
அல்லல் உழப்பதாம் நட்பு.'
(குறள் 787)
விளக்கம்: அழிவைத் தரும் தீமைகளிலிருந்து நீக்கி, நல்ல வழியில் நடக்கச் செய்து, அழிவுவந்த காலத்தில் உடனிருந்து துன்பப்படுவதே நட்பாகும்.
நட்பின் தன்மையும், பண்பும் பற்றி இப்படித்தான் எழுதுகிறார் திருவள்ளுவர்.
நாளைய முதல் வாசகத்தில் (காண். சீராக் 6:5-17) நான்கு வகையான நண்பர்களைப் பற்றி எழுதுகின்றார்:
அ. தன்னலம் தேடும் நண்பர்கள்
இவர்கள் உனக்கு கஷ்டமான நேரத்தில் உன் உடன்வர மாட்டார்கள்.
ஆ. பகைவர்களாய் மாறும் நண்பர்கள்
உன்னுடன் இருந்து உன் நல்லது கெட்டதை அறிந்து கொண்டு, உன் நிழல் பகுதியைப் பற்றி மற்றவர்களிடம் பேசி உன் பெயரைக் கெடுத்துவிடுவார்கள்.
இ. விருந்துண்ணும் நண்பர்கள்
நீ நல்ல நிலையில் இருக்கும் போது உயிருக்கு உயிராய் உன்னுடன் இருப்பார்கள். தாழ்ந்துவிட்டால் உன் முகத்தில் விழிக்க மாட்டார்கள்.
ஈ. நம்பிக்கைக்குரிய நண்பர்கள்
பாதுகாப்பான புகலிடம் போன்றவர்கள். இவர்கள்தாம் நீ கண்டுகொள்ளும் புதையல்கள். இவர்களின் தகைகை (கேரக்டர்) அளவிட முடியாதது. இவர்கள் நலம்தரும் மருந்து போன்றவர்கள்.
இந்த நான்காம் வகை நண்பர்களைக் கண்டறிய ஒரு குணம் மட்டும் போதும். அது என்ன?
'ஆண்டவருக்கு அஞ்சுவோரே இத்தகையை நண்பர்களைக் கண்டடைவர்' என்கிறார் சீராக்.
மேலும் 'ஆண்டவருக்கு அஞ்சுவோரே முறையான நட்பைப் பேணுவர். அவர்களின் நண்பர்களும் அவர்களைப் போலவே இருப்பர்.'
என்னைச் சுற்றி இருக்கும் நண்பர்களில் யார் யார் எந்த கட்டத்திற்குள் வருவார்கள் என்று ஆராய்ச்சி செய்வதை விட்டுவிட்டு, ஒவ்வொரு நட்பிலும் நான் எத்தகையவராய் இருக்கிறேன்? என்று நான் என்னையே ஆராய்ந்தால் நலம்.
நிற்க.
நட்பு - மிக இனிமையான அனுபவம்.
கூடப் பிறந்தவர்கள் மற்றும் உறவினர்கள் எல்லாம் நம்மேல் திணிக்கப்படுபவர்கள். நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் அவர்கள் நம்முடன் இருந்தே தீருவார்கள்.
ஆனால், நண்பர்கள் அப்படி அல்லர்.
அவர்களை நாம் தேர்ந்து கொள்ளலாம்.
நல்ல நண்பர்கள் நமக்குக் கிடைக்க ஒரே வழி, 'நாம் நல்ல நண்பர்களாக இருப்பதுதான்!'
தாவீது-யோனத்தான், கோப்பெருஞ்சோழன்-பிசிராந்தையார், காரல் மார்க்ஸ்-எங்கெல்ஸ் என வரலாற்றில் நாம் காணும் நல்ல நட்பு ஏராளம்.
இரத்த உறவையும், திருமண உறவையும் தாண்டிய உறவுதான் நட்பு.
அந்த நட்பு உறவே உடன்படிக்கை உறவு.
அழகானதொரு பதிவு.'நட்பு' எனும் சொல்லே அரிதாகிப் போன நேரத்தில் அழகான நட்பைப்பற்றி சிலாகிக்கிறார் தந்தை." ஆண்டவருக்கு அஞ்சுவோரே பாதுகாப்பான புகலிடம்,அரிய புதையல்கள் போன்ற நண்பர்களைக் கண்டடைவார்கள்" என சீராக்கின் வரிகள் எடுத்து வைப்பதாக முன் வைக்கிறார் தந்தை.இந்த "ஆண்டவருக்கு அஞ்சுவோரே" எனும் வார்த்தை நட்பில் இணைந்துள்ள இருவருக்குமே பெருமை சேர்ப்பதாக உணர்கிறேன்."கண்டிப்பாக இரத்த உறவையும்,திருமண உறவையும் தாண்டிய உறவுதான் நட்பு" எனும் வார்த்தைகள் யாருக்குமே உடன்பாடாகத்தான் இருக்கும்." யாரென்று புரியாமல்,பேர்கூடத் தெரியாமல் சொந்தமாகிப்போவதே நட்பு" . நம் கண்ணீர் துடைக்கும் கையாக,சாய்ந்து கொள்ள ஒரு தூணாக இருப்பதே நட்பு.இப்படி நட்பு குறித்து சொல்ல பல நல்ல விஷயங்கள் உள்ளன என்பது நட்பைச் சுவைத்தவர்களுக்கு மட்டுமே தெரியும். நல்ல நட்புக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர்களில் சிலரைத் தந்தை இங்கே கோடிட்டு காட்டியுள்ளார்.இப்படிப்பட்ட ஒரு 'நட்பு உறவு உடன்படிக்கை உறவாக'மாறினால் "நாமும் ஆண்டவருக்கு அஞ்சுவோரே!".அழகானதொரு நட்பு குறித்த கவிதை படைத்த தந்தைக்கு ஒரு 'சபாஷ்!'
ReplyDeleteNice reflection Dr
ReplyDeleteநம்பிக்கைக்குரிய நண்பர்கள்
ReplyDeleteபாதுகாப்பான புகலிடம் மட்டும் அல்ல. அவர்கள் கடவுளின் கொடை. நல்ல நண்பர்களை கொண்டவர்களுக்கு இவ்வுலகில் எதுவும் குறைவுபடாது. பாராட்டுக்கள் Fr.Yesu.
This comment has been removed by the author.
ReplyDelete