Monday, December 15, 2014

எப்பொழுதும் மகிழ்ச்சியாக

எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருங்கள்.
இடைவிடாது இறைவனிடம் வேண்டுங்கள்.
எல்லாச் சூழ்நிலையிலும் நன்றி கூறுங்கள்.
(1 தெச 5:16-24)

இன்றைய திருப்பலியின் போது வாசிக்கப்பட்ட இந்த வாசகம் நாம் அடிக்கடி கேட்ட ஒன்று.
எப்பொழுது, இடைவிடாது, எல்லாச் சூழ்நிலை - இந்த மூன்று வார்த்தைகளும் குறிப்பது ஒன்றைத்தான்.

ஆனால் மகிழ்ச்சி, செபம், நன்றி என நாம் செய்ய வேண்டிய மூன்று செயல்கள் மட்டும் மாறுபடுகின்றன.

இந்த மூன்றும் தான் கடவுள் நாம் செய்ய வேண்டும் என நினைப்பது என்கிறார் தூய பவுல்.
எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருப்பது ஒரு பெரிய பேராசை எனவே தோன்றுகிறது.
இருந்தாலும் முயற்சி செய்து பார்க்கலாமே!

1 comment:

  1. என்மேல் அன்புகொண்ட ஒரு அருட்சகோதரி தான் இறப்பதற்கு சில நாட்கள் முன்பு விவிலியம் ஒன்றில் எனக்கு எழுதிக் கொடுத்த வரிகள்.என் நெஞ்சுக்கு மிகவும் நெருக்கமானவை.எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருப்பதென்பது ஒரு வரம்; அது எல்லோருக்கும் கிடைக்குமா..தெரியவில்லை.பல நேரங்களில் நம் மகிழ்ச்சியை நமக்கு வெளியே உள்ளவர்கள்தான் முடிவு செய்வதுபோல் தெரிகிறது.ஜான் ஏறினால் முழம் சறுக்குவதை உண்ர்ந்திருப்போம்.ஆனால் இறைவனை நோக்கி செபிப்பதும்,நன்றி சொல்வதும் நம்மால் இயன்ற விஷயங்களே! செய்வோம்.....

    ReplyDelete