Monday, November 17, 2014

பவளத்தைவிடப் பெருமதிப்புள்ளவள்!

அவள் பவளத்தைவிடப் பெருமதிப்புள்ளவள்.
அவள் தன் வாழ்நாள் முழுவதும் அவனுக்கு நல்லதையே செய்வாள்.
ஒரு நாளும் தீங்கு நினையாள்.
...
...
எளியவனுக்கு உதவி செய்யத் தன் கையை நீட்டுவாள்.
வறியவனுக்கு வயிறார உணவளிப்பாள்.
எழில் ஏமாற்றும்.
அழகு அற்றுப்போகும்.
(காண்க. நீதிமொழிகள் 31:10-31)

இன்று திருப்பலி நேரத்தில் இந்த முதல் வாசகத்தைக் கேட்டபோது எனக்குள் ஒரு சந்தேகம். என்ன சந்தேகம்?

நாம் ஞாயிறு திருப்பலியில் மூன்று வாசகங்கள் வாசிக்கின்றோம். இந்த மூன்று வாசகங்களில் முதல் மற்றும் மூன்றாம் வாசகங்கள் ஒரே மையக்கருத்தைக் கொண்டிருக்கும்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் தாலந்து உவமையை வாசித்தோம். ஆனால் முதல் வாசகத்தின் மையக்கருத்து 'நல்ல மனையாள்'. 'மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்' என்பார்கள். ஒருவனுக்கு அமையும் நல்ல மனையாளே அவன் தன் வாழ்வில் பெறும் தாலந்து என எடுத்துக் கொள்ளலாம்.

அப்படி எடுத்தால் அங்கே ஒரு சிக்கல். ஒரு மனைவி பெற்றவன் முதல் மற்றும் இரண்டாம் பணியாளரைப் போல மேலும் ஒரு மனைவி சம்பாதிக்க வேண்டுமா என்று கேட்கும் படி ஆகிவிடு;ம்.
'எழில் ஏமாற்றும். அழகு அற்றுப்போகும்!'

வெளிப்புற அழகை விட உள்ப்புற உழைப்பை அழகு என முன்வைக்கிறது முதல் வாசகம். பல கலாச்சாரங்களில் பெண்கள் உழைப்பது அல்லது வேலைக்குச் செல்வது இன்றும் தடைசெய்யப்பட்டதாக இருக்கின்றது. ஆனால் 4000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த எபிரேய சமுதாயத்தில் பெண்களுக்கும் சரியான பங்கு இருந்தது என்பது ஆச்சர்யமாக இருக்கிறது.

அற்றுப்போகும் அழகை விடுத்து உழைப்பைப் பற்றிக் கொள்ள அழைக்கிறது இன்றைய நாள்.



1 comment:

  1. நீதிமொழிகள் 31:1-31 படித்துப் பார்க்கையில் அது உயர்குடிப் பெண்களுக்காக எழுதப்பட்டது போன்று தோன்றுகிறது.அது நம் குலப் பெண்களுக்குப் பொருந்துமா என்பது சந்தேகமே! திடீரென்று சம்பந்தமில்லாமல் " எழில் ஏமாற்றும்; அழகு அற்றுப்போகும்" என்று வருகிறது.சம்பந்தமில்லாமல் வந்தாலும் நம் வாழ்க்கையோடு சம்பந்தப்படுத்த வேண்டிய விஷயமே. மற்றபடி ' ஒரு மனைவி பெற்றவன் மேலும் ஒரு மனைவி சம்பாதிக்க வேண்டுமா' ....தந்தையின் வரையறையில்லா கற்பனாசக்திக்கு ஒரு எடுத்துக்காட்டு....அனைவருக்கும் இந்த வாரம் இனிதாகட்டும்...

    ReplyDelete