Wednesday, February 8, 2017

அவ(ர்க)ள் வெட்கப்படவில்லை

வெட்கம் - ஒரு வித்தியாசமான உணர்வு.

'இதைச் செய்ய உனக்கு வெட்கமாயில்லையா?' என்று இந்த வார்த்தையை அழுத்தமாகவும் பயன்படுத்தலாம்.

'போங்க...எனக்கு வெட்கமா இருக்க!' என்று இந்த வார்த்தையை ரொம்ப மெதுவாகவும் பயன்படுத்தலாம்.

அச்சம்இ மடம்இ நாணம்இ பயிர்ப்பு என்று சங்ககாலம் பெண்களின் உணர்வுகளைப் பட்டியலிடுகிறது. இவற்றில் நாணம் என்பதுதான் வெட்கம்.

நாளைய முதல் வாசகத்தில் 'ஆணும்இ பெண்ணும் ஆடையின்றி இருக்கின்றனர். ஆனால் அவர்கள் வெட்கப்படவில்லை.' நற்செய்தி வாசகத்தில்இ 'பிள்ளைகளின் உணவை எடுத்து நாய்களுக்குப் போடுவது நல்லதல்ல' என்று சொல்லி இயேசு தன்னை மறைமுகமாக 'நாய்' என அழைத்தாலும்இ சிரிய பெனிசியப் பெண் வெட்கப்படவில்லை.

'இதுதான் நான்!' என்று சொல்பவர்கள் வெட்கப்படத் தேவையில்லை. இப்படிப்பட்ட ஒரு வெட்கம் இல்லாத நிலைதான் அகுஸ்தினாரைஇ 'கன்ஃபஷென்ஸ்' என்ற நூல் எழுத தூண்டியிருக்க வேண்டும்.

'இதுதான் நான் - ஆனால் இப்படி இருப்பதை நான் உனக்கு தெரிவிக்க விரும்புவதில்லை' என்று சொல்பவர்கள்தாம் வெட்கப்படுவார்கள்.

'இதுதான் நான்!' என்று நாம் நம்மையே எப்போது காட்டுகிறோம்?

இறைவன் முன்னிலையிலும்இ நமக்கு நெருக்கமானவர்கள் முன்னிலையிலும்.

இவ்விரண்டு பேரும் நம்மை இருப்பது போல ஏற்றுக்கொள்கின்றனர்.

'அவமானம்' என்ற உணர்வு 'வெட்கம்' என்ற உணர்வோடு சேர்ந்தே போகிறது.

மிஷல் ஃபூக்கோ என்கிற மெய்யியல் அறிஞர்இ 'நாம் ஒரு வீட்டில் இருக்கிறோம். அந்த வீட்டின் சாவித்தூரம் வழியாக அடுத்தவர்கள் நம்மை பார்த்துக்கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் பார்க்கிறார்கள் என்ற அவமானமும்இ அதனால் வரும் வெட்கமும்தான் நாம் கொண்டிருக்கின்ற மரபுஇ பாரம்பரியம்இ கலாச்சாரம்இ நாகரீகம் அனைத்திற்கும் காரணம்' என்கிறார்.

'இதுதான் நான்!' என்று என்னையே அறிந்து கொள்ளஇ ஏற்றுக்கொள்ள முடிந்தால் எத்துணை நலம்!

2 comments:

  1. " வெட்கம்".. நம்மைப் பார்க்கக்கூடாத நிலையில் ஒருவர் பார்த்தால் நமக்கேற்படும் உணர்வே வெட்கம். தந்தை கூறுவதுபோல் " அவமானம்" எனும் உணர்வும் இதோடு கைகோர்த்து வருவதால், பொதுவாக இது ஒரு எதிர்மறையான உணர்வாக பார்க்கப்படுகிறது.ஆனால் "நாணம் " என்பது புளங்காகிதம் ஏற்படும் போது நமக்குள் பிறக்கும் ஒரு மென்மையான, அழகான உணர்வு.பொதுவாக இந்த உணர்வுக்குச் சொந்தமானவர்கள் பெண்களே! "ஆணும்,பெண்ணும் ஆடையின்றி இருந்தும் அவர்கள் வெட்கப்படவில்லை" எனில் அவர்கள் இறைவனின் வார்த்தையை மீறாத நேரம் அது.அதுவே அவர்கள் விலக்கப்பட்ட கனியை உண்ட பிறகு தங்களின் நிர்வாணத்தை இலை,தளைகளால் மூடிக்கொண்டனர் என்கிறது விவிலியம்." "இதுதான் நான்" என்று சொல்பவர்கள் வெட்கப்படத்தேவையில்லை என அழகாகவும்,திண்ணமாகவும் கூறும் தந்தை அவரது கூற்றுக்கு உறுதி சேர்க்க புனித அகுஸ்தினாரை துணைக்கழைத்திருப்பது விவேகம்.எப்பொழுதுமே ஒருவர் இறைவன் மற்றும் தனக்கு நெருக்கமானவர்கள் முன்னிலையில் இருப்பது போல் எந்த செயற்கைப்பூச்சுமின்றி நாம் நாமாக இருந்தால் வெட்கம்,அவமானம் போன்ற உணர்வுகள் நம்மை விட்டு தூரத்தில் ஒதுங்கியே இருக்கும்! அழகானதொரு பதிவைத் தந்த தந்தைக்கு வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  2. அருமையான பதிவு சாமி ...Feel like reading the book confessions.. என்ன , Comma வரவேண்டிய இடத்துல லாம் 'இ' வந்துருச்சு.

    ReplyDelete