Thursday, December 11, 2014

உன் வெற்றி கடல் அலை போல

உன் நிறைவாழ்வு ஆற்றைப்போலவும்,
உன் வெற்றி கடல் அலை போலவும்
பாய்ந்து வந்திருக்கும்.
உன் வழிமரபினர்கள் மணல் அளவாயும்,
உன் வழித்தோன்றல்கள் கதிர்மணிகள் போலும் இருப்பர்.
(காண்க. எசாயா 48:17-19)

ஆறு, கடல் அலை, மணல் மற்றும் கதிர்மணி என்னும் நான்கு உருவகங்கள் வழியாக இஸ்ராயேல் மக்கள் பெறும் புதுவாழ்வை முன்னுரைக்கின்றார் எசாயா இறைவாக்கினர்.

நம்ம ஊர்ல இன்னைக்கு ஆறு என்றாலே கேரளா அழுது கொண்டிருக்கும் முல்லைப் பெரியாறும், கர்நாடகம் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கும் காவிரியும் தான் நினைவிற்கு வருகிறது.

கடல் அலை என்றால் சிறைப்பிடிக்கப்படும் மீனவர்கள் என்றும், மணல் என்றால் தாதுமணல் கொள்ளையும், கதிர்மணிகள் என்றால் காய்ந்து கிடக்கும் நெல்வயல்களுமே நினைவிற்கு வருகின்றன.

இயற்கைத் தாய் தன் வளங்களை அள்ளிக் கொடுக்கத் தயாரானாலும் மனிதர்கள் நாம் என்னவோ நம் சுயநலத்தாலும், கௌரவத்தாலும் மற்றவர்களின் நலனை மறுத்து நம் நலனையே முன்னிலைப்படுத்துகிறோம்.

மெசியாவின் வருகை நிறைவைக் கொண்டு வந்தாலும், அந்த நிறைவை அனைவரும் அனுபவிக்க நாம் செயல்பட வேண்டியதும் அவசியம்.


2 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. 'உன் சந்ததியை வானத்து விண்மீன்கள் போலவும்,ஆற்றின் மணல் போலவும் பலுகிப் பெருகச் செய்வேன்' என்று தந்தை அபிரகாமிற்குவாக்குறுதி அளித்த இறைவன் இன்று ஏசாயாவின் வழியாக நமக்குப்பல ஆசீர்வாதங்களை அள்ளி இறைக்கிறார்.அவர் எந்த தாராள மனத்துடன் அளிக்கிறாரோ, அதே தாராள மனத்துடன் அவற்றைப்பெற நாம் நம்மைத் தயார் செய்வோம். அப்பொழுதுதான் மெசியா வருகையின் நிறைவை நாம் அனுபவிக்க இயலும். அதிகாலை வேளையில் ஆசீர்வாதங்களை சாதகமாக்கிய தந்தைக்கு நன்றிகள்!

    ReplyDelete