Thursday, December 4, 2014

மனதில் உறுதி வேண்டும்!

'அவர்மீது நம்பிக்கை கொண்ட நேர்மையான மக்களினம் உள்ளே வரட்டும். அவர்கள் மன உறுதி கொண்டவர்கள்.' (காண் எசாயா 26:1-6)

ஆண்களின் மனம் திடமான கல்லைப் போன்றது என்றும், பெண்களின் மனம் நெகிழும் களிமண் போன்றது என்றும், ஆகவே தான் திருமண உறவு வாழ்க்கை சாத்தியம் என்றும் ஒரு அருட்பணியாளர் மறையுரை வைத்ததைக் கேட்டேன். ஆண்களுக்கும், ஆண்களுக்கும் திருமணம் நடந்தால் அது கல்லும், கல்லும் மோதிக்கொள்வது போலவும், பெண்களுக்கும், பெண்களுக்கும் திருமணம் நடந்தால் நெகிழ்ந்து போய்விடும் என்றும் தொடர்ந்து சொல்லியதோடு மட்டுமல்லாமல், இந்தக் காரணத்தால் ஓரின திருமண நிலையை அவர் எதிர்ப்பதாகவும் சொல்லி முடித்தார். ஒரு திருமண நிகழ்வுத் திருப்பலியில் இவ்வளவு சொல்லியிருக்கத் தேவையில்லை தான். இவர் சொல்வதை ரொம்ப 'ராவாக' எடுத்தால் அதில் ஒரு செக்ஸிஸ்ட் டோன் இருப்பதாகவும் தெரிகிறது.

சரி...இதெல்லாம் எதுக்கு இன்னைக்கு?

மன உறுதியைப் பற்றிப் பேசுவதற்காகத்தான்.

கே. பாலசந்தர் அவர்களின் 'மனதில் உறுதி வேண்டும்' திரைப்படம் பார்த்தீர்களென்றால் அதில் சொல்லப்படுவது என்ன? அதிக துன்பங்களும், அதிக ஏமாற்றங்களும் வந்தால் நம் மனம் உறுதி பெறும். அல்லது உறுதியுள்ள மனதால் தான் துன்பங்களையும், ஏமாற்றங்களையும் தாங்க முடியும். துன்பத்தையும், ஏமாற்றத்தையும் மட்டுமல்ல, மகிழ்வையும், வெற்றியையும், அன்பையும், நட்பையும் தாங்குவதற்கும் மனதில் உறுதி வேண்டும்.

மனதில் உறுதி என்றால் என்ன என்று என் வகுப்புத் தோழரிடம் விசாரித்தேன். 'ஸ்டிராங்கான வில் பவர்' என்றார். ஒரு முடிவு எடுத்தால் அதை மாற்றக் கூடாது என்றார். ஆனால் மாறாமல் இருந்தால் என்னங்க வாழ்க்கை அது! கல்லுதான் மாறாம அப்படியே இருக்கும்! நம் இயல்பே மாறுவதுதானே. மாறாம இருந்தால் நாம இன்னும் குரங்காத்தான் இருந்திருப்போம்.

இன்றைய முதல் வாசகத்தில் சொல்லப்படும் மனவுறுதி பயத்தையும், வலியையும் தாங்கக் கூடிய மனவுறுதி. மெசியாவின் வருகையில் எல்லாருக்கும் பயமும், வலியும் நீங்கி விடும்.


1 comment:

  1. " மாற்றம்"..இது இயற்கையின் நியதி.இலையெனில் மனிதன் இன்னும் ஒரு செல் பிராணியாகத்தான் இருந்திருப்பான்.ஆனால் இம்மாற்றங்கள் புறம் சார்ந்ததாயிருக்கும் வரை பிரச்சனையில்லை.நீரானது தான் இருக்கும் இடத்தின் தன்மைக்கேற்பத் தன் வடிவத்தையும்,ருசியையும் மாற்றிக்கொண்டாலும் இது ஆக்ஸிஜன்,ஹைடிரஜன் எனும் வாயுக்களின் கலவையாக இருக்கும் வரைதான் நீர் என அழைக்கப்படும்.அது போலத்தான் மனிதனும்..தன் ஆடை அலங்காரங்கள் போன்றவற்றால் புறத்தை எத்துணைதான் மாற்றிக்கொண்டாலும் மனத்தளவில் தான் எடுக்கும் முடிவுகளிலிருந்து மாறாத மன உறுதி( conviction) வேண்டும்.நம் எதிரிலிருப்பவர்கள் மாறுகிறார்கள் என்பதற்காக நாமும் மாறினால் மனிதனுக்கும்,மண்புழுவுக்கும் வித்தியாசமின்றிப் போய்விடும்.இம்மனவுறுதி ஒரேநாளில் வருவதில்லை.துன்பம்,வலி,வேதனை,ஏமாற்றம்,கண்ணீர் போன்ற உளிகள் நம்மைப் பதம்பார்க்கும் போதுதான் இந்த 'மனவுறுதி' நமக்குச் சொந்தமாகிறது.நல்லதொரு பதிவின் மூலம் நற்சிந்தனையைத் தூண்டிய தந்தைக்கு நன்றிகள்!

    ReplyDelete