Saturday, July 9, 2016

நீதிமொழிகள் - 22

'துன்பக் கதறல்,
துயரக் கண்ணீர்,
ஓயாத சண்டை,
ஒழியாத புலம்பல்,
காரணம் தெரியாமல் கிடைத்த புண்கள்,
கலங்கிச் சிவந்திருக்கும் கண்கள்
- இவை அனைத்தையும் அனுபவிப்பவர் யார்?
திராட்சை இரச மதுவில் நீந்திக் கொண்டிருப்பவர்களே!'

(நீமொ 23:29)

நீதிமொழிகள் நூல் ஆசிரியர் அதிகமாக முன்வைத்து அறிவுறுத்தும் மற்றொரு செயல் 'மது அருந்துவது.' திராட்சை மது அருந்துவது தேவையற்ற ஒரு செயலாகப் பார்க்கப்பட்டது.
மேற்கத்திய நாடுகளில் மது என்பது உணவு வகைகளில் ஒன்று என கருதப்படுகிறது. ஆனால், கீழைத்தேய மதங்களும், நாடுகளும் மதுவை விலக்கப்பட்ட பொருளாகவே கருதுகின்றன.

நம் தெய்வப்புலவர் திருவள்ளுவரும் தம் திருக்குறளில், 'கள்ளுண்ணாமை' பற்றி ஒரு அதிகாரம் முழுக்கப் பேசுகின்றார் (எண். 93).

இன்று நம் தமிழகத்தில் மது ஒழிப்பு தேவையா, இல்லையா என்ற விவாதம் ஒரு பக்கம் இருக்க, மற்ற பக்கம் சிலர் நன்றாகக் குடிக்கின்றனர். சிலர் குடிப்பதை நிறுத்துகின்றனர்.

மதுவினால் நன்மை ஒன்றும் இல்லை.

ஆக, அதை ஒதுக்குதல் நலம்.


1 comment:

  1. " துன்பக் கதறல், துயரக்கண்ணீர்,ஓயாத சண்டை,ஒழியாத புலம்பல்,காரணம் தெரியாமல் கிடைத்த புண்கள்,கலங்கிச் சிவந்திருக்கும் கண்கள்" ....இந்த வர்ணனை போதாதா குடிப்பவனின் சாபக்கேட்டை விவரிக்க? மேலை நாடோ,கீழை நாடோ குடித்துவிட்டுப்போகட்டும்....அவர்கள் குடிப்பது சமயங்களில் உண்டது செரிப்பதற்காக.ஆனால் உணவே குடிதான் என்ற நம்மவரின் அறியாமை விலகுவது எப்போது? நன்மை தராத ஒன்றை விலக்குவதுதானே விவேகம்?! உரக்கச் சொல்லும் தந்தைக்கும்,அனைவருக்கும் ஞாயிறு வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete