Sunday, February 19, 2017

எவ்வளவு காலமாயிற்று?

'இது இவனுக்கு வந்து எவ்வளவு காலமாயிற்று?' என்று கேட்டார்.

அதற்கு அவர், 'குழந்தை பருவத்திலிருந்து இது இருந்து வருகிறது. இவனை ஒழித்துவிடத் தீயிலும் தண்ணீரிலும் பல முறை அந்த ஆவி இவனை தள்ளியதுண்டு. உம்மால் ஏதாவது செய்ய இயலுமானால் எங்கள்மீது பரிவு கொண்டு எங்கள்மீது பரிவு கொண்டு எங்களுக்கு உதவி செய்யும்' என்றார்.

(காண். மாற்கு 9:14-29)

நான் உரோமில் பங்குத்தலத்தில் இருந்தபோது ஞாயிறு மாலைத் திருப்பலிக்கு மனநலம் சரியில்லாத ஒருவரை அவரது அன்னை அழைத்துவருவார். அவருக்கு வயது எப்படியும் 40 இருக்கும். திருப்பலி நேரத்தில் திடீர் திடீரென்று சத்தம் போடுவார்.

சின்ன சத்தம் கேட்டாலும் அதைத் தொந்தரவு என நினைக்கும் எனக்கு (இப்ப இல்ல! அப்போ!) அவரது பிரசன்னம் சில நேரங்களில் நெருடலாக இருந்தது.

ஆனால் திடீரென்று ஒரு நாள் எனக்குள் ஒரு சிந்தனை வந்தது:

வாரத்திற்கு ஒரு நாள் 35 நிமிடம் அவரை நான் சந்திக்கின்றேன். அந்த 35 நிமிடங்களே என்னால் அவரை  ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆனால் அவரின் அம்மாவும், அப்பாவும், உடன் பிறந்தவர்களும் வருடம் முழுவதும் அவரை எப்படி ஏற்றுக்கொள்கிறார்கள்? என்னதான் தன் பிள்ளையாக, உடன்பிறப்பாக இருந்தாலும் அவர்களுக்கு கடவுள்மேல் ஏன் கோபமில்லை?

நாளைய நற்செய்தி வாசகத்தில் இப்படிப்பட்ட ஒருவர்தான் இயேசுவிடம் கொண்டுவரப்படுகின்றார்.

குழந்தை பருவத்திலிருந்து தீய ஆவியால் பிடிக்கப்பட்டிருந்த தன் மகனை இயேசுவிடம் அழைத்துவருகின்றார். அந்தப் பேய் அந்தச் சிறுவனை நெருப்பிலும், தண்ணீரிலும் தள்ள முயற்சித்த போதெல்லாம் இந்தத் தந்தைதான் அருகிருந்து பார்த்திருக்க வேண்டும்.

இவரின் பொறுமை எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது.

அதாவது, தன் குழந்தைக்கு ஒரு நாள் தீய ஆவி நீங்கும் என்று நம்புகின்றார். அந்த நம்பிக்கையில் நிலைத்து நிற்கின்றார்.

வாழ்க்கையை முழுமையாகப் பார்க்கின்ற ஒருவரால்தான் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருக்க முடியும்.

3 comments:

  1. அவரின் அம்மாவும், அப்பாவும், உடன் பிறந்தவர்களும் வருடம் முழுவதும் அவரை எப்படி ஏற்றுக்கொள்கிறார்கள்?//

    I recently had an appointment with the pediatrician for my little one's vaccination. I couldn't bear her crying. Then I was thinking how the parents of cancer kids are surviving.

    ReplyDelete
  2. " அந்தப் பேய் அந்தச்சிறுவனைத் தண்ணீரிலும்,நெருப்பிலும் தள்ள முயற்சித்த போதெல்லாம் இந்தத் தந்தைதான் அங்கிருந்து பார்த்திருக்க வேண்டும்" "தானாடா விட்டாலும் தன் சதை ஆடும்" என்பது இப்படிப்பட்ட உறவு குறித்துத் தான் என்பதில் ஐயமில்லை. வாழ்க்கையை முழுமையாகப் பார்க்கின்ற ஒருவரால் தான் அசைக்க முடியா நம்பிக்கை கொண்டிருக்க முடியும்."மழைக்காக வேண்டத்தொடங்கும்போதே குடையுடன் வந்த சிறுவனின் நம்பிக்கை" போன்றோருக்கே இறைவனும் செவிசாய்க்கிறார். நினைத்தவுடன் வருவதற்கு இது 'மேஜைக்' இல்லை என்று தந்தைக்கும் தெரியும். அன்று தங்களிடம் இல்லாத மனப்பக்குவம் இன்று கண்டிப்பாக வந்திருக்கும்.இல்லையா? "நம்பிக்கை தான் வாழ்க்கை", " நம்பியவர்களுக்குத்தான் கடவுள்" என்று சும்மாவா சொல்கிறார்கள்?
    தந்தைக்கும் அனைவருக்கும் பிறக்கும் வாரம் இனிதாய் அமைந்திட வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  3. We should really salute these people...

    ReplyDelete