Wednesday, February 22, 2017

அடிமையாகாதே

'உன் நாட்டங்களுக்கும், வலிமைக்கும் அடிமையாகாதே!'

(காண். சீராக் 5:1-8)

இரண்டு நாள்களுக்கு முன் நாம் வாசித்த சீராக்கின் அறிவுரைப்பகுதி தொடர்கிறது.

'நாட்டம்' என்பது இதயம் சார்ந்தது. 'வலிமை' என்பது உடல் சார்ந்தது. 'வலிமை' சில நேரங்களில் மனம் சார்ந்ததாகவும் இருக்கலாம்.

நாட்டம் மற்றும் வலிமை சீக்கிரம் மறையக்கூடியது.

உதாரணத்திற்கு, இன்று வெண் பொங்கல் மேல் இருக்கும் நாட்டம் நாளைக்கு இருக்காது.

இன்று எனக்கு இருக்கும் உடல் வலிமை நாளை இருக்காது.

ஆக, நிலையற்றவைகளுக்கு அடிமை ஆகிவிடக்கூடாது.

நிலையற்றவைகள்தாம் பல நேரங்களில் நிலையானவை போன்ற ஒரு மாயையை உருவாக்கிவிடுகின்றன. இந்தப் பின்புலத்தில்தான் இடறலாக இருக்கும் எந்த உறுப்பையும் வெட்டிவிடுமாறு சொல்கிறார் இயேசு.


4 comments:

  1. 2 கொரிந்தியர் 4:18 காண்பவை நிலையற்றவை; காணாதவை என்றென்றும் நிலைத்திருப்பவை.

    ReplyDelete
  2. பிறக்கவிருக்கும் தவக்காலத்திற்கு நம்மை இட்டுச்செல்லும் ஒரு பதிவு. சீராக்கின் அத்தனை வரிகளும் ஒரு பயத்தோடு கூடிய அறிவுரையைச் சொல்வது போல் தோன்றிடினும், இன்றைய சீரழிந்து வரும் தலைமுறையினருக்கு ஒரு எச்சரிக்கை மணியாகவும் ஒலிக்கிறது என்பதே உண்மை.இறைவன் எந்த அளவுக்கு இரக்கம் காட்டுகிறாரோ,அதே அளவுக்கு சினமும் காட்டக்கூடியவர் என்ற நினைவு நம்மிடத்தில் குடி கொண்டால் மட்டுமே இன்று உலகம் வலிமையென நினைக்கும் விஷயங்களை நாடிப்போவதை நாம் தவிர்க்கலாம். இரு கண்ணனுடையோராய் எரி நெருப்பில் விழுவதை விட குருடராய் நிலை வாழ்விற்குள் நுழைவது நல்லது போன்ற வார்த்தைகள் அச்சத்தையும்,எச்சரிக்கையையும் சேர்த்தே நம்முள் விதைக்கின்றன.அவர் சினம் நம்மேல் விழாது நம்மைக்காத்துக் கொள்வோம்; நிலையான வாழ்வைத்தெரிந்தெடுக்க தேவையான வார்த்தைகளை அண்மை காலங்களில் நம்முள் தூவி வரும் தந்தையை நல்ல உடல்,உள்ள சுகம் தந்து இறைவன் ஆசீர்வதிப்பாராக!

    ReplyDelete
  3. Anonymous2/23/2017

    Hi Yesu. Nice reflection

    ReplyDelete
  4. Anonymous2/23/2017

    Hi Yesu. Nice reflection

    ReplyDelete