Friday, February 3, 2017

கோதுமை மணி

நாளை தூய அருளானந்தரின் திருநாளைக் கொண்டாடுகிறோம்.

ஓரியூரின் ஒளிவிளக்காய் திகழ்ந்து மதுரை மற்றும் சிவகங்கை மறைமாவட்டங்களின் பாதுகாலராய் திகழும் அஞ்சா நெஞ்சரின் திருநாள்.

நாளைய நற்செய்தி வாசகத்தில் 'கோதுமை மணி' உருவகத்தை வாசிக்கின்றோம்: 'கோதுமை மணி மண்ணில் விழுந்து மடிந்தால் ஒழிய...'

1. கோதுமை மணி மண்ணில் விழுந்து மடிய வேண்டும்.
2. தம் வாழ்வைப் பொருட்டாகக் கருதாதவராக இருக்க வேண்டும்.
3. என்னை (இயேசுவை) பின்பற்ற வேண்டும்.

கோதுமை மணி

இயேசு சொல்லும் இந்த உருவகம் ஒரு விவசாய உருவகம். நாம் விவசாயம் செய்து விதைகள் விதைக்கும் போது, நாம் செய்யும் விவசாயத்தின் நோக்கம் நாம் தெளிக்கும் விதைகள் எல்லாம் நம் வயலின் மேல் கிடந்து அதை அலங்கரிக்க வேண்டும் என்பதா? இல்லை. விதைக்கப்படுகின்ற விதைகள் போராட வேண்டும். முதலில் விதை மண்ணோடு போராட வேண்டும். மண்ணைத் துளைத்து உள்ளே சென்று தன்னையே மறைத்துக் கொள்ள வேண்டும். இரண்டாவதாக, தன்னை மறைத்துக் கொள்ளும் விதை மடிய வேண்டும். தன் இயல்பை முற்றிலும் இழக்க வேண்டும். மூன்றாவதாக, அதே போராட்டத்துடன் மண்ணை முட்டிக் கொண்டு மேலே வர வேண்டும். இந்த மூன்று நிலைகளில் ஏதாவது ஒரு நிலையில் விதையின் போராட்டம் தடைபட்டாலும் விதை பயனற்றதாகிவிடுகிறது. 'இல்லை! நான் என்னை மறைக்க மாட்டேன். கீழே போக மாட்டேன். என்னை எல்லாரும் பார்க்க வேண்டும்!' என்று அடம்பிடித்தால் வானத்துப் பறவைக்கு உணவாகிவிடும். அல்லது கதிரவனின் சூட்டில் கருகிவிடும். மடிய மறுத்தாலோ அல்லது போராடி உயிர்க்க மறுத்தாலோ அது மட்கிப்போய் விடுகிறது. இயேசுவின் வாழ்வையும் விதையின் இந்த போராட்டத்தைப் போலத்தான் இருக்கிறது: பாடுகள் படுகின்றார், இறக்கின்றார், உயிர்க்கின்றார். இயேசுவைக் காண விரும்பும் நம் மனநிலையும் இப்படித்தான் இருக்க வேண்டும். கோதுமை மணி போல மடிவது என்றால் நம் உயிரை மாய்த்துக்கொள்வது அல்ல. நாம் எதற்காக படைக்கப்பட்டோமோ அந்த நோக்கத்தை நிறைவேற்றுவது. நாம் விதியினாலோ. இயற்கையின் விபத்தினாலே வந்தவர்கள் அல்லர். நம் ஒவ்வொருவருக்கும் ஒரு நோக்கம் இருக்கிறது. வெறும் ஐந்து ரூபாய் கொடுத்து 10 நிமிடம் செல்லும் பயணத்திற்கே இலக்கும் நோக்கமும் இருக்கிறது என்றால் பல வருடங்கள் பயணம் செய்கின்ற நம் வாழ்க்கைப் பயணத்திக்கு இலக்கும், நோக்கமும் இல்லாமல் இருக்குமா? இயேசுவின் சீடர்கள் என்று சொல்லிக்கொள்ளும் வாழ்க்கை 'சராசரி' வாழ்க்கையாக இருந்துவிடக் கூடாது. நம் முழு ஆற்றலும் வெளிப்படுகின்ற வகையில் நம் வாழ்க்கை ஓட்டம் அமைய வேண்டும். மாணவராக இருக்கிறோமா! முழு அர்ப்பணத்துடன் படிக்க வேண்டும். டாக்டராக, ஆசிரியராக, அன்றாட கூலியாக நாம் என்னவாக இருந்தாலும் அதில் நாம் முழுமையாக மடிய வேண்டும். பலன் தர வேண்டும்.

2. தமக்கென்று வாழ்வோர் - தமக்கென்று வாழாதோ

இரண்டாவதாக, இயேசு இரண்டு வகை மனிதர்களைக் குறிப்பிடுகின்றார்: 'தமக்கென்று வாழ்வோர் தம் வாழ்வை இழந்து விடுகின்றனர்', 'தம் வாழ்வை ஒருபொருட்டாகக் கருதாதவர் நிலைவாழ்வு பெறுகின்றனர்'. இரண்டும் ஒன்றிற்கொன்று தொடர்பு இல்லாததுபோல இருக்கிறது. இரண்டாவது வாக்கியம் லாஜிக் படி பார்த்தால், 'தமக்கென்ற வாழாதோர்' என்றுதானே இருக்க வேண்டும். இயேசுவின் இந்தப் போதனையின் நோக்கம் நாம் நமக்காக வாழ வேண்டுமா அல்லது பிறருக்காக வாழ வேண்டுமா என்பதல்ல. மாறாக, வாழ்வின் மேலான நம் கண்ணோட்டம் எப்படி இருக்க வேண்டும் என்பதுதான். 'ஒருவர் உலகம் முழுவதும் தமதாக்கிக் கொண்டாலும், தன் வாழ்வை இழந்து விட்டால் அதனால் வரும் பயன் என்ன?' (மத்தேயு 16:26) என்னும் இயேசுவின் போதனை இப்போது முரண்படுகிறது போல தெரிகிறதல்லவா! வாழ்வை ஒரு பொருட்டாகக் கருதாதது என்றால் சரியாகக் குளிக்கக் கூடாது, நல்ல டிரஸ் போடக்கூடாது, எம்.பி.3 ப்ளேயரில் பாட்டுக் கேட்கக் கூடாது என்பதல்ல. மாறாக, எதற்கும் நான் உரிமையாளன் அல்ல என்ற நிலையில் வாழ்வது. நாம் நம் வாழ்விற்கும், நம் உயிருக்கும், நம் உறவுகளுக்கும் கண்காணிப்பாளர்கள் தாம். நம் மேலும், நம் உறவுகள் மேலும் நமக்கு உரிமையில்லை. நம் வாழ்வில் அருட்பணி நிலையில் ஒரு பங்கோ, பொதுநிலை வாழ்வில் கணவனோ, மனைவியோ, பிள்ளைகளோ தரப்பட்டிருக்கிறது என்றால் அவர்கள் மேல் ஆட்சி செலுத்துவதற்கும், உரிமை கொண்டாடுவதற்கும் அல்ல. மாறாக, கண்காணிப்பதும், பராமரிப்பதும் தான் நம் வேலை. 'எது இன்று உன்னுடையதோ, அது நாளை வேறொருவனுடையது!' என்ற கீதையின் சாரமும் இங்கே நினைவுகூறத்தக்கது. எதன்மேலும் உரிமையில்லை என்பதற்காக, 'வந்த மாட்டையும் கட்ட மாட்டேன், போன மாட்டையும் தேட மாட்டேன்' என்ற கண்டுகொள்ளாத மனநிலையிலும் இருந்துவிடக்கூடாது.

3. எனக்குத் தொண்டு செய்வோர் என்னைப் பின்பற்றட்டும்

இயேசுவின் சீடரோ அல்லது இயேசுவைக் காண விரும்புவரோ இருக்க வேண்டிய இடம் இயேசு இருக்கும் இடம்தான். ஒழுக்கம் என்றால் என்ன? 'இருக்க வேண்டிய இடத்தில் இருக்க வேண்டிய பொருள் இருப்பதும், செய்ய வேண்டிய நேரத்தில் செய்ய வேண்டிய வேலையைச் செய்வதும்தான்!' உதாரணத்திற்கு, படிக்கின்ற மாணவர்கள் திங்கள் கிழமை காலை 10 மணிக்கு வகுப்பறையில் இருக்க வேண்டும் என்பது ஒழுக்கம். அதே மாணவர்கள் திங்கள் கிழமை 10 மணிக்கு தியேட்டரில் இருந்தால் அது ஒழுங்கீனம். இயேசு இருக்க வேண்டிய இடத்தில் அவரைத் தேடுவோரும் இருப்பதும், இயேசு கொண்டிருந்த மனநிலையைக் கொண்டிருப்பதும் தான் ஒழுக்கம். இயேசுவைப் பின்பற்றுவது என்றால் என்ன? பின்பற்றுவது அல்லது ஃபாலோ செய்வது என்றால் உடனடியாக நம் நினைவிற்கு வருவது டுவிட்டர்தான். டுவிட்டரில் நாம் சிலரைப் பின்பற்றுகிறோம். அல்லது சிலர் நம்மைப் பின்பற்றுகிறார்கள். நாம் யாரைப் பின்பற்றுகிறோமோ அவர்களின் கருத்தியலைப் பகிர்ந்து கொள்கிறோம் என்றுதான் அர்த்தம். அரசியல், விளையாட்டு, சினிமா, ஆன்மீகம், படிப்பு, வேலை என எல்லாத் தளங்களிலும் நாம் சிலரைப் பின்பற்றுகிறோம். நாம் பின்பற்றும் நபர்கள் நம்மையறியாமலேயே நம்மில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகின்றனர். டுவிட்டரில் அடுத்தவர்களைப் பின்பற்றுவதற்கு மெனக்கெடும் நாம் இயேசுவைத் தேடுவதற்கும், பின்பற்றுவதற்கும் மெனக்கெடுவதில்லை என்பதுதான் வேதனையான விஷயம். அன்று கிறிஸ்தவராக மாறுவது கடினம். ஆனால் வாழ்வது எளிது. இன்று, கிறிஸ்தவராக மாறுவது எளிது. ஆனால், வாழ்வதுதான் கடினம்.

அருளும், ஆனந்தமும் தரட்டும் இந்தக் கோதுமை மணி!

4 comments:

  1. புனித அருளானந்தருக்குப் புகழ் சேர்க்கும் ஒரு பதிவு. கோதுமை மணியின் வாழ்க்கை வரலாற்றைத் தந்தைக் கையாண்டுள்ள விதத்தில் ஒரு தாவரவியல் நிபுணரின் தேர்ச்சி தெரிகிறது." நாம் விதியினாலோ,விபத்தினாலோ வந்தவர்கள் அல்லர்; ஒவ்வொருவருக்கும் ஒரு நோக்கம் உள்ளது."..... அருமை.தந்தை குறிப்பிடும் இரண்டாவது விஷயம்..."நம்மைச்சுற்றியுள்ள அனைத்தும் நம்முடையது போல் தோற்றத்தைக் கொடுத்தாலும் எதுவுமே நம்முடையதில்லை".., முரண்பாடாக இருக்கிறதே! ஆம்! இந்த இடத்தில் நமக்குக் கைகொடுக்கக்கூடியது..." எது இன்று உன்னுடையதோ அது நாளை வேறொருவருடையது" எனும் கீதையின் சாராம்சம் மட்டுமே! தந்தை மூன்றாவதாக வைக்கும் அந்தப் பாய்ண்ட்.... நெற்றிப்பொட்டில் யாரோ சுட்டது போல் ஒரு உணர்வைத்தருகிறது.ஆம்! அன்று கிறிஸ்துவராக மாறுவது கடினம்; ஆனால் வாழ்வது எளிது.இன்று கிறிஸ்துவராக மாறுவது எளிது; ஆனால் வாழ்வது கடினம்" ஒரு வாரம் முன்பு புனித செபஸ்தியார் திருவிழாத் திருப்பலி நிகழ்த்திய ஒரு யேசு சபைத்தந்தை... குடும்பத்தை எதிர்த்து மதம் மாறியவர் " நாங்கள் எல்லாம் போராடி வந்த கிறிஸ்துவர்கள்; ஆனால் நீங்கள் எளிதாக வந்த பிறவிக்கிறிஸ்துவர்கள்" என்றார்.உண்மைதான் தானாகத் திணிக்கப்படும் எதுவுமே அதன் மதிப்பை இழந்து விடுகிறது. பிறவிக் கிறிஸ்துவராக இல்லை; வாழும் கிறிஸ்துவர்களாக மாறுவோம்.நம் ஒவ்வொருவருக்குமே இந்த 'கோதுமை மணி' ஒரு பாடமாக அமையட்டும்.அருளையும்,ஆனந்தத்தையும் அள்ளி வழங்கட்டும் அந்த " ஓரியூரின் ஒளி விளக்கு." தந்தைக்கும், அனைவருக்கும் திருவிழா வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  2. Anonymous2/04/2017

    Happy Feast Day Dr

    ReplyDelete
  3. GITA - New York

    Dear Fr. YESU:

    I sat up to read your thoughts on St John de Britto this evening.
    As a Martyr-Saint, he must not be exclusively owned and celebrated by Madurai or Ramnad alone.

    In fact, this Saint belongs to every part of India.
    The entire Christian community.

    There is a famous parish, dedicated to honor the Saint, in the Diocese of Kollam, in Kerala.
    There is history even that he traveled to Quilon.
    As a Portuguese, he might surely have made trips to Kerala to meet with his Portuguese compatriots in settlements.
    We do take trips - don't we?
    Yesu to Madurai?
    Mary to Chennai?
    Joseph to Bethlehem?
    And me to..?

    Ordinary people these days become evangelists and missionaries for Jesus.
    At the end of the journey, their ministry of preaching fills their coffers and barns.
    Thus they get rich and famous:
    Lands to own, Toyota Innovas to roam about and heal, institutions to rule over and authority to flaunt with.
    All in the name of the Lord.

    In the case of this John, it was the other way around.
    He belonged to a royal family in Lisbon, Portugal.
    He was University [of Coimbra] - educated.
    His father was the associate to the Viceroy of Brazil.
    He was a known personally to the King of Portugal.
    But he emptied himself for the people.

    Also, St Britto didn't just go about baptizing and offering Masses.
    Here is an instance from his life.
    Now this is history:

    In 1683 [10 years before he was murdered in Oriyur!] he writes about the economic and political situation of his people:
    "Ekoji takes away from the cultivators fourth-fifths of all the produce.
    As it this were not enough, he enforces payment in cash, and as he is careful to fix the price himself much above what the owner can realize, it happens that the sale of the whole harvest is never enough to pay the tax.
    Accordingly, the cultivators are burdened with a crushing debt, and often they are obliged to prove their inability to pay, by submitting to barbarous tortures".

    What a "Socialist Jesuit" he was!

    Perhaps, St John de Britto challenges the current the crop of missionaries and evangelists in the noblest of lands he worked:
    To turn their sight away from “the shiny altars” and
    To heed the cry of Him who lies buried among His Sisters and Brothers,
    The cultivators,
    Their produce,
    The enforced payments of the structures,
    The price-fixing by third parties,
    The taxation patterns,
    The crushing debts,
    The barbarous tortures…
    To see these and more in the Eucharistic Jesus!

    ReplyDelete
  4. Veera punithar.... em mannil vilunthu payan thantha nalla vidhai... punithar vaalga... avar vali yaam Sella...

    ReplyDelete