Monday, February 13, 2017

புரியவில்லையா

'இன்னும் உங்களுக்குப் புரியவில்லையா?' (காண். மாற்கு 8:14-21)

என்று நாளைய நற்செய்தியில் கேட்கின்றார் இயேசு.

'புரியவில்லையா?' - எல்லா மொழிகளிம் பயன்படுத்தப்படும் அதிகமான சில வார்த்தைகளில் ஒன்று இது.

இந்தக் கேள்வி வித்தியாசமான கேள்வி.

இந்தக் கேள்விக்கு விடையாக 'ஆம்' என்று சொன்னாலும் குழப்பமாக இருக்கும். 'இல்லை' என்று சொன்னாலும் குழப்பமாக இருக்கும்.

இயேசு தன் சீடர்களிடம் பரிசேயர்களின் புளிப்பு மாவு பற்றிச் சொல்கின்றார். சீடர்கள் அப்பத்தைப் பற்றி நினைத்துக்கொண்டிருக்கின்றனர்.

பேசுபவரும் கேட்பவரும் ஒரே தளத்தில் இருக்கும்போதுதான் தகவல் பரிமாற்றம் சாத்தியமாகிறது.

இயேசு நிற்கும் தளமும் சீடர்கள் நிற்கும் தளமும் ஒன்றாக இல்லை. ஆகையால் தகவல் சிதறுகிறது.

புரிந்து கொள்வதற்கு இரண்டு அடிப்படை தேவைகளை முன்வைக்கின்றார் இயேசு:

அ. மழுங்காத உள்ளம். அதாவது கூர்மையான உள்ளம். தயாரான உள்ளம்.

ஆ. பார்க்கின்ற கண்கள், கேட்கின்ற காதுகள். அதாவது ஒவ்வொரு உறுப்பும் தான் செய்ய வேண்டிய வேலையைச் சரியாகச் செய்ய வேண்டும்.

இயேசுவைப் புரிந்துகொள்ள மட்டுமல்ல, நாம் ஒருவர் மற்றவரைப் புரிந்துகொள்ளவும் இவைகள் அடிப்படையே.


2 comments:

  1. Anonymous2/13/2017

    Good evening Yesu

    ReplyDelete
  2. பல நேரங்களில் நம் அன்றாட வாழ்வில் நிகழும் ஒரு விஷயத்தைப் பிரதிபலிக்கிறது இன்றையப் பதிவு.சமயங்களில் இரு நபர்களுக்கிடையே நடைபெறும் உரையாடலின் முடிவில் பேசியதும்,கேட்டதும் என்ன என்று சம்பந்தப்பட்ட இரு நபர்களுக்குமே தெரியாமல் போவதையும் பார்த்திருப்போம்.இன்னும் சில சமயங்களில் நம்மிடம் கூறப்படும் விஷயத்தையன்றி, நமக்கு எது வேண்டுமோ அதுவே நம், செவிகளில் விழுவதையும் உணர்ந்திருப்போம்.ஒரு சம்பாஷணையின் முடிவில் சம்பந்தப்பட்ட இருவருக்கும் அது திருப்தியளிக்க வேண்டுமெனில் " பேசுபவரும்,கேட்பவரும் ஒரே தளத்தில் இருக்க வேண்டும்" என்கிறார் தந்தை. பேசவருபவர் என்ன தான் சொல்கிறார் என்பதைக் கேட்கும் திறந்த மனது வேண்டும் கேட்பவருக்கு.ஆம்! பல சமயங்களில் நாம் பேசிய விஷயங்களின் முடிவில் 'ம்ம்ம்....என்ன சொன்ன? திரும்பச் சொல்லு' என்று கூறியவர்களையும் நாம் பார்த்திருப்போம்.அம்மாதிரி சமயங்களில் எதிரே உள்ளவருக்கு ' நாமோ,நம் பேச்சோ இவருக்கு முக்கியமில்லை போல' எனும் செய்தியைக் கொடுத்தவராவோம். இங்கு பேசுபவரைவிட அதைக்கேட்பவருக்கே அதிகம் பொறுப்பு உள்ளது போல் தோன்றுகிறது.ஆம்! இயேசுவை மட்டுமின்றி நாம் ஒருவரை மற்றொருவர் புரிந்து கொள்ளவும் நம் உடம்பின் அத்தனை உறுப்புக்களும் ஒன்றோடொன்று இணைந்து செயல்பட வேண்டுவது அவசியம் என்பதைப் புரிந்து கொள்வோம்.மக்களை மாக்களிடமிருந்து பிரித்துக்காட்டுவதே இந்தப் 'புரிதல்' தான் என்பதை உணருவோம்! மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ இன்றியமையாத ஒரு விஷயத்தைத் தந்த தந்தையை இறைவன் நிறைவாக ஆசீர்வதிப்பாராக!!!

    ReplyDelete