இன்னலும் மகிழ்ச்சியும்
'அந்த நாள்களில் எருசலேம் திருச்சபை பெரும் இன்னலுக்கு உள்ளாகியது' என்று தொடங்குகின்ற முதல் வாசகம், 'இதனால் அந்நகரில் பெரும் மகிழ்ச்சி உண்டாயிற்று' என்று முடிகிறது.
மறைக்கு எதிரான அல்லது நம்பிக்கைக்கு எதிரான எதிரிகளின் முயற்சிகள் எருசலேம் திருஅவைக்குத் துன்பம் தருகின்றன.
அடுத்ததாக, நம்பிக்கையாளர்கள் சிதறடிக்கப்படுகின்றனர். ஒருவருடைய உள்ளத்தில் பயம் விதைக்கப்படும்போது அவர் செய்தவறியாது இங்குமங்கும் அலைக்கழிக்கப்படுகின்றார்.
திருத்தொண்டர் ஸ்தேவான் கொல்லப்படுகின்றார். அவருடைய படுகொலை மற்றவர்களுக்கு எச்சரிக்கையாக இருந்தது. எதிரிகள் இப்படியாக நம்பிக்கையாளர்களைப் பயத்தில் வைத்திருந்தனர்.
சவுல் வீடுவீடாய்ச் சென்று நம்பிக்கையாளர்களைச் சிறையில் அடைத்தார். ஆக, பொதுவில் வராமல் வீட்டிற்குள்ளேயே ஒருவர் தன் நம்பிக்கையைக் கொண்டாடவும் இயலவில்லை.
இன்னொரு பக்கம்,
சிதறிய மக்கள் தாங்கள் சென்றவிடமெல்லாம் நற்செய்தியை அறிவிக்கின்றனர்.
வீட்டுக்குள்ளேயே இருந்தவர்கள் தங்கள் நம்பிக்கையில் ஆழப்படத் தொடங்குகின்றனர்.
மீண்டும் மகிழ்ச்சி உண்டாகிறது.
இங்கே, மூன்று விடயங்கள் தெளிவாகின்றன:
ஒன்று, நமக்கு வாழ்வில் நிகழ்வுகள் பல நடக்கலாம். அனைத்து நிகழ்வுகளையும் நமக்கு ஏற்றாற்போல மாற்றிக்கொள்ளும் ஆற்றல் நம் அனைவருக்கும் உண்டு.
இரண்டு, துன்பத்தை எதிர்கொள்ளும் பக்குவமே ஒருவருக்கு மனமுதிர்ச்சியைக் கொடுக்கின்றது.
மூன்று, இன்னல் மற்றும் மகிழ்ச்சி என எதார்த்தங்கள் எதுவாயினும், நம்பிக்கையாளர்கள் தங்கள் நம்பிக்கையில் உறுதியாக இருந்தனர்.
சிதறிய மக்கள் தாங்கள் சென்றவிடமெல்லாம் நற்செய்தியை அறிவிக்கின்றனர்.
ReplyDelete// I used to think, what these people would have to proclaim? They are being persecuted for their faith and they had to move fearing their lives, they lost their properties and they proclaimed the Gospel wherever they went. what would the people who heard them thought? 'You lost all what you had for this Jesus, and you say He is the Messiah?' - What they would have answered? It is easy to say God is good when you have all you need. what you proclaim in adversity matters.
“ இன்னல் என ஆரம்பிக்கும் எதுவுமே மகிழ்ச்சியில் முடியலாம்” என்பது வாழ்வின் எதார்த்தம்.ஒருபக்கம் நம்பிக்கையாளர்கள் சிதறடிக்கப்படுவதும்,மறுபக்கம் சிதறிய மக்கள் நற்செய்தியை அறிவிப்பதும் மக்கள் மனத்தில் நம்பிக்கை விதைகளைத் தூவி விட அங்கே பிறப்பது மகிழ்ச்சி.
ReplyDeleteவாழ்வில் பலவிதமான நிகழ்வுகள் நம்மை நோக்கிப் படையெடுக்கையில் அந்த நிகழ்வுகளை நமக்கு ஏற்றாற்போல் மாற்றிக்கொள்ள ஆற்றல் பெறுவதும்...துன்பத்தின் வழியே மனமுதிர்ச்சி அடைவதும்...இன்னலோ, மகிழ்ச்சியோ நம்பிக்கையாளர்கள் தங்கள் நம்பிக்கையில் உறுதி காட்டவேண்டுமென்பதும் நாம் கற்றுக்கொள்ளும் வாழ்வியல் எதார்த்தங்கள்.
இவற்றைக்கண்டு நாம் பெறுவது மகிழ்ச்சியா? இல்லை முகச்சுழிப்பா? நான்தான் முடிவு பண்ண வேண்டும்.’இன்னல்’எனும் கடலில் நீந்துபவன் ‘ மகிழ்ச்சி’ எனும் கரையை அடையத்தான் வேண்டும் என்ற நியதியை சொல்லாமல் சொல்லித்தரும் தந்தைக்கு வாழ்த்துக்களும்! நன்றியும்!!!
கற்பனையைத் தாண்டிய கருத்துக்கள் கேத்ரின்! பதில் தெரிந்தாலும் அதைத் தாங்கள் ஏற்றுக்கொள்ளும் விதமாக என்னால் கூற முடிந்தால் மகிழ்ச்சி என் பக்கம்! வாழ்த்துக்கள்!!!
ReplyDelete