Sunday, November 9, 2014

இரும்புத்திரை!

நாளை லாத்தரன் பேராலய நேர்ந்தளிப்பு பெருவிழாவைக் கொண்டாடுகிறோம்.

1989 நவம்பர் இதே நாளில் தான் 'இரும்புத்திரை' என்றழைக்கப்பட்ட பெர்லின் சுவர் தகர்த்தெறியப்பட்டு மேற்கு ஜெர்மனியும், கிழக்கு ஜெர்மனியும் இணைந்தது.

இன்று நமக்குத் தேவைப்படுபவை சுவர்கள் அல்ல. மாறாக, பாலங்கள்.

இதை இரண்டு நிகழ்வுகளும் நமக்கு நினைவுபடுத்துகின்றன.

ஆனால் இன்று கடவுள் என்னவோ ஒருவர் மற்றவரை இணைக்கும் பாலமாக இருப்பதற்குப் பதில், ஒருவரை மற்றவரிடமிருந்து பிரிக்கும் சுவராக மாறி விட்டார் அல்லது நாம் மாற்றிவிட்டோம் என்பதே நிதர்சனமான உண்மை.

இயேசுவின் உயிர்ப்பு விண்ணுக்கும், மண்ணுக்கும் இடையே உள்ள சுவரை உடைத்தது என்று சொல்கிறது எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகம். ஆனால், இயேசுவின் பெயரால் இன்று நாம் ஒருவர் மற்றவருக்கிடையே கட்டிக்கொண்ட சுவர்களும் ஏராளம்.

எந்த இயேசு நிஜமான கடவுள்? என்பது இப்போது அடுத்த கேள்வி.

ஒருவர் மற்றவரைப் பிரித்து வைக்கும் கடவுள் கடவுளே அல்ல. கடவுளின் பெயரால் இணைவதை விடுத்து, மனித நலனுக்காக ஒருவரையொருவர் தழுவிக்கொள்வதும், நம்மையே உயிருள்ள ஆலயங்களாக ஒருவர் மற்றவருக்கு அர்ப்பணிப்பதுமே லாத்தரன் பேராலய நேர்ந்தளிப்பு விடுக்கும் பாடம்.



1 comment:

  1. "மனித நலனுக்காக ஒருவரையொருவர் தழுவிக் கொள்வதும், நம்மையே உயிருள்ள ஆலயங்களாக ஒருவர் மற்றவருக்கு அர்ப்பணிப்பதுமே" இன்றையத் தேவை.சிறிய வரிகளில் பெரிய விஷயத்தைக் கூறியுள்ளீர்கள்..நன்றி.அனைவருக்கும் ஞாயிறு வாழ்த்துக்கள்! இன்றைய நாள் இனிதாகட்டும்!

    ReplyDelete