Thursday, February 2, 2017

முறையல்ல

'உம் சகோதரர் மனைவியை நீர் வைத்திருப்பது முறையல்ல!' (காண். மாற்கு 6:14-29)

நாளை திருமுழுக்கு யோவானின் கொலை பற்றிய நற்செய்தியை வாசிக்கின்றோம்.

'மனம் மாறுங்கள்' என்ற செய்தியை விடுத்து, திருமுழுக்கு யோவான் பேசியதாக பதிவு செய்யப்படும் அவரின் வார்த்தைகள் இதுதாம்:

'உன் சகோதரர் மனைவியை நீர் வைத்திருப்பது முறையல்ல!'

ஜோசப் ப்ளேவியு அவரின் கருத்துப்படி இது ஒரு பெரிய குற்றச்சாட்டே அல்ல. ஏனெனில் அரசருக்கு தன் ஆளுகைக்கு உட்பட்ட அனைவர்மேலும் அனைத்து உரிமையும் கொள்ள அவருக்கு உரிமை உண்டு.

அவர் அரசர். அவ்வளவுதான். அந்த தகுதி போதும் அவருக்கு.
மேலும், ஏரோதியாவும் விரும்பிதான் ஏரோதுவோடு இருந்திருக்கிறார்.

ஆக, ஏரோது எந்த பலவந்தமும் செய்யவில்லை.

'உனக்கும் பிடிச்சிருக்கு. எனக்கும் பிடிச்சிருக்கு!' அவ்வளவுதான்.

'உனக்கும் பிரச்சினையில்லை. எனக்கும் பிரச்சினையில்லை!' அவ்வளவுதான்.

மேலும், ஒருதார முறை அந்த நாட்களில் புழக்கத்தில் இருக்க வாய்ப்பில்லை.

இயேசு தன் பணியை தொடங்க வேண்டும். திருமுழுக்கு யோவான் இறக்க வேண்டும். இந்த தேவையில் எழுதப்பட்ட ஒரு நிகழ்வாகத்தான் ஏரோது-ஏரோதியா-சலோமி-யோவான் நிகழ்வு அமைந்திருக்க வேண்டும் என்பது ஆசிரியர்களின் கருத்து.

நிற்க.

இந்த நிகழ்வு நமக்கு நிறைய வாழ்க்கைப் பாடங்களைக் கற்றுக்கொடுக்கின்றது:

'எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தாலும் நாம் ஒருபோதும் அந்த நேரத்தில் ப்ராமிஸ் செய்துவிடவே கூடாது!' - ஏரோது

'எனக்கு எதிராக பேசிய ஒருவரை நான் பழிவாங்கும் எண்ணம் கொண்டிருத்தல் கூடாது!' - ஏரோதியா

'அரங்கில் உள்ள அனைத்து விருந்தினர்களையும் மகிழ்வித்த, நடனமாடிய எனக்கு என் சொந்த புத்தி எங்கே போனது? நான் ஏன் எதற்கெடுத்தாலும் என் அம்மாவிடம் ஓட வேண்டும்?' - சலோமி

'அமைதியா இருக்க வேண்டிய இடத்துல அமைதியா இருக்கணும். பேச வேண்டிய இடத்துல மட்டும் பேசணும்!' - தி.யோவான்.

4 comments:

  1. கொஞ்சம் குழப்புகிற பதிவு தான்.அரசனுக்குத் தன் ஆளுமைக்குட்பட்ட அனைத்து மேலும் ஆதித்யம் செய்யும் உரிமை இருக்கலாம்.ஆனால் இதில் உயிருள்ள ஜீவன்களுமா அடக்கம்? ஆனாலும் ஏரோதியாவின் விருப்பத்துக்குட்பட்டுத்தான் ஏரோது அவளிடம் உரிமை பாராட்டினான் எனும் போது என் கூற்றும் அர்த்தமற்றதாகி விடுகிறது.ஆகவே அவன் சரியா..அவள் சரியா என்பதை விடுத்து நமக்குச் சொல்லப்படும் பாடம் என்ன என்பதை மட்டும் பார்ப்பது விவேகம்.ஆமாம்! ஏரோது,ஏரோதியா,சலோமி இவர்களின் எண்ண ஓட்டத்தில் நாம் கற்றுக்கொள்ளப் பாடங்களிருப்பினும் யோவான் வழியாக வரும் அந்த வார்த்தைகள்..." அமைதியா இருக்க வேண்டிய இடத்துல அமைதியா இருக்கணும்; பேச வேண்டிய இடத்துல மட்டும் பேசணும்!"..... ஆமாம் "யாகாவராயினும் நா காக்க" எனும் வள்ளுவரின் வார்த்தைகள் போதும் நம்மை அனைத்து இன்னல்களிலிருந்தும் காப்பாற்ற!'முறையல்ல' என்ற ஒரு செய்தியை 'முறையாக'ச் சொல்லும் தந்தைக்கு என் பாராட்டுக்கள்!!!

    ReplyDelete
  2. அமைதியாக இருக்க வேண்டிய இடத்தில் அமைதியாக இருதாலே பாதிபிரச்சனைகள் தீர்ந்துவிடும். மன அமைதியும் கிடைக்கும் என்பதை சிந்திக்க வைத்த தந்தைக்கு நன்றியும் வாழ்த்தும்.

    ReplyDelete
  3. அமைதியாக இருக்க வேண்டிய நேரத்தில் அமைதியாக இருந்தாலே பாதி பிரச்சனைகள் தானாக தீர்ந்து விடும்.மன அமைதியும் தானாக வந்துவிடும். அருமையான சிந்தனையை வழங்கிய தந்தைக்கு நன்றியும் பாராட்டும்.

    ReplyDelete
  4. Joseph plaveu is wrong...Herods' act is against his brother... Herod may satisfy his own conscience... he may be OK as far as herodia is concerned... but he has sinned against his brother's legitimate right...King or a peasant... God is angered when we do injustice to another person... who is silenced...and is powerless...

    ReplyDelete