Sunday, December 7, 2014

கடவுள் நம் உள்ளத்தில் வர!

பாலைநிலத்தில் ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்.
பாழ்நிலத்தில் கடவுளுக்காக நெடுஞ்சாலை ஒன்றைச் சீராக்குங்கள்.
பள்ளத்தாக்கு எல்லாம் நிரப்பப்படும்.
மலை, குன்று யாவும் தாழ்த்தப்படும்.
கோணலானது நேராக்கப்படும்.
கரடு முரடானவை சமதளமாக்கப்படும்.
ஆண்டவரின் மாட்சி வெளிப்படுத்தப்படும்.
மானிடர் அனைவரும் ஒருங்கே இதைக் காண்பர்.
(காண்க எசாயா 40:1-5, 9-11)

மேற்காணும் இறைவாக்குப் பகுதியை நான் நிறைய முறை வாசித்திருக்கிறேன். அதன் அர்த்தம் என்னவென்று தெரியாமல் நிறைய முறை மறையுரையும் வைத்திருக்கின்றேன்.

மெசியா வருவார் என்றால் எதற்காக இதையெல்லாம் செய்ய வேண்டும்.

மேலே சொல்லப்பட்ட பாலைவனமும், பாழ்நிலமும், பள்ளத்தாக்கும், மலையும், குன்றும் மனிதர்கள் வாழத் தகுதியற்றவை. மனிதர்களே வாழ முடியாத இடத்தில் மெசியா ஏன் வர வேண்டும்?

இந்தக் கேள்விக்குப் பதிலாக இப்படிச் சொல்லலாம். அதாவது, மெசியாவின் வருகையின் போது இவையெல்லாம் மாற்றம் பெறும். மனிதர்கள் வாழத் தகுதி பெற்ற இடங்களாக மாறும்.

இந்த இறைவாக்கை உருவகங்களாகவும் எடுத்துப் பார்க்கலாம்.

கடவுள் நம் உள்ளத்தில் வர நாம் தகுதியற்றிருக்கக் காரணங்கள் ஏழு:
அ. வெறுமை என்னும் பாலை
ஆ. விரக்தி என்னும் பாழ்நிலம்
இ. இல்லாமை என்னும் பள்ளத்தாக்கு
ஈ. ஆணவம் என்னும் மலை
உ. தன்னலம் என்னும் குன்று
ஊ. அறநெறி தவறும் கோணல்
எ. சும்மா எப்படினாலும் இருக்கலாம் என்ற கரடு, முரடு

இந்த ஏழும் அழிந்தால் கடவுள் நம்மிடம் வர வாய்ப்பிருக்கிறது என்று எடுத்துக்கொள்ளலாமா?


1 comment:

  1. மெசியாவையும், அவர் வருகையையும் நோக்கிக் காத்திருக்கும் நம்மை மாசு மறுவற்றவர்களாய், நல்லுறவு கொண்டவர்களாய் மாற அழைப்பு விடுக்கின்றன இன்றைய வாசகங்கள்.நம் உள்ளங்கள் அவர் வாழும் இல்லங்களாய் தகுதி பெற நாம் நம்மிடமிருந்து விலக்க வேண்டிய ஏழு விஷயங்களைப் பட்டியலிட்டுக்காட்டியுள்ளார் தந்தை. அவற்றை விலக்க முயற்சிப்போம்.குழந்தை இயேசுவை நம் இல்லங்களில் தயாரிக்கவிருக்கும் மாட்டுக் குடில்களில் மட்டுமல்ல..நம் உள்ளங்களிலும் பிறக்க வைப்போம்.அனைவருக்கும் இனிய ஞாயிறு வாழ்த்துக்கள்!

    ReplyDelete