Wednesday, December 17, 2014

நீ ஒரு சிங்கக்குட்டி

யூதா! நீ ஒரு சிங்கக்குட்டி. என் மகனே இரை கவர்ந்து வந்துள்ளாய். ஆண் சிங்கமென, பெண் சிங்கமென, அவன் கால் மடக்கிப் படுப்பான். அவன் துயில் கலைக்கத் துணிந்தவன் எவன்?
(காண்க தொடக்கநூல் 49:1-2, 8-10)

இஸ்ரயேல் மக்களின் பன்னிரு குலமுதல்வர்களில் ஒருவர் யூதா. அந்த யூதாவின் வழி வந்தவர் தான் தாவீது அரசர். தாவீது அரசரின் வழி வந்தவர் தான் இயேசு.

அண்மையில் நடைபெற்ற தொல்பொருள் ஆராய்ச்சி மற்றும் வரலாற்று ஆய்வுகள் மோசே மற்றும் தாவீது என்னும் நபர்கள் வரலாற்றில் வாழ்ந்திருக்கவே இல்லை என்றும், அவர்கள் வெறும் கதாபாத்திரங்கள் எனவும் சொல்கின்றனர். இந்தப் பின்புலத்தில் பார்த்தால் ஆபிரகாம், ஈசாக்கு மற்றும் யாக்கோபு என யாரும் வாழ்ந்திருக்கவும் வாய்ப்பில்லை.

அது என்னமோங்க...ஒவ்வொரு நாளும் படிக்கப் படிக்க எதுவும் வரலாற்று நிகழ்வு இல்லை என்றே சொல்லித் தர்றாங்க.

யூதாவைப் பற்றிய உருவகம் சிங்கம்.

இரையும் கிடைக்கும். துயிலும் கிடைக்கும். யாரின் தொந்தரவும் இருக்காது.

இந்த மூன்றும் தான் நமக்கான அடிப்படை தேவையும் கூட.



1 comment:

  1. 'அறிவு' நல்லதுதான்; பொக்கிஷம் தான்..ஆனால் 'அறியாமை' பல சமயங்களில் அதை விட நல்லது.இன்றையப் பதிவு எனக்குப் புரிய வைத்தது இதுதான்.

    ReplyDelete