நல்லா மழை பெய்யுது!
நான்கு நாட்களாக உரோமை நகரில் தொடர் மழை. இங்கு மட்டும் இல்லாமல் வடக்கு இத்தாலியிலும் வாங்கு வாங்கு என வாங்குகிறது.
'உங்க ஊரு மான்சூன் (பருவக்காற்று மழை) போல இருக்கிறது என்று கமெண்ட் அடித்தார் நம்ம ஊர் தெரிந்த ஒரு மேதாவி!'
மழை பெய்தால் நம்ம ஊருல சமாளிக்க முடியாம திணறும் நம்ம ஊர் நிர்வாகம் போல இந்த ஊர் நிர்வாகமும் திணறவே செய்கின்றது.
தொடர்ந்து மழை பெய்யறதல என்ன ஒரு நன்மைன்னா குளிர் ரொம்ப குறைஞ்சிடுச்சு.
இங்க இந்த மழை பெஞ்சுகிட்டு இருக்கிற இந்த நேரத்துல நம்ம ஊர்ல 'கிஸ் ஆஃப் லவ்' (அன்பு முத்தம்) போராட்டம் என உதடுகளை நனைத்துக் கொண்டிருக்கிறார்கள் நம் இளவல்கள். ஒரு பக்கம் ஆதரவு. மற்றொரு பக்கம் எதிர்ப்பு.
'எங்க தனிப்பட்ட வாழ்க்கையில யாரும் தலையிட உரிமையில்லை' என்று அவர்கள் வக்காலத்து வாங்குவதில் எனக்கு மாற்றுக்கருத்து இருக்கவே செய்கிறது.
இந்த நேரத்தில் நம்ம ஊருல நாம இல்லையே என்ற ஆதங்கமும் ஒரு பக்கம் இருக்கிறது.
பப்ளிக்கா முத்தம் கொடுக்கலாமா? வேண்டாமா?
எங்க அப்பா, அம்மா முத்தம் கொடுத்து நான் பார்த்ததேயில்லை. ஏன்! செல்லப் பெயர் சொல்லிக் கூடக் கேட்டதில்லை. விடுமுறையில் நான் என் நண்பனின் வீட்டிற்குச் சென்றபோது 'ஹாய் பேப்ஸ்!' என்று செல்லமாக தன் மகன் முன்னும், என் முன்னும் கூப்பிட்டான். போன தலைமுறைக்கும், இந்தத் தலைமுறைக்கும் உள்ள வளர்ச்சி இதுதான். இந்த வளர்ச்சியை ஒரே நாளில் கடக்க நினைப்பது விபரீதம் தான் உருவாக்கும்.
மேற்கத்திய நாகரீகம் நமக்கு வேண்டும் என நாம் ஏன் அதையும் கடன் வாங்க நினைக்கின்றோம் என்பதுதான் வயிற்றெரிச்சலாக இருக்கிறது. என்னதான் வெளிநாட்டு ஓட்ஸ், பர்கர், பீட்சா சாப்பிட்டாலும், கோக் குடித்தாலும் இன்னும் 16 வயது வந்த பையனை தனி வீடு பார்த்து நாம் குடிஅமர்த்துவதில்லை. 14 வயது நம் மகள் சொல்லும் காதல் கதையைக் கேட்கவும் நாம் தயாராக இல்லை. அப்படியிருக்க இந்த முத்தப் போரட்டம் நியாயமா?
'முத்தமிட்டால் மூக்கும் மூக்கும் உரசுமா' என்று சினிமா வேறு நம்மை உசுப்பேத்திவிடுகிறது.
'இதுதான் சமயம்!' என்று நினைத்து சில கட்சிகள் வரிந்து கட்டிக்கொண்டு தங்கள் டி.ஆர்.பி. ரேட்டிங்கை உயர்த்தப் பார்க்கின்றன.
ஆனால், முத்தமிட்டுப் பசியாற முடியாது என்பதை இந்த இளவல்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

ஒளிக்க வேண்டியதை ஒளித்தும், மறைக்கவேண்டியதை மறைத்தும், எந்த விஷயமுமே இலைமறைகாயாக இருக்கும் வரைதான் அதற்கு மவுசு என்பதையும் தெரிந்து வைத்திருந்த காரணத்தினால் தான் வெற்றிக்கனிகளை எட்டிப்பிடித்தனர் நம் பெரியவர்கள்.ஆனால் இன்றையத் தலைமுறையினருக்கு எல்லாவற்றையுமே வெளிச்சம் போட்டு விளம்பரப்படுத்துவதில் தான் திருப்தி.இன்று இவர்கள் செய்யும் காரியங்களுக்கு இவர்கள் கொடுக்கப்போகும் 'விலை' இவர்கள் பெற்றோர் ஆகும்போதுதான் தெரியும்.இங்கு மௌனமாக சிலர் ஓலமிட்டுக்கொண்டிருந்த விஷயத்தை உரக்கச்சொன்ன 'தமிழனுக்கு' ஒரு சபாஷ்.
ReplyDelete