'நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும்' என்பது முதுமொழி.
அதாவது, நாம் நினைப்பதும் நடப்பதும் ஒன்றோடொன்று ஒத்துப் போகாதபோது அதை தெய்வத்தின் செயல் அல்லது நினைப்பு என்று சொல்கிறோம்.
உதாரணத்திற்கு, அடுத்த ஞாயிறு நாம் பிக்னிக் போகலாம் என திட்டமிடுகிறோம். ஒவ்வொன்றாகத் தயாரிக்கிறோம். நண்பர்களை அழைக்கிறோம். இடத்தை, வாகனத்தை, உணவை ஏற்பாடு செய்கிறோம். ஆனால், அந்த வார இறுதியில் எதிர்பாராத விதமாக மழை பெய்ய ஆரம்பிக்கிறது. நம் திட்டம் கலைந்துவிடுகிறது.
இதை நாம் எப்படி எதிர்கொள்வது?
'மடியிலுள்ள திருவுளச் சீட்டை ஒருவர் குலுக்கிப் போடலாம்.
ஆனால், திருவுளத் தீர்ப்பை வெளிப்படுத்துபவர் ஆண்டவரே' (நீமொ 16:33) என்கிறார் நீமொ ஆசிரியர்.
அதாவது, நம் வாழ்வில் நடக்கும் நிகழ்வுகளில் ஒரு குறிப்பிட்ட அளவு வரைதான் நாம் அவற்றை கைக்குள் வைக்க முடியும். சில நேரங்களில் அவை கைமீறிப் போய்விடுகின்றன.
சீட்டு அல்லது தாயம் குலுக்கி விழுவதை 'பிராபபிலிட்டி தேற்றம்' வழியாக நாம் ஓரளவுக்குக் கணித்துவிடலாம். ஆனால், இறைவனின் திருவுளத்தை நாம் அறியவோ அதை மாற்றவோ நம்மால் முடிவதில்லை.
அதாவது, ஒன்று நடக்க வேண்டும் என இருந்தால் அது நடந்துதான் ஆகும்.
திறந்த மனம், குழந்தை உள்ளம் - இருந்தால் போதும்.

நம் உடலின்,உள்ளத்தின் புத்தி- யுத்தி அனைத்தையும் பனயம் வைத்து திட்டமிடும் ஒரு காரியம் நடைபெறாதபோது நம் வாய் முணுமுணுப்பது..." நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை." உப்பு விற்கப்போகையில் மழைபெய்வதையும்,மாவு விற்கப்போகையில் காற்றடிப்பதையும் தடுக்க இறைவனைத் தவிர யாரால் இயலும்? என்பது நம் மெத்தப்படித்தவர்களுக்கும் புரிய வேண்டுமென்பதற்காகவே சமயங்களில் திருவுளச்சீட்டும் பொய்த்து விடுகிறது. ஆம்! நம் கணிப்பையும் மீறி நடக்கும் விஷயங்களை ஏற்றுக்கொள்ளத் தேவை திறந்த மனமும்,குழந்தை உள்ளமும் ....என்கிறார் தந்தை.இதற்கு மேல் என்ன இருக்கிறது சொல்ல? எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது என்று ஏற்றுக்கொள்வோம். தந்தைக்கு நன்றிகள்!!!
ReplyDelete