Sunday, November 16, 2014

ஐந்தைவிட ஒன்று பெரிது இல்லையா?

நாளைய நற்செய்திப் பகுதியில் தாலந்து உவமையை நாம் வாசிக்கின்றோம்.

ஐந்து பெற்றவன் ஐந்து சம்பாதிக்கிறான்.

மூன்று பெற்றவன் மூன்று சம்பாதிக்கிறான்.

ஆனால் ஒன்று பெற்றவன் மேலும் ஒன்றைச் சம்பாதிக்காமல் அதைத் திரும்பக் கொண்டுவந்து கொடுத்து விடுகிறான்.

முதல் இரண்டு பேரைப் பாராட்டி, மூன்றாமவனை வெளியில் தள்ளும் தலைவன் ஒரு முதலாலித்துவ, ஏகாதிபத்திய சிந்தனையாளனாகவே எனக்குத் தோன்றுகிறான்.

ஏன்?

மூன்றாமவன் சம்பாதிக்கவில்லையென்றால் தான் என்ன?

ஐந்து பெற்றவன் தன்னிடம் உள்ளதைக் கொடுத்துக் காப்பாற்றியிருக்கலாமே?

ஏன் எல்லாருமே சம்பாதிக்க வேண்டுமா?

சம்பாத்தியம் அல்லது பணம் ஒன்றுதான் நாம் வாழணுமா, வேண்டாமா என்பதன் அளவுகோலாக இருக்க வேண்டுமா?

தனக்கு பணம் வேண்டாம் என்பதால் அவன் மண்ணில் புதைத்திருக்கலாமே. பணத்திற்குச் செலவிடுவதற்குப் பதில் தன் நேரத்தை தன் குடும்பத்திற்கும், குழந்தைகளுக்கும், தன் சமுதாயத்திற்கும் அவன் செலவழித்திருந்தால் அது குற்றமா?

இன்றைக்கு நாம் எண்களை வைத்தேப் பார்த்துப் பழகிவிட்டோம்.

வங்கியின் இருப்பில் தெரியும் எண்.

மதிப்பெண் சான்றிதழில் இருக்கும் எண்.

என நம் தரத்தையும், மதிப்பையும் வெறும் எண்களை வைத்தே நிர்ணயிக்கப் பழகிவிட்டோம்.

ஐந்தைவிட ஒன்று பெரிது இல்லையா?

ஏன் எப்போதும் ஐந்து மட்டுமே பெரிதாக இருக்க வேண்டும்?

1 comment:

  1. இன்றையப் பகுதியைத் தந்தையின் பார்வையில் எண்களாகவோ,காசாகவோ, வட்டியாகவோ பார்த்தால் நெருடல் தான்.ஆனால் இறைவன் நமக்குக்கொடுத்துள்ள கொடைகளையும்,திறமைகளையும்,தகுதிகளையும் நமது வளர்ச்சிக்குப் பயன்படுத்துவது மட்டுமின்றி அதை நம்மைச் சார்ந்திருப்பவர்களுக்காகவும்,ஒட்டுமொத்த சமுதாயத்திற்காகவும் பயன் படுத்ததலாம் என்பதை நாணயத்தின் மறுபக்கமாகப் பார்த்தால் ஆறுதலான விஷயம். நமக்கு முன்பு கனிகள் இருக்கையில் எதற்காக நம் பார்வையை காய்களை நோக்கித் திருப்ப வேண்டும்? அனைவருக்கும் 'ஞாயிறு' வாழ்த்துக்கள்!

    ReplyDelete