திருவருகைக் காலம் மூன்றாம் ஞாயிறு
I. செப்பனியா 3:14-17 II. பிலிப்பியர் 4:4-7 III. லூக்கா 3:10-18
கலங்காத மகிழ்ச்சி
திருவருகைக்காலத்தின் மூன்றாம் ஞாயிற்றை 'கௌதேத்தே தொமெனிக்கே' ('மகிழ்ச்சி ஞாயிறு') எனக் கொண்டாடுகிறது திருஅவை. மகிழ்ச்சி என்றால் என்ன? 'சிரிப்பு,' 'இன்பம்,' 'சந்தோஷம்,' 'நிறைவு,' 'உடல்நலம்' என நாம் பல வார்த்தைகளைச் சொன்னாலும், எந்த வார்த்தையும் மகிழ்ச்சி என்ற உணர்வை முழுமையாகப் பிரதிபலிப்பதில்லை. மகிழ்ச்சி என்பது ஒரு 'ரெலடிவ்' (சார்பியல்) வார்த்தை. அதாவது, அது தனிநபர் சார்ந்தது. எல்லாருக்கும் பொதுவான மகிழ்ச்சி என்று ஒன்றை வரையறுக்க முடியாது என்றே நினைக்கிறேன். பசியாக இருக்கும் எனக்கு ஒரு சாப்பாட்டுப் பொட்டலம் கிடைத்தால் மகிழ்ச்சி கிடைக்கிறது. ஆனால், அதே சாப்பாட்டுப் பொட்டலம் பசியில்லாத ஒருவருக்கு, அல்லது நோய்வாய்ப்பட்டிருக்கும் ஒருவருக்கு சுமையாகத் தெரிகிறது. ஒரே பொட்டலம்தான். ஆனால், அது ஒரே மாதிரியான மகிழ்ச்சி உணர்வை எல்லாருக்கும் தருவதில்லை. மகிழ்ச்சி உள்ளிருந்து வருகிறதா? அல்லது வெளியிலிருந்து வருகிறதா? 'உள்ளிருந்து வருகிறது' என்றால், சில நேரங்களில் நம் மனம் எந்தக் காரணமும் இல்லாமல் சோர்ந்திருக்கக் காரணம் என்ன? 'வெளியிலிருந்து வருகிறது' என்றால், மகிழ்ச்சி நிபந்தனைக்குட்பட்டதாகிவிடுமே! மேலும், என் மகிழ்ச்சி சார்புநிலையின் வெளிப்பாடாக அமைந்துவிடுமே! அடுத்தவர் இல்லை என்றால் எனக்கு மகிழ்ச்சி இல்லை என்றாகிவிடுமே!
மகிழ்ச்சி ஓர் அமைதியான குளம் என வைத்துக்கொள்வோம். அந்த அமைதியான குளத்தின் நடுவில் விழும் ஒரு சிறிய கூழாங்கல் குளத்தில் கலங்கலை ஏற்படுத்திவிடுகிறது. அக்கல் விழுந்த இடத்தில் உருவாகும் சிற்றலை விரிந்து விரிந்து குளத்தின் கரையை மோதும்போது அங்கிருக்கும் கரையும் கலங்குகிறது. கலக்கம் குளத்தின் அமைதியைக் கெடுக்கிறது. நம் வாழ்விலும் கலக்கங்களே மகிழ்ச்சியைக் குலைக்கின்றன. ஒரு சொல்லாக, சிந்தனையாக, செயலாக விழும் கூழாங்கல் நம் மூளை, மனம், உடல் என அனைத்திலும் ஒரு சிறு அசைவையாவது ஏற்படுத்திவிடுகிறது. கூழாங்கல் ஏற்படுத்தும் கலக்கம் குளத்தின் மேற்பரப்பில் மட்டுமல்லாமல், குளத்தின் அடியில் சென்று தேங்கியிருக்கும் களிமண்ணையும் கலக்கிவிடுவது போல, கலங்கிய மூளை, மனம், உடல் சேமித்து வைத்த பழைய அழுக்குகளையும் கீறி விடுகிறது.கலக்கமில்லாத மகிழ்ச்சி சாத்தியமா? குளங்கள் விரும்பவில்லை என்றாலும், கூழாங்கற்கள் வந்து விழுந்தால், அது குளத்தின் குற்றமில்லையே? கலங்காத குளம் சாத்தியமா? கலங்காத மகிழ்ச்சி சாத்தியமா?
இன்றைய இறைவார்த்தை வழிபாடு 'மகிழ்ச்சி' என்ற சொல்லாடலை எப்படிப் புரிந்துகொள்கிறது?
முதல் வாசகம் (காண். செப் 3:14-18) இறைவாக்கினர் செப்பனியா நூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. கி.மு. 612ஆம் ஆண்டில், யோசியாவின் ஆட்சி முடிந்த சில ஆண்டுகளில், அல்லது அவரது ஆட்சியின் இறுதி நாள்களில் இறைவாக்குரைத்த செப்பனியாவின் இறைவாக்கு நூல் பெரும்பாலும் எருசலேமின் அழிவைப் பற்றியே பேசுகிறது. மேலும், நூலின் இறுதியில், தண்டனைத் தீர்ப்பளிக்கும், எதிர்கொள்ளக் கொடியதாய் இருக்கும் 'ஆண்டவரின் நாள்' பற்றியும் பேசுகிறார் அவர். இன்றைய வாசகப் பகுதி அவரின் ஒன்பதாம் மற்றும் இறுதி இறைவாக்குப் பாடலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. அழிவு பற்றிப் பேசாமல் ஆறுதல் பற்றிப் பேசுகிறார் இறைவாக்கினர். எருசலேமைச் செல்லமாக, 'மகளே' என அழைப்பது வழக்கம். மேலும், 'மகளே' என்றால் 'குட்டி நகரம்' என்பதும் பொருள். எருசலேமும், அதைச் சுற்றியிருக்கிற குட்டி ஊர்களும் அகமகிழுமாறு அழைப்பு விடுக்கிறார் செப்பனியா. 'மகிழ்ச்சியால் ஆர்ப்பரி,' 'ஆரவாரம் செய்,' 'அக்களி' என அவர் பயன்படுத்தும் மூன்று சொல்லாடல்களுமே மகிழ்ச்சியைக் குறித்தாலும், இவற்றின் எபிரேயப் பதங்கள் இன்னும் ஆழமான பொருளைத் தருகின்றன. அதாவது, 'உள்ளத்தில்,' 'உதட்டில்,' 'நாக்கில்' என மகிழ்ச்சி, உள்ளத்து உணர்வாகத் தொடங்கி, பெருஞ்சத்தமாக மாறுகிறது. மகிழ்ச்சி என்பது ஓர் இருப்பு என்ற நிலை மாறி, அது ஓர் இயக்கமாக உருவெடுக்கிறது. ஒவ்வொரு மகிழ்ச்சிக்கும் ஒரு காரணம் இருக்கும் - சோற்றுப் பொட்டலம் போல! எருசலேமின் மகிழ்ச்சிக்குக் காரணம் என்ன? 'உன் கடவுளாகிய ஆண்டவர் உன் நடுவில் இருக்கிறார்.' நாம் அன்பு செய்யும் நபர் நம் நடுவில் இருந்தால் நம்மைப் பற்றிக் கொள்ளும் மகிழ்ச்சி போல, நம் கடவுள் நம் நடுவில் இருக்கிறார் என்ற உணர்வை நமக்கு மகிழ்ச்சி தருகிறது.
'இன்று ஆண்டவர் உன் நடுவில் இருக்கிறார்' என்றால், இவ்வளவு நாள்கள் யார் இருந்தார்? 'பகைவர்கள்,' 'எதிரிகளின் படைகள்,' 'விரும்பத்தகாதவர்,' 'கொலை செய்பவர்,' 'அழிப்பவர்' என மற்றவர்கள் இருந்தார்கள். இவர்களின் உடனிருப்பு மக்களுக்கு அச்சம் தந்தது. மேலும், இவர்களின் உடனிருப்பு மக்களின் கைகளைச் சோர்வடையச் செய்தது. ஏனெனில் மக்கள் எந்நேரமும் அவர்களுக்கு எதிராகப் போராட வேண்டியிருந்தது. இந்தப் போரட்டம் அவர்களின் உடலின் ஆற்றலைக் குறைத்தது. மேலும், இப்போது ஆண்டவர், 'மாவீரராக, வெற்றி அளிப்பவராக, புத்துயிர் அளிப்பவராக' இருப்பதால், எதிரிகள் இருந்தாலும் அவர்கள் அச்சம்கொள்ளத் தேவையில்லை.
ஆக, முதல்வாசகத்தின்படி, 'ஆண்டவரின் உடனிருப்பு' கலங்காத மகிழ்ச்சியைத் தருகிறது.
இரண்டாம் வாசகம் (காண். பிலி 4:4-7) புனித பவுலடியார் பிலிப்பி நகரத் திருஅவைக்கு எழுதிய திருமடலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. இம்மடல் பவுலின் சிறைமடல்களில் ஒன்று. என்ன ஒரு முரண்! சிறையின் துன்பம், தனிமை, விரக்தியில் இருந்து கொண்டு, 'ஆண்டவரோடு இணைந்து என்றும் மகிழுங்கள். மீண்டும் கூறுகிறேன். மகிழுங்கள்' என அறைகூவல் விடுக்கின்றார் பவுல். 'ஆண்டவர் அண்மையில் உள்ளார்' என்ற பவுலின் காலத்தில் எல்லாரும் எதிர்நோக்கியிருந்த, 'பருஸியா' எனப்படும் 'ஆண்டவரின் இரண்டாம் வருகையே' பவுலின் மகிழ்ச்சி ஊற்றெடுக்கக் காரணமாக அமைகிறது.
'ஆண்டவரோடு இணைந்து என்றும் மகிழுங்கள்' என்கிறார் பவுல். மகிழ்ச்சிக்கான அழைப்பு நிலையற்றவற்றில் அல்லாமல், நிலையானவற்றில் இணைந்திருப்பதற்கான அழைப்பாக இருக்கிறது. 'இணைந்திருத்தல்' என்பது இன்று அதிகமாக சமூக வலைதள இணைப்புகளில் பயன்படுத்தப்படும் ஒரு சொல்லாடல். செயலி, செல்ஃபோன், இணையதளம் என்னும் மூன்றின் வழியாக நாம் ஒருவர் மற்றவரோடு இணைந்திருக்கிறோம். இந்த மூன்றில் ஒன்று தவறானாலும் இணைப்பு சாத்தியமில்லை. ஆண்டவரோடு எப்படி இணைந்திருப்பது? நமக்கும், இறைவனுக்கும் ஒரு தொப்புள் கொடி இருப்பது போல நினைத்து, அந்தத் தொப்புள்கொடி ஒரு புளுடூத் இணைப்பு போல இருப்பதாக நினைத்து வாழும்போது, நாம் எந்நேரமும் அவரோடு இணைந்திருக்க முடியும். தொடர்ந்து, 'எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டாம்' என்கிறார் பவுல். 'கலக்கம்' அல்லது 'கவலை' மகிழ்ச்சியின் எதிரி என்பது பவுலுக்கும் தெரிந்திருக்கிறது. மேலும், நன்றியோடு இறைவேண்டல் செய்து, எல்லா நிகழ்வுகள், எல்லா நேரங்கள், எல்லா மனிதர்கள் என எல்லாரையும் இறைவன்-நான் தொப்புள்கொடியில் இணைத்துக்கொள்ளும்போது கலங்காத மகிழ்ச்சி சாத்தியமாகிறது.
ஆக, இரண்டாம் வாசகத்தின்படியும், 'ஆண்டவரில் இணைந்திருத்தல்' கலங்காத மகிழ்ச்சியைத் தருகிறது.
நற்செய்தி வாசகம் (காண். லூக் 3:10-18) கடந்த ஞாயிறு வாசகத்தின் தொடர்ச்சியாக இருக்கிறது. கடந்த வார வாசகத்தில் திருமுழுக்கு யோவான் தன் பணியைத் தொடங்கினார். இன்றைய நாள் வாசகத்தில், அவர் திருமுழுக்கு வழங்கும் நிகழ்வும், முறையும், அந்நிகழ்வில் பங்கேற்றவர்களோடு அவர் மேற்கொண்ட உரையாடலும் தரப்பட்டுள்ளது. இன்றைய நற்செய்தியை இரண்டு பகுதிகளாகப் பிரிக்கலாம். முதல் பகுதியில் திருமுழுக்கு பெறுவதற்காக யோவானிடம் மூன்று குழுவினர் வருகின்றனர். இரண்டாம் பகுதியில், தான் மெசியா அல்ல என்பதையும், மெசியா எப்படிப்பட்டவர் என்பதையும் எடுத்துச் சொல்கின்றார் யோவான்.
முதல் பகுதியில் வரும் 'மக்கள் கூட்டத்தினர்,' 'வரிதண்டுபவர்கள்,' மற்றும் 'படைவீரர்கள்' என்னும் மூன்று குழுவினரின் கேள்வி ஒன்றாக இருக்கிறது: 'நாங்கள் என்ன செய்ய வேண்டும்?' 'இரண்டு அங்கிகளை உடையவர்கள் இல்லாதவரோடு பகிர்ந்து கொள்ளட்டும். உணவை உடையவரும் அவ்வாறே செய்யட்டும்.' 'உங்களுக்காக குறிக்கப்பட்ட தொகைக்கு அதிகாக எதையும் தண்டாதீர்கள்.' 'நீங்கள் எவரையும் அச்சுறுத்திப் பணம் பறிக்காதீர்கள். யார்மீதும் பொய்க் குற்றம் சுமத்தாதீர்கள். உங்கள் ஊதியமே போதும் என்றிருங்கள்.' இவ்வாறாக, ஒவ்வொரு குழுவினருக்கும் வேறு வேறு வாழ்க்கை நிலை அறிவுரைகளைத் தருகின்றார் யோவான். நம் அலமாரி நிறைய ஆடைகள் இருந்தாலும் நாம் உடுத்துபவை வெறும் இரண்டு ஆடைகளே. நம் வீட்டில் அறைகள் பல இருந்தாலும் நாம் ஒவ்வொரு நேரத்திலும் இருப்பது வெகு சில அடிகளே. 'நாளை' என்ற உணர்வுதான் நம்மை இன்னும் அதிகம் சேகரிப்பவர்களாகவும், சேர்த்து வைப்பவர்களாகவும் மாற்றுகிறது. தொடர்ந்து, 'குறிக்கப்பட்டதற்கு மேல் வரிதண்ட' ஒருவரைத் தூண்டுவது, அவருடைய பேராசை. 'அச்சுறுத்தல், பொய்க்குற்றம்' வழியாக வருவது சுலப வருமானம். திருமுழுக்கு யோவானைப் பொருத்தவரையில் மனமாற்றம் என்பது வாழ்க்கைமுறை அல்லது வாழ்க்கைநெறி மாற்றமாக இருக்கிறது. இந்தப் புரிதல் நமக்கு முதல் மற்றும் இரண்டாம் வாசகங்களின் கருத்தை நிறைவு செய்வதாக இருக்கிறது. அதாவது, வாழ்க்கைநெறி மாற்றமும் நமக்கு கலங்காத மகிழ்ச்சியைக் கொடுக்கிறது.
மேலும், நற்செய்தி வாசகத்தின் இரண்டாம் பகுதியில், மக்கள் தன்னை மீட்பராக நினைத்துக்கொண்டிருக்கிறார்கள் என்றுணர்கிற யோவான், அவர்கள் கேட்காமலேயே, தானாக முன்வந்து, 'என்னைவிட வலிமைமிக்க ஒருவர் வருகிறார்' என்று தன்னைப் பின்னுக்குத் தள்ளி, இயேசுவை முன்னே கொண்டுவருகிறார். அதாவது, 'உங்களுக்குக் குறித்துள்ளதற்கு மேல் போகாதீர்கள்' என்று முதல் பகுதியில் அறிவுறுத்திய யோவான், தானே அதை வாழ்ந்தும் காட்டுகிறார். தனக்குக் குறிக்கப்பட்ட எல்கையைத் தாண்ட மறுக்கிறார். இவ்வாறாக, தன் மகிழ்ச்சி என்பது தன் அடையாளத்திலிருந்து வருவது அல்ல. மாறாக, அது அடையாளங்களைக் களைவதில்தான் இருக்கிறது என நமக்கு அறிவுறுத்துகிறார் யோவான்.
இவ்வாறாக, மகிழ்ச்சி என்பது (அ) 'ஆண்டவர் நம் நடுவில் உள்ளார்' எனக் கண்டுகொள்வதிலும், (ஆ) 'ஆண்டவரோடு இணைந்திருத்தலிலும்,' (இ) 'வாழ்க்கைமுறையை மாற்றுவதிலும்,' மற்றும், (ஈ) 'தன்னை அறிதலிலும்' இருக்கிறது என எடுத்துரைக்கின்றன வாசகங்கள்.
கலங்காத மகிழ்ச்சி. இது எப்போதும் நமக்குக் கிடைக்குமா?
நம் வாழ்வில் எல்லாம் நன்றாகப் போகும்போது - உணவு, உடைகள், உறைவிடம் என அடிப்படைத் தேவைகள் நிறைவேறி, செலவுக்குக் கொஞ்சம் பணம், பேசிப் பழக சில நண்பர்கள், படிக்க ஒரு புத்தகம், பார்க்க ஒரு வேலை என இருக்கும் போது - மகிழ்ச்சி இயல்பாக வருகிறது. ஆனால், அடிப்படைத் தேவைகள் இல்லாத போது நான் எப்படி மகிழ முடியும்? என் வீடும், தோட்டமும் புயலால் அல்லது வெள்ளத்தால் அழிக்கப்படும்போது நான் எப்படி மகிழ முடியும்? என் வேலை, திருமணம், குடும்பம் உடையும்போது நான் எப்படி மகிழ முடியும்? நான் நோய்வாய்ப்பட்டு, முதுமையில், தனிமையில் படுக்கையில் கிடக்கும்போது நான் எப்படி மகிழ முடியும்? என் அன்பிற்குரியவர் இறக்கும்போது, அந்த இழப்பை யாராலும் ஈடுசெய்ய முடியாதபோது நான் எப்படி மகிழ முடியும்? என் பணம் எல்லாம் திருடப்படும்போது, என் வாழ்வாதாரம் பறிக்கப்படும்போது, என்னை ஆள்பவர்கள் சுயநலமாக இருக்கும்போது என்னால் எப்படி மகிழ முடியும்? என்னும் கேள்விகள் தவிர்க்க முடியாதவை.
'ஆர்ப்பரித்து அக்களியுங்கள். இஸ்ரயேலின் தூயவர் உங்களிடையே சிறந்து விளங்குகின்றார்' (காண். திபா 12) எனப் பாடுகின்றார் எசாயா. இறைவன் நம் நடுவில் உள்ளார் என்னும் அனுபவம் கலங்காத மகிழ்ச்சியைத் தருகிறது.
ஒருவர் தன்னை அறிந்து, தன் அருகிருப்பவர் அறிந்து, தன் உள்ளது பகிர்ந்து, தன் இறைவனோடு இணைந்திருக்கும்போது, கலங்காத மகிழ்ச்சி காலத்திற்கும் சாத்தியம். நம் மகிழ்ச்சியை நம்மிடமிருந்து பிரிக்கும் காரணிகளை, நம்மீது எறியப்படும் கூழாங்கற்களை நாம் அடையாளம் கண்டு, அவற்றிலிருந்து ஒதுங்குவது முதற்படி. அடுத்தவரை மகிழ்ச்சிப்படுத்தி, அந்த மகிழ்ச்சியில் நாம் புன்னகை பூப்பது இரண்டாம் படி. என் இறைவனே என் மகிழ்ச்சி என அவரில் சரணாகதி அடைவது மூன்றாம் படி. நாம் ஏற்றும் மூன்று திரிகளும் நம்மை இந்த மூன்று படிகளில் ஏறுவதற்கு நம் பாதையை ஒளிர்விக்கட்டும்.

திருவருகைக்காலம் மூன்றாம் ஞாயிறு “ மகிழ்ச்சியை” மையமாக்க் கொண்ட மறையுரை! மகிழ்ச்சி என்பது நிலையற்றது.. அது மனிதனுக்கு மனிதன் மாறுபடுகிறது. “One man’s flesh is another man’s meat “ என்பது போல் ஒருவரின் மகிழ்ச்சி இன்னொருவருக்குத் துன்பமாக மாறும் பொழுதுகளும் உண்டு. நீரில் தூக்கி எறியப்பட்ட ஒரு கூழாங்கல்லை வைத்து மகிழ்ச்சியின் தன்மையை விவரிக்கிறார் தந்தை.குளங்கள் விரும்பவில்லை எனினும் கூழாங்கற்கள் வந்து விழுகையில் குளம் கலங்கிவிடுவது அதன் தவறில்லைதான்.என் மகிழ்ச்சியை என்றும் எனதாக்கும் வழிமுறைகளைச் சொல்ல வருகின்றன இன்றைய வாசகங்கள்.
ReplyDeleteநாம் அன்பு செய்யும் ஒருவர் நம் அருகில் இருந்தால் நாம் உணரும் மகிழ்ச்சிக்கு இணையானதொரு மகிழ்ச்சியை ஆண்டவரின் உடனிருப்பு தருகிறது.இப்பொழுது ஆண்டவர் மாவீர்ராக…வெற்றியளிப்பவராக….புத்துயிர் அளிப்பவராக இவர்கள் நடுவில் இருப்பதால் இவர்கள் எந்த எதிரிகளுக்கும் அஞ்சத்தேவையில்லை. அவர்களில் நிறைந்திருப்பது முழுமகிழ்ச்சியே என்று கூறும் முதல்வாசகம்…..
ஆண்டவரோடு இணைந்திருங்கள்! நம்மைக் கலங்கடிக்கும்..நமக்கு நிரந்தர மகிழ்ச்சி தராத அத்தனையையும் தூக்கி எறிந்துவிட்டு “ஆண்டவரோடு உள்ள உறவை ஒரு தொப்புள் கொடி உறவாக மாற்றுங்கள்” என்ற பவுலடியாரின் வார்த்தைகளைக் கொண்ட இரண்டாம் வாசகம்…..
தன்னிடம் திருமுழுக்கு பெற வருபவர்களுக்கு உண்மையான மகிழ்ச்சி பெற வழிகள் சொல்லும் திருமுழுக்கு யோவான்…தன்னை மெசியா என்று நினைத்திருந்தவர்களுக்குத் தான் யார் என்ற உண்மையைக்கூறி “ மகிழ்ச்சி என்பது அடையாளங்களில் அல்ல…அவற்றைக் களைவதில் தான் இருக்கிறது” என்ற செய்தியைக்கொண்ட நற்செய்தி வாசகம்…
நிரந்தரமான…கலங்காத மகிழ்ச்சி எப்பொழுது நமக்குச்சொந்தமாகும்? நிறைய பேரின் அடிமனத்தின் கேள்வி இது? ஏசாயா பதில் தருகிறார்….” ஆர்ப்பரித்து அக்களியுங்கள்; இஸ்ரயேலின் தூயவர் உங்களிடையே சிறந்து விளங்குகிறார்” எனும் வரிகள் நம்மிடையே கலங்காத மகிழ்ச்சியைத் தோற்றுவித்தல் சாத்தியம்.நம்மை இறைவனிடமிருந்து பிரிக்கும் காரணிகளை அடையாளம் கண்டு..நம்மேல் வீசப்படும் கூழாங்கற்களை ஒதுக்கி வாழவும்….அடுத்தவரை மகிழ்ச்சிப்படுத்தி அம்மகிழ்ச்சியில் நாம் புன்னகை பூப்பதும்….என் இறைவனே என் மகிழ்ச்சி என அவரில் சரணாகதி அடைவதுமே நம் நிரந்தர மகிழ்ச்சிக்கு நாமிடும் வித்துக்கள் என்று முழக்கமிடும் வார்த்தைகளுக்காகத் தந்தைக்கு வாழ்த்துக்களும்! ஞாயிறு வணக்கங்களும்!!!