Friday, November 28, 2014

இரக்கம் அப்படின்னா என்ன?

இரக்கம் அப்படின்னா என்னன்னு நினைக்கிறீங்க?

ஒவ்வொரு வெள்ளிக்கிழமை காலை கட்டளைச் செபத்தில் திபா 51 முதலாவது திருப்பாடலாக இருக்கிறது. தாவீது அரசர் ஆண்டவரின் இரக்கத்தை வேண்டுவதே இந்தப் பாடல்.

கடவுள் தான் மனிதர்களுக்கு இரக்கம் காட்ட வேண்டும் என்பதல்ல, மனிதர்களும் மற்றவர்களுக்கு இரக்கம் காட்டலாம். வயதிலோ, ஆற்றலிலோ பெரியவர் தான் சிறியவருக்கு இரக்கம் காட்ட வேண்டும் என்பதல்ல. சிறியவர்களுக்கு பெரியவர்களுக்கு இரக்கம் காட்டலாம்.

'பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன்!' என்று இயேசு தன் எதிராளிகளைப் பார்த்து அடிக்கடிச் சொல்வார் (காண். மத் 9:13). இது ஆக்சுவலா ஒசேயா இறைவாக்கினரோட வார்த்தைகள் (காண். ஒசே 6:6). இதன் அர்த்தம் என்ன?
ஓய்வுநாளில் சூம்பிய கையுடைய ஒருவரை இயேசு குணமாக்கும் போது அவரோட எதிரிகள் முணுமுணுக்கிறார்கள். அதெப்படி ஓய்வு நாளில் இவர் செய்யலாம்? ஓய்வு நாளில் யூதர்கள் எருசலேம் ஆலயம் சென்று பலி செலுத்துவது வழக்கம். பலி செலுத்தச் செல்ல வேண்டுமென்றால் தூய்மையாக இருக்க வேண்டும். இயேசு செய்யும் இந்தச் செயலால் அவரின் தூய்மை குறைகிறது. ஆக, அவர் பலி செலுத்துவதற்கான தகுதியை இழந்து விடுகிறார். ஆனாலும் துணிச்சலாக, போங்கடா நீங்களும் உங்க பலிகளும்! அவற்றைவிட இரக்கம் தான் பெரிது என்கிறார்.

இரக்கத்தைப் பற்றி மகாபாரதம் (பகவத் கீதை) அழகாகச் சொல்கிறது. மகாபாரதத்தில் கண்ணன் அர்ச்சுனனுக்கு உரைக்கும் உரையே கீதை. சரிதானே! ஆம்.

சமநிலையில் இருக்கும் ஒருவரால் தான் இரக்கம் காட்ட முடியும் என்று சொல்கிறது கீதை. சமநிலை என்றால் என்ன? கலக்கம் இல்லாத நிலை. ரெஸ்ட்லெஸ்ஸா இல்லாமல் அமைதியாக இருக்கும் ஒரு நிலை. இந்த நிலை எங்கே இருக்கணும்?

இதயம், மனம், மூளை, உடல் மற்றும் ஆன்மா என இந்த ஐந்தும் சமநிலையில் இருக்க வேண்டும்.

அ. இதயம் அன்பு இல்லாதபோது கலக்கம் அடைகிறது.
ஆ. மனம் மன்னிக்காத போது கலக்கம் அடைகிறது.
இ. மூளை ஞானத்தை இழக்கும் போது கலக்கம் அடைகிறது.
ஈ. உடல் அர்ப்பணத்தை இழக்கும் போது கலக்கம் அடைகிறது.
உ. ஆன்மா நீதியை இழக்கும் போது கலக்கம் அடைகிறது.

இதயம் அன்பையும், மனம் மன்னிப்பையும், மூளை ஞானத்தையும், உடல் அர்ப்பணத்தையும், ஆன்மா நீதியையும் பெற்றிருப்பதே சமநிலை.

இந்தச் சமநிலை இருந்தால் நாமும் ஒருவர் மற்றவருக்கு இரக்கம் காட்ட முடியும். ஆனால் பல நேரங்களில் நம் இதயத்தில், மனத்தில், மூளையில், உடலில், ஆன்மாவில் ஏதோ கலக்கம் இருந்து கொண்டேதான் இருக்கின்றது.

இந்தச் சமநிலையை அடைவதே சமாதிநிலை என்றும் சொல்லலாம். இந்த நிலையில் நாம் முழுமையாக நிர்வாணமாகிவிடுகிறோம். அந்த நிர்வாணாவில் நமக்கு அடுத்திருப்பவர் நம்மில் ஒரு பகுதியாகவே தெரிகிறார். அங்கே இரக்கம் தானாய் நிரம்பி வழிகிறது!

என்ன ரொம்ப சீரியஸாயிட்டேனா...?


1 comment:

  1. " இரக்கம்" ...உச்சரிக்கும்பொழுதே நம் கண்களைக் கசியவைக்கும் ஒரு சொல்."பலியை அல்ல..இரக்கத்தையே விரும்புகிறேன்" என்ற இயேசுவின் கூற்றிலிருந்து இவ்வார்த்தையின் மேன்மை விளங்குகிறது.பல நேரங்களில் நாம் இயலாமையிலிருப்போருக்கு சில சில்லறைகளைக் கொடுப்பதன் மூலமோ, இல்லை சில பொருட்களைக் கொடுப்பதன் மூலமோ நாம் பெரிய ' இரக்கத்தின் ஊற்றுக்கள்' என்று நம்மை நினைத்துக்கொள்கிறோம்.ஆனால் " இதயம் அன்பையும்,மனம் மன்னிப்பையும்,மூளை ஞானத்தையும்,உடல் அர்ப்பணத்தையும்,ஆன்மா நீதியையும் கொண்ட சமநிலையில் இருப்பவர்களால்தான் இரக்கம் காட்ட முடியும்" என்று கூறுகிறது கீதை.திருவருகைக் காலத்தைத் தொடங்க இருக்கும் நமக்கு தக்க காலத்தில் விதைக்கப்பட்ட ்விதையாக எண்ணி இரக்கத்தை நடைமுறைப்படுத்துவோம்; இயேசுவின் இரக்கத்தைப் பெறுவோம்.காலத்துக்கேற்றக் கருத்தைக் கொடுத்த தந்தைக்கு நன்றிகள்!

    ReplyDelete