந்தாலும் உள்ளே அழுகியிருப்பவை. கல்லறைகளுக்குள் செல்லும் யாரும் திரும்புவதில்லை.

இப்படியாக, யாரும் ஒரு பொருட்டாகக் கருதாமல், உள்ளுக்குள்ளே அழுகியிருக்கும், மற்றவர்களுக்கு விரக்தியைக் கொடுக்கும் பரிசேயர்கள் தங்களை முதன்மையானவர்களாகவும், அழகானவர்களாகவும், நம்பிக்கை தருபவர்களாகவும் காட்டுவதை இயேசு சாடுகின்றார்.

மொத்தத்தில், இல்லாத ஒன்றை இருப்பது போல காட்டுவது தவறு.

இதுவே இறுமாப்பு.

எடுத்துக்காட்டாக, நாம் சாப்பிடும் சிப்ஸ் - லேய்ஸ் - பாக்கெட்.

உள்ளே இருக்கும் சிப்ஸ் என்னவோ குறைவுதான். ஆனால், அதில் இருக்கும் காற்று அதிகம்.

நாம் கொடுக்கும் பணம் காற்றுக்குத்தான் அன்றி சிப்ஸூக்கு அல்ல.

இன்று, இல்லாததையும் இருப்பது போலக் காட்டினால்தான் மதிப்பு என்ற போலியான மதிப்பீட்டைத் தருகிறது இவ்வுலகம்.

ஆனால், இருப்பதில் நிறைவாக இருப்பதே இனிமை என்கிறார் இயேசு.


2 comments:

  1. இல்லாத ஒன்றை இருப்பது போல் காட்டுவது தான் ‘இறுமாப்பு எனில், அந்த ‘இறுமாப்புக்கு’ இன்று பஞ்சமில்லை.அங்கிங்கிங்கெனாதபடி எங்கும் போலித்தனம்...எதிலும் போலித்தனம்.நாம் விரும்புவதும் அதைத்தான் என்று ஒத்துக்கொண்டேயாக வேண்டும்.உதாரணமாக தந்தை காட்டியிருக்கும் லேய்ஸ்- சிப்ஸ்- பாக்கெட் குறித்த விளக்கம்....அதிலிருக்கும் உண்மை நம் கன்னத்தில் அறைவதாக உள்ளது.நாம் கொடுக்கும் காசு காற்றுக்கன்றி சிப்ஸுக்கல்ல.நமக்குத் தெரியாத்தல்ல.ஆனால் அதைப்பற்றி யோசித்திருக்கிறோமா? “ நீங்கள் அடிப்படையில் மக்கள் ஏறிச்செல்லும் கல்லறைகள்.” இன்று நம்மில். பலரைப்பார்த்து இயேசு சொல்லக்கூடிய வார்த்தைகள் தான் இவை.இல்லாத்தை இருப்பது போல் காட்டுவதை விடுத்து, இருப்பதில் நிறைவாக இருப்பதே இனிமை என்பதை உணர ஆரம்பிப்போம். சிறிய விஷயங்களை வைத்தே வாழ்க்கையின் பெரிய உண்மைகளைச் சொல்லும் தந்தைக்கு வாழ்த்துக்களும்! நன்றிகளும்!!!

    ReplyDelete