Saturday, July 23, 2016

மஞ்சள் பொண்ணு

ஆரப்பாளையத்திலிருந்து மாட்டுத்தாவணி செல்லும் பேருந்தில் ஏறினேன்.

நான் ஏறிய அடுத்த நிறுத்தத்தில் ஒரு பையனும், பொண்ணும் (வயது 24 முதல் 20க்குள்) ஏறினார்கள். நான் அமர்ந்திருந்த சீட்டில் ஓர் இடமும், எனக்குப் பின் உள்ள சீட்டில் ஓர் இடமும் என இரண்டு இடங்கள் இருந்தன.

நாம கஷ்டப்பட்டு இப்படி சீட் பிடிக்கும் நேரத்தில் எல்லாம் ஏதாவது பொண்ணு அல்லது அக்கா வந்து, 'கொஞ்சம் மாறி ஒக்காருங்க!' என்று சொல்வார்கள். எல்லார் முன்னிலையிலும் அவமானப்பட்டு(!) எழுந்து செல்ல வேண்டும்.

அந்தப் பொண்ணு சொல்றதுக்கு முன்னாடி நானே எழுந்திடலாம் என நினைத்து எழுந்தேன்.

அந்தப் பையன் அந்தப் பொண்ணிடம், 'பிரியங்கா! நீ அவர் அருகில் உட்கார்!' என்றார்.

எனக்கு சற்று ஆச்சர்யம்.

இந்தியா வல்லரசாகிவிட்டதா?

'சும்மா! உட்காரும்மா!' என்றார் மறுபடியும்.

நான் எழுந்துவிடலாம் என நினைத்துக் கொண்டிருந்த நொடியில் உட்கார்ந்து விட்டார்.

உதட்டோரம் சின்னப் புன்னகை.

மஞ்சள் கலர் சுடிதார் அணிந்திருந்தார். மற்றபடி வேறெதும் பார்க்காமல் நான் வாசித்துக் கொண்டிருந்த புத்தகத்தில் மூழ்கிவிட்டேன்.

இடையிடையே பின்னால் இருக்கும் பையன் இவரோடு பேசிக்கொண்டிருந்தார். பேச்சை வந்து அவர்கள் நாகர்கோவில் பக்கம் உள்ளவர்கள் என்று புரிந்து கொண்டேன்.

அவர்கள் இறங்குவதற்கு முன் உள்ள நிறுத்தத்தில் இறங்க வேண்டியிருந்ததால்,

'எக்ஸ்க்யூஸ்மி!' என்றேன். மஞ்சள் பொண்ணு எழுந்து வழிவிட்டார்.

'நன்றி!' என்று சொல்லிவிட்டு வீடு வந்தேன்.

குளித்துவிட்டு தலையைத் துவட்டியபோது, என் இடது காதோரம் சில முடிகள் நரைத்திருந்தன.

அந்த மஞ்சள் பொண்ணு என்னருகில் உட்கார்ந்ததன் அர்த்தம் வேகமாகப் புரிய ஆரம்பித்தது.


5 comments:

  1. என்னடா ..தந்தை இத்தனை பில்டப் கொடுக்கிறாரே என்று பார்த்தேன்.இறுதியில் இத்தனையும் காதோரமிருந்த ' சில நரைமுடி'களுக்காக என்று புரிந்த போது எனக்கு சிரிப்பதா இல்லை தந்தைக்காக பரிதாபப் படுவதா எனத் தெரியவில்லை. தந்தைக்குத் தெரியாமலிருக்க வாய்ப்பில்லை. முன்பெல்லாம் பித்த நரை,...அது,இதுவென்று சொன்ன விஷயங்களை இப்பொழுது 'இளநரை','அறிவு நரை' என்கிறார்கள்.இதில் ஏதாவதொன்றுக்காகத் தாங்கள் பெருமைப்பட்டுக்கொள்ளலாம்.அறிவின் முதிர்ச்சி நரையாக நுரைத்து வரும் அழகுக்கு மரியாதை செய்துள்ளனர் அந்த 'மஞ்சப் பொண்ணும்' பையனும். ' 'ஞானம்' ...இது தன்னை எத்தனை விதமாக வெளிப்படுத்துகிறது பார்த்தீர்களா? ஆனாலும் தங்களின் நகைச்சுவை உணர்வு கொஞ்சம் ஓவர்தான். வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  2. Anonymous7/24/2016

    Yesu Good noon and good blog too.
    Thanks yar

    ReplyDelete
  3. உங்களை யார் டை அடிக்காமல் வெளியே போக சொன்னது ? அவரு வேற " பிரியங்கா , அந்த அங்கிள் பக்கத்துல உக்காரு " ன்னு சொன்னாராமே .

    ReplyDelete
  4. உங்களை யார் டை அடிக்காமல் வெளியே போக சொன்னது ? அவரு வேற " பிரியங்கா , அந்த அங்கிள் பக்கத்துல உக்காரு " ன்னு சொன்னாராமே .

    ReplyDelete
  5. Fr. Yesu:

    As I read your blog, I too felt like sitting next to you [as that MANJAL PONNU} and traveling with you all those 7 miles from Aarappalayam to Mattuthavani. I am from Nagercoil myself.

    My "reason" for comfortable sitting with you isn't your nearly greying hair...No!

    I love books and love reading of them a lot.

    As I noticed you were long lost in your book, I felt a sense of friendship with you...

    Most men of your age WITHOUT BOOKS would have tended to "read" me with a dubious intent; You were, on the contrary, immersed in your academic scooping of ideas.

    Also, "the nagercoil varieties" tend to be a bit more daring in gender interactions, compared to their counterparts from Sivakasi, Devakottai, Melur or Mettur!

    In fact, I hope to find you on my return travel - seated next to me - from Mattuthavani to Arapalayam. I would even dare to ask you: "What are you reading about?" Who knows I might swoon and be charmed by your command of Madurai Tamil!

    ReplyDelete