Wednesday, July 6, 2016

நீதிமொழிகள் - 19

'கைக்கூலி கொடுப்பவர் அதை ஒரு மந்திரத் தாயத்தைப் போல பயன்படுத்துகிறார்.
அதைக் கொண்டு அவர் எடுத்த காரியமனைத்தையும் நிறைவேற்றுவார்'

'ஒருவர் கொடுக்கும் அன்பளிப்பு அவருக்கு நல்வழி பிறக்கச் செய்யும்.
அவரைப் பெரியோர்முன் கொண்டு போய்ச்சேர்க்கும்.'

(நீமொ 17:8, 16)

கைக்கூலி அல்லது கையூட்டு அல்லது இலஞ்சம் அல்லது அன்பளிப்பு கொடுத்து காரியத்தைச் சாதித்துக் கொள்வது சரியா அல்லது தவறா என்று சொல்லாத நீமொழி ஆசிரியர், கைக்கூலியும், அன்பளிப்பும் எப்படி காரியங்களைச் சாதிக்க வல்லவை என்பதைச் சொல்கின்றார்.

அவர் பயன்படுத்தும் உருவகம் 'மந்திரத்தாயத்து.'

கைக்கூலி மந்திரம் செய்யக் கூடியது.

கைக்கூலி அல்லது அன்பளிப்பு கொடுத்து காரியம் சாதிப்பவர்களை நாம் நேர்மையற்றவர்கள் என்று சொல்ல முடியுமா?

எந்த அளவுக்கு கைக்கூலி அல்லது அன்பளிப்பை நாம் பயன்படுத்தலாம்?

1 comment:

  1. எனக்குப் புரிந்த வரை கைக்கூலி கொடுப்பதையும்,பெறுவதையும் எதிர்மறையாகவும்,அன்பளிப்பு கொடுப்பதையும்,பெறுவதையும் நேர்மறையாகவும், நீதிமொழிகள் நூல் சொல்வதுபோல் தெரிகிறது. தவறெனில் தந்தை சுட்டிக்காட்டலாம்.குறுக்கு வழியில் ஒரு காரியத்தைப்பெற நாம் கொடுக்கும் கையூட்டு அல்லது லஞ்சத்திற்கும் ஒருவர் ஒரு நல்ல காரியம் செய்ய அவரை ஊக்குவிக்கவோ, இல்லை அவர் செய்த நல்லதொரு செயலைப் பாராட்டும் முகமாகவோ கொடுக்கும் அன்பளிப்பிற்கும் நிறைய வேறுபாடு உள்ளது. அதுவும் நம் அன்பளிப்பு அவருக்கு நல்வழி பிறக்கவும்,அவரைப் பெரியோர் முன் கொண்டுபோய் சேர்க்கவும் செய்யும் எனும்போது மாற்றுக்கருத்துக்கு என்ன தேவை? என்னைப் பொறுத்தவரை முன்னதை வெறுக்கவும், பின்னதை ஆதரிக்கவும் நம் மனத்தைப் பழக்க வேண்டும்.தந்தை என்ன நினைக்கிறார் தெரியவில்லை.தவறெனில் பொறுத்தருள வேண்டுகிறேன்.தந்தைக்கு வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete