'கர்ணன்' திரைப்படத்தில் ஒரு காட்சி உண்டு.
தகுந்த வேளையில் பலி கொடுப்பவர்களே போரில் வெல்வார்கள் என்று துரியோதனனுக்குச் சொல்லப்படும்.
சாஸ்திரங்கள் கற்றறிந்த பாண்டவர்களின் இளைய சகோதரன் சகாதேவனை நாடி வருவார் துரியோதனன். 'பலி கொடுப்பதற்கு தகுந்த நேரம் எது?' என்று அவர் கேட்க, இவரும் நேரம் குறித்துக் கொடுத்துவிடுவார்.
இப்படி பலி கொடுத்துவிட்டால் நிச்சயம் துரியோதனன் வெற்றி பெறுவார் என்ற கேள்விப்பட்ட பாண்டவர்கள், குறிப்பாக பீமன், சகாதேவன் மேல் கோபம் கொள்வார்கள்.
'இந்தத் தவற்றிலிருந்து எங்களைக் காப்பாற்றுங்கள்!' என்று பாண்டவர்களும், பாஞ்சாலியும் கண்ணனிடம் (கிருஷ்ணா) புலம்புவார்கள்.
அப்பொழுது கண்ணன் (கிருஷ்ண பரமாத்மா) சொல்வார்:
'உங்களின் எல்லாருடைய முட்டாள்தனத்திற்கும் ஈடுகொடுக்க நான் ஒருவன் கிடைத்துவிட்டேன்!'
நிற்க.
'மனிதர் தம் மடைமையாலேயே வாழ்க்கையைக் கெடுத்துக் கொள்வர். ஆனால் அவர்கள் ஆண்டவர்மீது சினங்கொண்டு குமுறுவர்' (நீமொ 19:2) என்கிறார் நீமொ ஆசிரியர்.

தன் தவறை உணராத ஒருவன் என்றுமே யார் மீது பழியைப் போடலாம் எனக் குமுறுகிறான். சில சமயங்களில் பல அப்பாவிகள் தெரிந்தும் தெரியாமலும் பலிகடாவாகிப் போகிறார்கள்.இப்படி மாட்டிக் கொண்டவர்களில் ஒருவர் தான் மகாபாரதத்தின் கிருஷ்ண பரமாத்மா என்கிறார் தந்தை.கடவுளர்களுக்கே இக்கதியெனில் நீங்களும் ,நானும் எம்மாத்திரம்? நம் தவறை ஒப்புக்கொள்ளும் பெரிய மனம் மட்டும் போதாது....நம்மை மாட்டிவிட நினைக்கும் கறுப்பாடுகளையும் இனம் கண்டுகொள்ளும் சாதுரியம் நமக்கு வேண்டும்.சிறிய வரிகளில் பெரிய விஷயத்தைச் சொல்லும் தந்தைக்கு நன்றிகள்!!!
ReplyDelete