Saturday, November 8, 2014

அன் இன்சைடு ஜாப்!

'ஏனெனில் எந்நிலையிலும் மனநிறைவோடு இருக்கக் கற்றுக்கொண்டுள்ளேன். எனக்கு வறுமையிலும் வாழத் தெரியும். வளமையிலும் வாழத் தெரியும். வயிறார உண்ணவோ, பட்டினி கிடைக்கவோ, நிறைவோ குறைவோ எதிலும் எந்தச் சூழலிலும் வாழப் பயிற்சி பெற்றிருக்கிறேன். எனக்கு வலுவூட்டுகிறவரின் துணைகொண்டு எதையும் செய்ய எனக்கு ஆற்றல் உண்டு.' (பிலிப்பியர் 4:11-13)

நாம் வாழற வாழ்க்கையில நம்ம மகிழ்ச்சிக்கோ, துன்பத்திற்கோ காரணம் நமக்கு வெளியில் இல்லை. மாறாக, நமக்கு உள்ளே தான் இருக்கின்றது. நம் அனுமதியின்றி நம்மை யாரும் காயப்படுத்தவும் முடியாது, மகிழ்ச்சியாக வைத்திருக்கவும் முடியாது.

இதை இன்னும் ஒருபடி மேலே போய் ஐன்ஸ்டினின் வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால், 'உன் மகிழ்ச்சியை ஒரு நபரின் மேலோ, இடத்தின் மேலோ கட்டாதே! மாறாக, ஒரு சிந்தனையின் மேல் கட்டு. ஏனெனில் நபரும் மாறிவிடும், இடமும் மாறிவிடும். ஆனால் சிந்தனை மாறாது. ஏனெனில் சிந்தனை நம் உள்ளே இருக்கிறது'.

தூய பவுலடியாரும் தன் வாழ்க்கையை 'உயிர்த்த இயேசுவின்' மேல் கட்டிவிடுகின்றார். ஆகையால் தான் வாழ்வின் நிகழ்வுகள் அவருக்குப் பெரிதாகத் தெரிவதில்லை.

இன்பமோ, துன்பமோ எதுவும் தன்னை ஒன்றும் செய்யவிடாமல் தன் சமநிலையைத் தக்கவைக்கத் தெரிந்து கொண்டார் பவுலடியார்.

'எந்நிலையிலும் மனநிறைவு!' - இது இன்று நமக்குத் தேவையான மனநிலை. மிகவும் ஆபத்தான மனநிலை என்னவென்றால் 'எனக்கு இது போதாது!' என்ற மனநிலை. போதாது என்றால் எதுவும் போதாது என்பார்கள். நாம் முன்பு ஒருமுறை குறிப்பிட்டபடி 'உள்ளத்திலே உள்ளதுதான் உலகம் கண்ணா!' என்ற கண்ணதாசன் வார்த்தைகளின் மறுவடிவமே இவை.

இந்த மனநிலை வர நாம் என்ன செய்யவேண்டும்? நமக்குத் தேவையானதெல்லாம் ஒரு அசைக்க முடியாத கன்விக்ஷன். பணம் வருகிறதோ, வரலையோ, நண்பர்கள் நம்மிடம் பேசுகிறார்களோ, பேசவில்லையோ, படிப்பு மூளையில் ஏறுகிறதோ, இல்லையோ, 10க்கு 10 வாங்குகிறோமோ, அல்லது பெயிலாகிறோமோ எதுவும் நம்மை அசைத்துவிடக் கூடாது. இது எல்லாவற்றையும் கடந்த ஒரு 'ஈக்வானிமிட்டி'.

கொஞ்ச மாதங்களுக்கு முன்னால் என் நண்பர்கள் யாருக்காவது ஃபோன் செய்து அவர்கள் அதை எடுக்கவில்லையென்றாலோ, திரும்ப எடுக்கவில்லையென்றாலோ மனசு சஞ்சலமாகவே இருக்கும். இப்பவெல்லாம் அந்தச் சஞ்சலமே இருப்பதில்லை. நண்பர்களின் அனுதாபத்தின் மேலும், நமக்குத் தெரிந்தவர்களின் பாராட்டுக்களின் மேலும் நம் மகிழ்ச்சி என்ற படகைக் கட்டக் கூடாது என்று இப்போது கற்றுக் கொண்டேன்.

'ஹேப்பினஸ் இஸ் அன் இன்சைடு ஜாப்' என்பார் ஜான் பவல்.

அந்த இன்சைடு ஜாப்பை ஒழுங்கா செய்ய வரம் தா இறைவா! என்பதே என் செபம்.


2 comments:

  1. எனக்காகவே அமைந்தது போல்உள்ளது இன்றையப்பதிவு.பல நேரங்களில் நம் மகிழ்ச்சி அடுத்தவரை சார்ந்திருப்பதால் நம் சம்மதமின்றியே நாம் காயப்படுத்தப் படுகிறோம். "மகிழ்ச்சியோ, துன்பமோ நமக்குள்ளேதான் இருக்கிறது".... தூய பவுலடியாரின் வரிகளோடும், தன்அனுபவத்தின் துணையோடும் விஷயங்களைக் கன்விக்‌ஷனோடு எடுத்துரைக்கும் தந்தைக்கு என் பாராட்டுக்கள்!

    ReplyDelete
  2. அன் இன்சைடு ஜாப்! நல்லதொரு பதிவு.இதை படிக்கும் போது என் சகோதரிகளின் சொல்லாடல் ஞாபகத்திற்கு வந்தது.
    கலை,ஒன்னாலே மட்டும் எப்படி சந்தோசமா இருக்க முடியுது.நிறைய பேர் என்ன செய்தாலும் நிறுவனர் பாராட்ட வேண்டும் என்று செய்கிறார்கள் அவர் பாராட்டவில்லை என்றால் சோர்ந்து போய்விடுகிறார்கள் என்று.
    எனக்கு நடிகர் ரஜினியின் நடிப்பு நன்றாக பிடிக்கும் அதனால் நான் கூறுவேன் ஆண்டவன் நடத்துறான்,கலை சிரிக்கிறாள் என்பேன்.கனிக்கு நன்றி.

    ReplyDelete