Sunday, April 25, 2021

வாயில் நானே

இன்றைய (26 ஏப்ரல் 2021) நற்செய்தி (யோவா 10:1-10)

வாயில் நானே

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு தன்னை ஆட்டுக் கொட்டிலின் வாயில் என உருவகம் செய்கின்றார். மேலும், இறுதியாக, தான் ஆடுகள் வாழ்வு பெறும் பொருட்டும், நிறைவாகப் பெறும் பொருட்டும் வந்ததாக அறிவிக்கின்றார்.

'வாயில்' என்பது வெறும் திறப்பு மட்டும் அல்ல. மாறாக, ஒன்று வெளியேறவும் ஒன்று உள்ளே வருவதற்குமான வாய்ப்பு என்கிறது மெய்யியல்.

ஆண்டவராகிய இயேசு தன்னை வாயில் என்று முன்வைப்பதோடு, அந்த வாயில் வழியே நுழைபவர்கள் அடையும் பலனையும் எடுத்துரைக்கின்றார்.

இன்றைய முதல் வாசகத்தில், நற்செய்தி வாயில் புறவினத்தாருக்குத் திறந்துவிடப்படுகிறது. தொடக்கத்தில், விருத்தசேதனம் செய்தவர்கள், செய்யாதவர்கள் என்னும் பிரிவினை இருந்தாலும், இறைவனின் திருவுளம் எதுவோ அதைத் தேர்ந்து தெளிந்து ஏற்றுக்கொள்கிறார்கள் நம்பிக்கையாளர்கள். 

இயேசு என்னும் வாயில் வழியே நுழைவதற்கு நாம் செய்ய வேண்டியதெல்லாம் அந்த வாயிலை அடையாளம் காணுதல் மட்டுமே.

1 comment:

  1. “ வாயில்”.... இது வெறும் திறப்பு மட்டுமல்ல...ஒன்று வெளியேறவும் ஒன்று உள்ளே வருவதற்குமான வழி என்பதும் ......இந்த வாயிலுக்கு நிகராக தன்னை உருவகப்படுத்திக்கொள்ளும் இயேசு இந்த வாயிலின் வழியாக நுழைபவர்கள் பெறுவது “ நன்மை” மட்டுமே என்கிறது இன்றைய நற்செய்தி.

    இதே வாயில் வழியே நாமும் நுழைய வேண்டுமெனில் நாம் செய்ய வேண்டியதெல்லாம் அந்த வாயிலை அடையாளம் காணுவது மட்டுமே! மற்றதை அவர் பார்த்துக் கொள்வார் என்கிறார் தந்தை.

    தன் குருத்துவ வாழ்வின் அடுத்த கட்ட பணியின் வேலைகளுக்குத் தயாராகிக் கொண்டிருக்கும் தந்தைக்கு என் செபங்களும்! வாழ்த்துக்களும்!! இறைவன் தங்களை அபரிமிதமாக ஆசீர்வதிப்பாராக!!!

    ReplyDelete